மீனவா்கள் கடலில் மீன்பிடிக்கும் காலம்வரை ரூ.8ஆயிரம் வழங்கப்படும் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும் இந்த மாதம் 31-ம் தேதிக்குள் செயற்கை பவளப்பாறைகள் அமைக்கப்படும்.

Continues below advertisement

 

Continues below advertisement

தமிழகத்தில் மீன்வளத்தை பெருக்கும் பொருட்டு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் கடலோர மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய 6 மாவட்டங்களில், 49 மீனவ கிராமங்களில் மொத்தம் 200 இடங்களில் செயற்கை பவளப்பாறைகள் நிறுவ, தமிழ்நாடு அரசு ரூ.62 கோடி ஒதுக்கியது.


தூத்துக்குடி மாவட்டத்தில் சிங்கித்துறை, கொம்புத்துறை, ஆலந்தலை, புன்னக்காயல் மற்றும் மணப்பாடு ஆகிய 5 மீனவக் கிராமங்களில் 36 இடங்களில் தலா 190 செயற்கைப் பவளப்பாறைகள் ரூ.11.30 கோடி அமைக்கப்பட உள்ளது. இதில், முதற்கட்டமாக தருவைகுளத்திலிருந்து கடல்மார்க்கமாக சிங்கித்துறை மீனவக் கிராமத்துக்கு செயற்கைப் பவளப்பாறைகளை கொண்டுசெல்லும் பணி தொடங்கியது. தருவைகுளம் மீன் இறங்குதளத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் தலைமை வகித்தார். சட்டபேரவை உறுப்பினர் எம்.சி.சண்முகையா முன்னிலை வகித்தார்.

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்து பேசுகையில், தமிழகத்தில் மீன்பிடி தடைக்கால நிவாரணம் பெறும் வயது வரம்பை அகற்றிவிட்டு, மீனவா்கள் கடலில் மீன்பிடிக்கும் காலம்வரை ரூ.8ஆயிரம் வழங்கப்படும். மீனவா்களுக்கு எந்த குறையும் இல்லாத அளவுக்கு திட்டங்கள் செயல்படுத்தப்படும். மீன்வளத்தை அதிகரிக்கும் வகையில், மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை மூலம் கடலோர மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய 6 மாவட்டங்களைச் சோ்ந்த 49 மீனவ கிராமங்களின் 200 இடங்களில் செயற்கைப் பவளப்பாறைகள் நிறுவ ரூ.62 கோடி திட்ட மதிப்பிட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிங்கித்துறை, கொம்புத்துறை, ஆலந்தலை, புன்னக்காயல் மற்றும் மணப்பாடு ஆகிய 5 மீனவக் கிராமங்களில் 36 இடங்களில் தலா 190 செயற்கைப் பவளப்பாறைகள் ரூ.11.30 கோடி அமைக்கும் பணி நடைபெறவுள்ளது. முதல்கட்டமாக சிங்கித்துறை கிராமத்தில் 6 இடங்களில் செயற்கைப் பவளப்பாறை அமைக்கப்படவுள்ளது. தொடா்ந்து சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும் வரும் 31ஆம் தேதிக்குள் செயற்கை பவளப்பாறைகள் அமைக்கப்படும். இந்த திட்டத்தால் பளைப்பாறைகளில் மீன்குஞ்சுகள் அதிக அளவில் உற்பத்தியாகி, கடல் மீன் உற்பத்தி அதிகரிக்கும் மீனவா்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்றாா்.

இதில், மீன்வளத்துறை தலைமைப் பொறியாளர் வீ.ராஜூ, உதவி இயக்குநர் கு.அ.புஷ்ரா ஷப்னம், உதவிப் பொறியாளர் தயாநிதி, ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ரமேஷ் மற்றும் அரசு அலுவலர்கள், மீனவர்கள் கலந்து கொண்டனர்.

Continues below advertisement