எங்கள் உயிரை கூட விடுவோம்...மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம்: நலிவுற்ற விவசாயிகள் சங்கம் திட்டவட்டம்
அனைத்து விவசாய கடன்களையும் பயிர் கடன்களையும் நகை கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். மேட்டூர் அணை வருகின்ற 12-ம் தேதி வழக்கம் ோல் திறக்க வேண்டும்.

தஞ்சாவூா்: மேகதாதுவில் அணைக்கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்து தஞ்சாவூரில் தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தெற்கு மாவட்ட தலைவர் மகேஸ்வரன் தலைமை வகித்தார். மாநில செய்தி தொடர்பாளர் ஜெய்னுதீன் வரவேற்றார் .
இந்த ஆர்ப்பாட்டத்தை மாநில தலைவர் முகமது இப்ராஹிம் தொடங்கி வைத்து கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். தொடர்ந்து மாநில பொருளாளர் கிருஷ்ணன், மாநிலத் துணைத் தலைவர் ஜெயக்குமார் ஆகியோர் உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் காவிரி குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் கூட்டுறவு வங்கியில் விவசாயிகளின் பயிர், நகைக்கடன் அனைத்தையும் தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் , ஜூன் 12-ல் மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்க வேண்டும், தஞ்சை மாவட்டத்தில் அனைத்து வட்டங்களில் உள்ள பாசன, ஏரி, குளங்கள், வாய்க்கால்களை தூர்வார வேண்டும்.
திருவையாறு, பாபநாசம் பகுதியில் வாழை ஆராய்ச்சி நிலையங்கள் உருவாக்க வேண்டும், உர விலையை மத்திய அரசு உடனே குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் அய்யம்பேட்டை நகர தலைவர் ஜெய்லாலுதீன், அய்யம்பேட்டை நகர செயலாளர் சேக் தாவூத், அரியலூர் ஒன்றிய செயலாளர் தனஞ்செயன் மற்றும் மாநில, மாவட்ட, வட்டார ,ஒன்றிய ,நகர, கிளை நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். வடக்கு மாவட்ட தலைவர் மாரிமுத்து நன்றி கூறினார்.
பின்னர் மாநில தலைவர் முகமது இப்ராஹிம் நிருபர்களிடம் கூறுகையில், விவசாயிகள் சங்கத்தின் சார்பாக தஞ்சாவூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்துடைய நோக்கம் கர்நாடக அரசு தொடர்ந்து மேகதாது ஆணையிலே நாங்கள் அணை கட்டியே தீருவோம் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். அணை விவசாயிகள் கட்ட விடமாட்டோம். அதேோல் தமிழக முதல்வர் அவர்கள் தேர்தல் அறிக்கையிலே கூட்டுறவு கடனையும் பயிர் கடனையும் தள்ளுபடி செய்வதாக சொன்னார். ஆனால், அதை முழுமையாக செய்யவில்லை.
எனவே, அனைத்து விவசாய கடன்களையும் பயிர் கடன்களையும் நகை கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். மேட்டூர் அணை வருகின்ற 12-ம் தேதி வழக்கம் ோல் திறக்க வேண்டும். முதல்வர் விஜய் அதுகுறித்து எந்த அறிவிப்பும் செய்யாமல் உள்ளார். குறுவை விவசாயிகள் இன்றைக்கு மிகவும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். குறுவை சாகுபடி பணிகள் தொடங்கிவிட்டது. எனவே, விவசாயிகளுடைய நலன் கருதி உடனடியாக முதல்வர் விஜய் ஜூன் 12-ல் தண்ணீர் திறக்க ஏற்பாடு பண்ண வேண்டும்.
மத்திய அரசு உரவிலை, டீசல் விலை, பெட்ரோல் விலை, கேஸ் விலை என்று எல்லாவற்றையும் உயர்த்தி உள்ளது. விலை உயர்வை உடனடியாக குறைக்க வேண்டும். மேகதாது அணை கட்டும் பணிகள் நடந்தால் அங்கு தமிழகத்தில் உள்ள விவசாயிகளும் ஒன்று சேர்ந்து போராட்டத்தை இன்னும் கடுமையாக நடத்துவோம். எங்கள் உயிரை கூட விடுவோம். அணை கட்ட விட மாட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Before You Go
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
ட்ரெண்டிங் செய்திகள்






















