மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்களுக்கு மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. மாயூரம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சங்கத் தலைவர் ஜெகதராஜ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர்கள் வி.சிவஞானம், ஆர்.எஸ்.பி.சௌந்தர் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மேலும், இவ்விழாவில், மயிலாடுதுறை நீதிமன்றத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கறிஞர்களாக பணியாற்றி வரும் 18 மூத்த வழக்கறிஞர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பின்னர் ஏற்புரை வழங்கி உயர்நீதிமன்ற நீதியரசர் வி.சிவஞானம் பேசுகையில், வழக்காடும்போது உண்மையான சாட்சிகள் இருவிதமான விளைவுகளை தோற்றுவிக்கும். இளம் வழக்கறிஞர்கள் பொறுமையையும், நிதானத்தையும் கடைப்பிடிக்க வேண்டும். செல்வ செழிப்பும் உயர்ந்த அறிவும் உடையவர்கள் தவறான நடத்தையினால் தலைகுனியும் நிகழ்வு நடைபெறுகிறது. இளம் வழக்கறிஞர்கள் திறமைகளையும் வளர்த்துக் கொள்வதில் மட்டுமின்றி, ஒழுக்கத்தை கடைப்பிடித்து நீதியை நிலை நாட்டுவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
இதில், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்ட நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற அலுவலர்கள் கலந்து கொண்டனர். மயிலாடுதுறை புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், மயிலாடுதுறை நீதிமன்றத்தை முழு அதிகாரத்துடன் கூடிய முதன்மை மாவட்ட நீதிமன்றமாக அமைத்துத்தர நீதியரசர்களிடம் வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர்.
செஞ்சி அருகே மணல் கொள்ளை குறித்து சுவரொட்டி ஒட்டிய விவகாரம் - ஊராட்சி மன்ற தலைவர் கைது
சீர்காழி அருகே கனமழையின் போது வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்த சிறுமி வாய்காலில் தவறி விழுந்து உயிரிழப்பு - தமிழக அரசு அறிவித்த இரண்டு லட்சம் நிவாரணத்தை சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே எருக்கூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராமு - சங்கீதா தம்பதியினர். இவர்களது 5 வயது மகள் அக்க்ஷிதா அங்குள்ள அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 13ம் தேதி தமிழகத்திலேயே அதிகப்படியாக ஒரே நாளில் 44 சென்டிமீட்டர் கனமழையானது சீர்காழி பகுதிகளில் பதிவானது இந்த கனமழையின் போது அக்க்ஷிதா வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த போது வீட்டின் வாசலில் உள்ள வடிகால் வாய்க்காலில் தவறி விழுந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து குழந்தையை காணாமல் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில் வீட்டின் அருகே உள்ள கதவணையில் குழந்தையின் உடல் இறந்த நிலையில் மீட்கபட்டது. இந்த செய்தியினை அறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இறந்த குழந்தைக்கு இரங்கல் தெரிவித்து, அவரது குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் தொகை அறிவித்தார். அந்த காசோலையை இன்று சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் மற்றும் வட்டாச்சியர் செந்தில்குமார் அந்த குடும்பத்தினர் வீட்டுக்கு நேரில் சென்று வழங்கி ஆறுதல் தெரிவித்தனர்.