தூத்துக்குடியில் வடமாநில தொழிலாளி ஒருவர் கொடூரமாக தாக்கிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள அரசு மதுபானக் கடை பகுதியில் ஏற்பட்ட வாய்த்தகராறு, சில நிமிடங்களிலேயே கொடூர கொலை சம்பவமாக மாறியுள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Continues below advertisement

கொலை சம்பவம்

Continues below advertisement

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ் (35), தூத்துக்குடியில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றி வந்த நிலையில், மதுபானக் கடை அருகே நான்கு பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். தூத்துக்குடி வின் பாஸ்ட் கார் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் பீகரை சேர்ந்த வட மாநில தொழிலாளி ராஜேஷ் (35) . இவரை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 3வது மைல் பகுதியில் அமைந்துள்ள அரசு மதுபான கடை அருகில் வைத்து 3 பேர் கொண்ட கும்பல் மது போதையில் கட்டையால் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள சூழலில் தென்பாகம் போலீசார் இந்த கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலையின் பின்னனி

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 3வது மைல் பகுதியில் அமைந்துள்ள அரசு மதுபான கடையில் அருகில் ஒருவர் இறந்து கிடப்பதாக மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து அப்பகுதிக்கு விரைந்து வந்தனர் தென்பாகம் காவல் ஆய்வாளர் திருமுருகன் தலைமையிலான போலீசார். காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில், தூத்துக்குடி வின் பாஸ்ட் கார் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் பீகார் மாநிலத்தைச் சார்ந்த தொழிலாளி ராஜேஷ் (35) என்பவர்தான் இறந்து கிடப்பவர் என தெரியவந்துள்ளது.

போலீசார் விசாரணை

கொலை குறித்த காரணம் குறித்து விசாரிக்கையில் மது அருந்தும்போது,அவருக்கும் அங்கே ஏற்கனவே மது அருந்தி கொண்டிருந்த மூன்று பேர் கொண்ட கும்பலுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து அரசு மதுபான கடையை விட்டு வெளியே வந்த வடமாநில தொழிலாளி ராஜேஷை 4 பேர் கொண்ட கும்பல் அரசு மதுபான கடை அருகே உள்ள பகுதியில் வைத்து அங்கு கிடந்த கட்டையால் எடுத்து தலையில் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். தூத்துக்குடியைச் சேர்ந்த சிவா, ஜேம்ஸ், பூமிநாதன், கசாலி ஆகிய நான்குபேரை தென்பாகம் காவல்துறை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.