தஞ்சாவூர்: தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விழிக்கண் குழு கூட்டத்தில் உண்மைக்கு புறம்பான வழக்குகள்- முந்தைய கூட்டத்தில் உறுதி செய்யப்பட்டாதவை, புதிதாக ஆய்வுக்கு வைக்கப்படும் வழக்குகள், புலன் விசாரணை வழக்குகள், நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகள் உட்பட பல்வேறு பொருள் அடக்கம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.


தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் அரசு தலைமை கொறடா கோவி.செழியன், மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் ஆகியோர் தலைமையில் காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் முன்னிலையில் நீதித்துறை, அரசுத்துறை மற்றும் காவல்துறை அலுவலர்களுடன் விழிக்கண் குழுக் கூட்டம் நடைபெற்றது. 


பின்னர் அரசு தலைமை கொறடா கோவி.செழியன் தெரிவித்ததாவது: தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நீதித்துறை, அரசுத்துறை மற்றும் காவல்துறை அலுவலர்களுடன் விழிக்கண் குழுக் கூட்டம் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் உண்மைக்கு புறம்பான வழக்குகள்- முந்தைய கூட்டத்தில் உறுதி செய்யப்பட்டாதவை, புதிதாக ஆய்வுக்கு வைக்கப்படும் வழக்குகள், புலன் விசாரணை வழக்குகள், நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகள், நீதிமன்ற விசாரணை முடிவுற்ற வழக்குகள், தீருதவித்தொகை நிலுவை, வட்டாட்சியரிடமிருந்து சாதிச்சான்றிதழ் நிலுவை பட்டியல் போன்ற பல்வேறு பொருள் அடக்கம் இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. 


மேலும் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் கல்வித்தரம், பயிற்றுநிலை. வசதிகள் மேம்பாட்டிற்கான அறிவுரைகள் நல்குதல், விடுதிகளில் விளையாட்டு வசதிகள் நூலக மேம்பாடு, தேர்வு ஆயத்தப்பயிற்சிகள் அளிக்க உறுதுணை நல்குதல், பொங்கல் திருநாள், அம்பேத்கர் பிறந்தநாள் மற்றும் நினைவு நாள். ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளின் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள், கலைப்போட்டிகள், பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடத்துதல், அரசுப் பணியிடங்களில் ஒதுக்கீடு நடைமுறையை ஆய்விடல் போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.


இதேபோல் கல்வி நிறுவனங்களில் ஒதுக்கீடு நடைமுறையை ஆய்விடல், சிறப்பு உள்ளடக்கத்திட்டங்கள் மற்றும் மத்திய அரசின் சிறப்பு நிதியின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் ஆய்விடுதல், புதிதாக அறிவுரைகள் வழங்கல். இத்திட்டங்களை பரப்பும் வகை செய்தல், தாட்கோ திட்டங்களை பரப்பும் வகை செய்தல், ஆதிதிராவிடர்களுக்கு வீட்டுமனை, பயிர் நிலம் வழங்குதலையும், வழங்கியதை பேணுதலையும் ஆய்விடல், நில உச்சவரம்பு நிலங்கள். பூமிதான நிலங்கள் இவற்றை ஆதிதிராவிடர்களுக்கு அளித்தலையும் அளிக்கப்பட்ட நிலங்களை பேணுதலையும் ஆய்விடல், ஆதிதிராவிடர் மேம்பாடு குறித்த பொதுவான ஆலோசனை வழங்கல் போன்ற பல்வேறு கருத்துக்கள் குறித்து பொருள் விவாதிக்கப்பட்ட அனைத்து பணிகளும் விரைவாக தரமாகவும் முடித்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


இக்கூட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் இலக்கியா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.