கரூர் மாவட்டத்தில் வாரம்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. கடந்தாண்டு முதல் கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் கொண்டு வரும்  மனுக்களை மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரத்தியேக மனு பெட்டியில் போட மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது. அதுமட்டுமின்றி மாவட்ட ஆட்சித்தலைவராக பிரபுசங்கர் பொறுப்பேற்ற உடன் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு வாரம்தோறும் திங்கட்கிழமைகளில் மக்களிடம் குறைகள் கேட்கப்படுகிறது




இந்நிலையில், இன்றைய தினம் மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் பல்வேறு பொதுமக்கள் கோரிக்கைகளை  மனுவாக எழுதி பிரத்தியேக மனு பெட்டியில் செலுத்தி விட்டு சென்றவண்ணம் இருந்தனர். அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கன்று குட்டியுடன் வந்திருந்த குடும்பத்தினரின் மீது அனைவரின் கவனமும் சென்றது. அரவக்குறிச்சியை சேர்ந்த அக்குடும்பத்தினர் நிலப் பிரச்சனையில் தங்களது கன்றுக்குட்டியை அடித்து காயப்படுத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளிக்க வந்தனர்.  




அனைத்து செய்திகளிலும் இடையே கீழ்கண்ட வரிகளை Copy செய்து பதிவிட வேண்டும். Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X


கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அருகேயுள்ள காசிபாளையத்தை சேர்ந்தவர் நல்லசாமி இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் கருப்பசாமி என்பவருக்கும் நிலப்பிரச்னை தொடர்பான பிரச்சினை இருந்து வந்துள்ளது. நல்லசாமி இது தொடர்பாக வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்து நில அளவை செய்து பாதையை ஒதுக்கீடு செய்யுமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.




அரவக்குறிச்சி வட்டாட்சியரும் நில அளவையரும், சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து நில அளவை செய்து இருதரப்பிற்கும் இடத்தை ஒதுக்கீடு செய்தனர். ஆனால் கருப்பசாமி அரசு அதிகாரிகள் அளவீடு செய்த இடத்திலிருந்து ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் இருந்துள்ளார்.


இந்நிலையில், நல்லசாமியின் கன்றுக்குட்டி கருப்புசாமி இடத்திற்கு சென்றதாக கூறி கருப்புசாமி அந்த கன்று குட்டியை காலில் அடித்து காயப்படுத்தியுள்ளனர். இது குறித்த புகார் அரவக்குறிச்சி காவல் நிலைத்தில் நல்லசாமி அளித்துள்ளார். காவல் நிலையத்தில் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால் இன்று காயம்பட்ட கன்றுக்குட்டியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து அதிகாரியிடம் மனு ஒன்றை அளித்தார்.



அந்த மனுவில், கன்றுகுட்டியை தாக்கிய நபர்கள் மீது நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் அரசு அதிகாரிகள் அளவீடு செய்து அளித்த நிலத்தில் ஆக்கிரமிப்பை அகற்றாத கருப்புசாமி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அந்த மனுவில் தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக அங்கு பணியில் இருந்த போலீசார் மனு குறித்து விளக்கம் கேட்ட பிறகு இந்த தகவலை மாவட்ட ஆட்சித் தலைவரிடமும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிமும் தகவல் தெரிவித்து உரிய விசாரணை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் போராட்டத்தை கைவிட்டு மனுவை வழங்கி விட்டு சென்றனர்.