மேலும் அறிய

உங்க பருப்பு இங்க வேகாது... மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்த துணை முதல்வர் உதயநிதி

அரசியல் ஒரு என்டர்டெயின்மென்ட் என்று நினைத்துக்கொண்டுள்ளனர். அரசியல் என்பது மக்கள் பணி; அது ஒரு கமிட்மெண்ட், டெடிகேஷன் என்பதை தி.மு.க.வினர் காட்ட வேண்டும்.

தஞ்சாவூர்: பிரதமர் மோடி - அமித்ஷா பருப்பு வட மாநிலங்களில் வேகலாம். தமிழ்நாட்டில் வேகாது. இந்த தேர்தல் தமிழ்நாட்டிற்கும், டெல்லிக்கும் இடையே சமூக நீதிக்கும், சமூக அநீதிக்கும், தமிழ் மொழிக்கும் - இந்தி திணிப்புக்கும் இடையே நடக்கும் தேர்தல் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே திருமலைசமுத்திரத்தில் திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு இளைஞரணி செயலாளரும்,  துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதிகளை சேர்ந்த திமுக இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த  கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

தி.மு.க. இளைஞரணியில் 5 லட்சம் பேர் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். 50 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் எந்த அரசியல் கட்சி சார்பு அணிக்கும் இப்படிப் வலிமையான கட்டமைப்பு கிடையாது. இன்று பல கட்சிகள் பூத் கமிட்டி அமைக்க ஆள் கிடைக்காமல் திண்டாடி வருகின்றன. 

திராவிட மாடல் அரசின் திட்டங்களை ஒட்டுமொத்த இந்தியாவும் திரும்பிப் பார்த்து பாராட்டி வருகிறது. மீண்டும் தமிழகத்தில் அமையப் போவது தி.மு.க. 2.0 அரசு தான். அப்போது மகளிருக்கான உரிமைத்தொகையை ஆயிரத்தில் இருந்து 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்குவேன் என முதல்வர் ஸ்டாலின் உறுதிமொழி அளித்துள்ளார். இதனால், ஒட்டுமொத்த சங்கி கூட்டமும், அடிமை கூட்டமும் கதறிக் கொண்டிருக்கிறது.

தமிழக சட்டசபை தேர்தல் வரவுள்ளதால் அடிக்கடி சங்கி கூட்டம் வரும். மோடி, அமித்ஷா அடிக்கடி வருவார்கள். ஆனால், தமிழகத்திற்கு தேவையான நிதி மட்டும் வராது. உத்தரபிரதேசம், பீகார் போன்ற வட மாநிலங்களில் மோடி, அமித்ஷாவின் பருப்பு வேகலாம். ஆனால் தமிழகத்தில், ஒருபோதும் வேகாது. பா.ஜ.க - அ.தி.மு.க. உடன் கூட்டணி வைத்துள்ள தலைவர்களை, யோசித்து பாருங்கள். 

பழனிசாமியுடன் கூட்டணியில் இருப்பதற்கு தூக்கில் தொங்கி விடலாம் என ஒருவர் கூறினார். பழனிசாமிக்கு எந்த அருகதையும் கிடையாது. கவுன்சிலராக வருவதற்குக் கூட தகுதி கிடையாது, “டயர் நக்கி” என ஒருவர் கூறினார். இந்த நிலையில் தமிழகத்திற்கு, டபுள் இன்ஜின் சர்க்கார் வேண்டும் என பிரதமர் மோடி கூறுகிறார்.  பிரதமர் மோடி, உங்கள் கூட்டணி வண்டியை பாருங்கள், கூட்டணியில் உள்ள அனைவரும் பஞ்சரான டயர்கள். 

உங்களுடைய பஞ்சரான டயர்களும், ஃபங்ஷன் ஆகாத டப்பா இன்ஜினும் தமிழ்நாட்டில் என்றைக்கும் ஓடவே ஓடாது. இன்னொரு பக்கம் யாருக்கும் எந்த பயனும் இல்லாமல் ஒரு கோஷ்டி சுற்றிக்கொண்டிருக்கிறது. கொள்கை, லட்சியம், கோட்பாடு எதுவும் இல்லாமலும் தெரியாமலும் சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள். அரசியல் ஒரு என்டர்டெயின்மென்ட் என்று நினைத்துக்கொண்டுள்ளனர். அரசியல் என்பது மக்கள் பணி; அது ஒரு கமிட்மெண்ட், டெடிகேஷன் என்பதை தி.மு.க.வினர் காட்ட வேண்டும். கமிட்மெண்ட், டெடிகேஷன் இல்லாமல் யாராலும் சாதிக்க முடியாது. பாசிசத்தையும் அடிமைத்தனத்தையும் விரட்ட வேண்டும்.

டெல்லிக்கும் தமிழகத்திற்கும் நடக்கும் போர் தான் தமிழக சட்டமன்ற தேர்தல். சமூக நீதிக்கும் - சமூக அநீதிக்கும் இடையே நடக்கும் தேர்தல். தமிழுக்கும் - இந்தி திணிப்புக்கும் இடையே நடக்கு தேர்தல். இந்த போரில் முன்கள பணியாளர்கள் இளைஞரணி தான். தமிழகம் என்றும் டெல்லிக்கு தலைகுனியாது என்பதை நிரூபிக்க வேண்டும். நம்மிடம் சாதனையும் வரலாறும் உள்ளது.

அரசியல் அறிவே இல்லாத அடிமைகளும் அட்டைகளும் புலம்பினாலும், வெற்றி பெறுவது உதயசூரியன் சின்னம். 200 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

தஞ்சையில் வணிகர் சங்க கூட்டமைப்பு சார்பில் மத நல்லிணக்க இப்தார்: மேயர் சண்.ராமநாதன் பங்கேற்பு
தஞ்சையில் வணிகர் சங்க கூட்டமைப்பு சார்பில் மத நல்லிணக்க இப்தார்: மேயர் சண்.ராமநாதன் பங்கேற்பு
மூளைச்சாவு அடைந்த வாலிபரின் இதயம், 53 வயது நோயாளிக்கு பொருத்தி மறுவாழ்வு: அபெக்ஸ் மருத்துவமனை அசத்தல் சாதனை!
மூளைச்சாவு அடைந்த வாலிபரின் இதயம், 53 வயது நோயாளிக்கு பொருத்தி மறுவாழ்வு: அபெக்ஸ் மருத்துவமனை அசத்தல் சாதனை!
தஞ்சாவூரில் கொந்தளிப்பு! பாஜகவை கண்டித்து திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூரில் கொந்தளிப்பு! பாஜகவை கண்டித்து திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்
தனியார் மருத்துவமனை டாக்டரை ஏமாற்றி ரூ.6.90 லட்சம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
தனியார் மருத்துவமனை டாக்டரை ஏமாற்றி ரூ.6.90 லட்சம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
Advertisement
West Bengal | Phase 1

294 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

294 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Phase 1

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Phase 1

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Phase 1

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Phase 1

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | MONDAY

Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand vs Aadhav Arjuna | கைகோர்த்த ஆதவ், ஜான் ! தலைவலியில் ஆனந்த்! ஓரங்கட்டும் விஜய்?
Vilathikulam | விளாத்திகுளம் மாணவி கொலை! 27 வயது இளைஞர் மீது சந்தேகம்! குற்றவாளியை நெருங்கிய POLICE?
TVK BJP Alliance | விஜய் பாஜகவுடன் கூட்டணி? ராமதாஸ் உடன் பேச்சுவார்த்தையா? உண்மைகளை உடைத்த தவெக
Thoppai Ganesan Encounter | தேர்தல் நேரத்தில் ENCOUNTER!யார் இந்த தொப்பை கணேசன்?பரபரக்கும் சென்னை
Vijay CBI Investigation | 7 மணிநேர CBI விசாரணை HAPPY-ஆ வெளியே வந்த விஜய்! பாஜக-வுக்கு SUCCESSஆ ஏமாற்றமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: சென்னையால் வந்த வினை..! விஜயை டேக் கேர் செய்யும் ஆதவ் அர்ஜுனா? வெற்றிக்காக போராடும் ஆனந்த்?
TVK Vijay: சென்னையால் வந்த வினை..! விஜயை டேக் கேர் செய்யும் ஆதவ் அர்ஜுனா? வெற்றிக்காக போராடும் ஆனந்த்?
PAK AFG Clash: 400 பேரை கொன்று குவித்த பாகிஸ்தான் - மருத்துவமனை மீது கொடூர தாக்குதல் - நிலைகுலைந்த காபூல்
PAK AFG Clash: 400 பேரை கொன்று குவித்த பாகிஸ்தான் - மருத்துவமனை மீது கொடூர தாக்குதல் - நிலைகுலைந்த காபூல்
Rajinikanth: விஜய்க்கு எதிராக ரஜினியை களமிறக்கும் இபிஎஸ் & கோ.. அமைதி காக்கும் திமுக!
Rajinikanth: விஜய்க்கு எதிராக ரஜினியை களமிறக்கும் இபிஎஸ் & கோ.. அமைதி காக்கும் திமுக!
TN Election: அதிர்ச்சி அளித்த சிட்டிங் எம்.எல்.ஏக்களின் மரணம் - மிரட்டிய ஈரோடு கிழக்கு, 5 ஆண்டுகளில் எத்தனை பேர்?
TN Election: அதிர்ச்சி அளித்த சிட்டிங் எம்.எல்.ஏக்களின் மரணம் - மிரட்டிய ஈரோடு கிழக்கு, 5 ஆண்டுகளில் எத்தனை பேர்?
Parthiban Controversy: தெலுங்கில் சாதி பெருமை.. தமிழை மறக்க மாட்டேன் என பார்த்திபன் சத்தியம்!
Parthiban Controversy: தெலுங்கில் சாதி பெருமை.. தமிழை மறக்க மாட்டேன் என பார்த்திபன் சத்தியம்!
Puducherry Election: 21ம் நூற்றாண்டில் எட்டாக்கனியாக முதலமைச்சர் பதவி! பாண்டிச்சேரியில் திமுக பரிதாபம்!
Puducherry Election: 21ம் நூற்றாண்டில் எட்டாக்கனியாக முதலமைச்சர் பதவி! பாண்டிச்சேரியில் திமுக பரிதாபம்!
Iran Dancing Missile: ஈரானின் ‘டான்ஸிங் ரோஸ்.!‘; முதல் முறையாக செஜ்ஜில் ஏவுகணையை வீசி தாக்குதல்; சிதறிய இஸ்ரேல்
ஈரானின் ‘டான்ஸிங் ரோஸ்.!‘; முதல் முறையாக செஜ்ஜில் ஏவுகணையை வீசி தாக்குதல்; சிதறிய இஸ்ரேல்
TANCET 2026: டான்செட், சீட்டா.. முதுநிலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பு- தொடங்கிய விண்ணப்பப் பதிவு!
TANCET 2026: டான்செட், சீட்டா.. முதுநிலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பு- தொடங்கிய விண்ணப்பப் பதிவு!
Embed widget