மேலும் அறிய

தூத்துக்குடி-கன்னியாகுமரி 4 வழிச்சாலை: புதிய திட்டம்! நிலம் கையகப்படுத்துதல் அறிவிப்பு, உங்கள் கருத்து முக்கியம்!

திருநெல்வேலி மாவட்டத்தில் 11 கிராமங்கள் என மொத்தம் சுமார் 106.9 கி.மீ. தொலைவில் புதிதாக 4 வழிச்சாலை திட்டம் அமைகிறது.

நாடு முழுவதும் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலைகள் 16 வழி, 8 வழி மற்றும் 4 வழிச்சாலைகளாக மாற்றிடும் பணி நடந்து கொண்டிருக்கிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் தொடங்கி தெற்கே துறைமுக நகரமான தூத்துக்குடி வரையில் 690 கி.மீ. தூரம் (NH-32) 4 வழிச்சாலை திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது இத்திட்டம் நீட்டிக்கப்பட்டு தூத்துக்குடியில் தொடங்கி கோவில் நகரமான திருச்செந்தூர் அருகே கடந்து கிழக்கு எல்லையான கன்னியாகுமரிக்கு புதிய 4 வழிச்சாலைதிட்டம் அமைக்கப்பட உள்ளது.

தூத்துக்குடி-கன்னியாகுமரி 4 வழிச்சாலை: புதிய திட்டம்! நிலம் கையகப்படுத்துதல் அறிவிப்பு, உங்கள் கருத்து முக்கியம்!

இத்திட்டம் தூத்துக்குடி -திருச்செந்தூர்-கன்னியாகுமரி (NH-32) TTK சாலை என கூறப்படுகிறது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் 25 கிராமங்கள், திருநெல்வேலி மாவட்டத்தில் 11 கிராமங்கள் என மொத்தம் சுமார் 106.9 கி.மீ. தொலைவில் புதிதாக 4 வழிச்சாலை திட்டம் அமைகிறது. இதற்காக 853.09 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் புதுக்கோட்டை அருகில் முடிவைத்தானேந்தல் கிராமத்தில் தொடங்கி கட்டாலங்குளம், நட்டாத்தி, சிறுத்தொண்டநல்லூர், ஆறுமுகமங்கலம், கொட்டாரக்குறிச்சி, வாழவல்லான், சுகந்தலை, சேதுக்குவாய்த்தான். அங்கமங்கலம், நல்லூர், ஆறுமுகநேரி, அம்மன்புரம், மூலக்கரை, நத்தகுளம், கந்தசாமிபுரம், மேல திருச்செந்தூர், கீழ திருச்செந்தூர், குலசை, உடன்குடி, ஆதியாக்குறிச்சி, பள்ளக்குறிச்சி, படுக்கப்பத்து, திருப்பணி புத்தன்தருவை, நெல்லை மாவட்டத்தின் குட்டம், உவரி, கரைச்சுத்து புதூர், கூடங்குளம், இருக்கன்துறை 1,2, லெவிஞ்சிபுரம் வழியாக அஞ்சுகிராமத்திற்கு சற்று முன்னதாக கருங்குளத்தில் நெல்லை - கன்னியாகுமரி 4 வழிச்சாலை திட்டத்தில் இணைக்கப்பட உள்ளது.

இத்திட்டத்தில் தற்போது முதற்கட்டமாக நெடுஞ்சாலைத்துறை சாலை அமைக்கப்படும் வழித்தடம் குறித்து வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து 21 நாட்களுக்குள் பொது மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு நிலம் கையகப்படுத்துவதற்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டு அதனை தொடர்ந்து வழித்தட கற்கள் பதிக்கப்பட உள்ளது. இப்பணிகள் நிறைவடைந்த பிறகு சாலை அமைக்கும் பணி தொடங்க உள்ளது. இத்திட்டத்தால் பயண நேரம் மற்றும் தூரம் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தூத்துக்குடி-கன்னியாகுமரி 4 வழிச்சாலை: புதிய திட்டம்! நிலம் கையகப்படுத்துதல் அறிவிப்பு, உங்கள் கருத்து முக்கியம்!

இந்த புதிய சாலை, குலசேகரன்பட்டினம் விண்வெளி பூங்கா, உடன்குடி அனல் மின் நிலையம், கூடங்குளம் அணுமின் நிலையம் போன்ற முக்கிய வளர்ச்சி திட்டங்களுக்கு பயனளிக்கும். மேலும், இந்த வழித்தடத்தில் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ளது. நிலம் கையகப்படுத்துவதற்கு சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். அதன் அடிப்படையில் திட்டச் செலவு மதிப்பிடப்படும்.

கன்னியாகுமரியை தூத்துக்குடியுடன் திருச்செந்தூர் வழியாக இணைக்கும் இந்த புதிய சாலை, ஆன்மீக சுற்றுலாப் பயணிகளுக்கு பயண நேரத்தைக் குறைக்கும். இந்த வழித்தடத்தில் பல புகழ்பெற்ற கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் உள்ளன. சுமார் ஒன்றரை ஆண்டுகள் நிலம் கையகப்படுத்துவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். அதன் அடிப்படையில் திட்டச் செலவு மதிப்பிடப்படும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

TVK Vijay: அவ்வளவு ஒர்த் இல்ல.. சங்கீதாவை சொன்னாரா விஜய்? - உண்மையில் நடந்தது என்ன?
TVK Vijay: அவ்வளவு ஒர்த் இல்ல.. சங்கீதாவை சொன்னாரா விஜய்? - உண்மையில் நடந்தது என்ன?
Seeman: எங்க தான் பணத்தை அச்சடிப்பாங்கன்னு தெரியல.. கடுமையாக சாடிய சீமான்!
Seeman: எங்க தான் பணத்தை அச்சடிப்பாங்கன்னு தெரியல.. கடுமையாக சாடிய சீமான்!
OPS: நேத்து வந்த ஓ.பி.எஸ்.க்கு MLA சீட்டா? மன உளைச்சலில் தேனி மாவட்ட திமுக!
OPS: நேத்து வந்த ஓ.பி.எஸ்.க்கு MLA சீட்டா? மன உளைச்சலில் தேனி மாவட்ட திமுக!
Governor Salary: ஒரே நபர்.. மூன்று பதவிகள்! ஆளுநர்களின் சம்பள ரகசியம் இதுதான்
Governor Salary: ஒரே நபர்.. மூன்று பதவிகள்! ஆளுநர்களின் சம்பள ரகசியம் இதுதான்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Udhayanidhi Stalin | ’’ஐயா உதவி பண்ணுங்க’’காலில் விழுந்த மூதாட்டி பதறிய உதயநிதி | Tenkasi
Bangalore Dog Issue | சிறுநீர் கழித்த வளர்ப்பு நாய்வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் சரமாரி தாக்குதல்!
Ameer slams Vijay | ’’மனைவி மகளை விரட்டிட்டுமகளிர் தின விழா கேக்குதா?’’விஜய்யை கிழித்த அமீர் | TVK
Kiruthiga Udhayanidhi | ”பிரச்சனைல மாட்டிக்காதீங்க”விஜய்க்கு மறைமுக ADVICE?கிருத்திகா உதயநிதி அதிரடி
Vijay Sangeetha Divorce | PRESS MEET-க்கு ரெடி!அதிரடி காட்டும் சங்கீதா இறங்கி வந்த விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: அவ்வளவு ஒர்த் இல்ல.. சங்கீதாவை சொன்னாரா விஜய்? - உண்மையில் நடந்தது என்ன?
TVK Vijay: அவ்வளவு ஒர்த் இல்ல.. சங்கீதாவை சொன்னாரா விஜய்? - உண்மையில் நடந்தது என்ன?
Seeman: எங்க தான் பணத்தை அச்சடிப்பாங்கன்னு தெரியல.. கடுமையாக சாடிய சீமான்!
Seeman: எங்க தான் பணத்தை அச்சடிப்பாங்கன்னு தெரியல.. கடுமையாக சாடிய சீமான்!
OPS: நேத்து வந்த ஓ.பி.எஸ்.க்கு MLA சீட்டா? மன உளைச்சலில் தேனி மாவட்ட திமுக!
OPS: நேத்து வந்த ஓ.பி.எஸ்.க்கு MLA சீட்டா? மன உளைச்சலில் தேனி மாவட்ட திமுக!
Governor Salary: ஒரே நபர்.. மூன்று பதவிகள்! ஆளுநர்களின் சம்பள ரகசியம் இதுதான்
Governor Salary: ஒரே நபர்.. மூன்று பதவிகள்! ஆளுநர்களின் சம்பள ரகசியம் இதுதான்
TVK Vijay: ‘எனக்கு வருத்தம் எல்லாம் கிடையாது” - மனைவி சங்கீதா தொடுத்த வழக்கு... முதல்முறையாக வாய் திறந்த விஜய்
‘எனக்கு வருத்தம் எல்லாம் கிடையாது” - மனைவி சங்கீதா தொடுத்த வழக்கு... முதல்முறையாக வாய் திறந்த விஜய்
Tata Offers: 3.30 லட்சம் ரூபாய் தள்ளுபடி.. டாடா கார்களுக்கு மார்ச் மாத தள்ளுபடி - எந்த காருக்குப்பா?
Tata Offers: 3.30 லட்சம் ரூபாய் தள்ளுபடி.. டாடா கார்களுக்கு மார்ச் மாத தள்ளுபடி - எந்த காருக்குப்பா?
TVK Vijay: அண்ணன் சீர் திட்டத்தை அறிவித்த விஜய்.. ஆனந்த கண்ணீர் வடித்த பெண்கள் - வீடியோவை பாருங்க!
TVK Vijay: அண்ணன் சீர் திட்டத்தை அறிவித்த விஜய்.. ஆனந்த கண்ணீர் வடித்த பெண்கள் - வீடியோவை பாருங்க!
விஜய் அதிரடி அறிவிப்பு! குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2500, இலவச சிலிண்டர்கள் & மேலும் பல!
விஜய் அதிரடி அறிவிப்பு! குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2500, இலவச சிலிண்டர்கள் & மேலும் பல!
Embed widget