மேலும் அறிய

சிவகங்கை பூங்கா பகுதியில் மண்டிக்கிடக்கும் செடி, கொடிகளை அப்புறப்படுத்த வலியுறுத்தல்

தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா பகுதியில் அரசு  அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. அதன்படி பள்ளி கல்வித்துறை அலுவலகம் அறநிலையத்துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.

தஞ்சாவூர்: தஞ்சை சிவகங்கை பூங்கா பகுதியில் செயல்பட்டு வரும் அரசு அலுவலக சுற்றுச்சுவரில் செடி கொடிகள் அதிக அளவில் மண்டி உள்ளது. இதனால் கட்டிடங்கள் சேதம் அடையும் நிலை உள்ளது. இதை உடன் சீரமைக்க வேண்டும் என்று சமூக நல ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

பாரம்பரியமும், தொன்மையும் மிக்கத் தமிழ்க் கலாசாரத்தின் மீது வெளிநாட்டுப் பயணிகள் தனிக் கவனத்தைச் செலுத்தி, சுற்றுலாவுக்கு வருகை தருகின்றனர். இவர்கள் ரசிக்கும் சுற்றுலாத் தலங்களில் ஆகச் சிறந்தது தஞ்சாவூர் பெரிய கோயிலாகும்.

தஞ்சை பெரிய கோயில், தஞ்சை பெருவுடையார் கோயில் என பலவாறாக அழைக்கப்படும் இந்தக் கோயில் உலகமே வியக்கும் அளவுக்கு கம்பீரமாய் நிற்கிறது. சோழ நாட்டில் மாபெரும் பெருமைகளை தன்னுள் அடக்கி கம்பீரமாக நிற்கிறது. 

தமிழர்களின் கட்டடக் கலைக்கு எடுத்துக் காட்டாக விளங்கும் இது, 10ஆம் நூற்றாண்டில் சோழ பேரரசர் முதலாம் இராசராச சோழன் கட்டிய இதை பல்லாயிரக்கணக்கானோர் வந்து, ஆண்டுதோறும் பார்த்து பிரமித்து போகும் அளவுக்கு இதன் சிறப்புகளும் உயர்ந்து நிற்கிறது. இது நாட்டில் உள்ள மிகப் பெரிய கோயில்களில் ஒன்று.

அடுத்த பெருமை அரண்மனை. ஆனால் இ து சோழர்கால அரண்மனை அல்ல.  நாயகர்களால் கட்டப்பட்டது, தஞ்சை நகரில் உள்ள இந்த அரண்மனை. கி.பி. 1674-இல் இருந்து 1855ஆம் ஆண்டு வரை தஞ்சாவூர் மராத்திய அரசின் கைவசம் இந்த அரண்மனை இருந்தது, தற்போது இது சுற்றுலாத் தலமாகியுள்ளது.

நகரின் மையப் பகுதியில் உள்ளதால் ஆண்டுதோறும் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். இதேபோல் தஞ்சையில் மக்கள் பூங்காவாக உருவாக்கப்பட்டது சிவகங்கை பூங்கா. இது பிரகதீஸ்வரர் கோயிலின் கிழக்கே அமைந்துள்ளது. சிவகங்கை குளத்தை உள்ளடக்கியது.

தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா பகுதியில் அரசு  அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. அதன்படி பள்ளி கல்வித்துறை அலுவலகம்,  பத்திர பதிவுத்துறை அலுவலகம், தொல்லியல் துறை அலுவலகம், அறநிலையத்துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இங்குள்ள சுற்றுச்சுவர் முழுவதும் செடி கொடிகள் மண்டி சேதமடைந்து உள்ளது.

அது பழமையான கட்டிடம் என்பதால் இங்குள்ள அலுவலகங்களில் பணியாற்றுபவர்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் விடுமுறை நாட்களில் சிவகங்கை பூங்காவுக்கு குழந்தைகள் உட்பட முதியோர்கள் அதிக அளவில் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறுவதற்கு முன்பு இங்கு மண்டியுள்ள செடி, கொடிகளை அகற்றி சுற்றுச்சுவரை பராமரிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மனோரா கடற்கரையில் கடல்பசு பாதுகாப்பு மைய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டல்
மனோரா கடற்கரையில் கடல்பசு பாதுகாப்பு மைய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டல்
நள்ளிரவில் பைக் மீது மோதல்... தப்பித்து ஓடிய மினி பஸ் டிரைவர் ஏரியில் மூழ்கி பலி
நள்ளிரவில் பைக் மீது மோதல்... தப்பித்து ஓடிய மினி பஸ் டிரைவர் ஏரியில் மூழ்கி பலி
மெட்ரோ ரயில் நிறுவனத்தில் இணை பொது மேலாளர் வேலை வாய்ப்பு... முழு விபரமும் உள்ளே!!!
மெட்ரோ ரயில் நிறுவனத்தில் இணை பொது மேலாளர் வேலை வாய்ப்பு... முழு விபரமும் உள்ளே!!!
இடம் தேடும் பணியில் பரபரப்பாக இயங்கும; தவெக நிர்வாகிகள்... எதற்காக?
இடம் தேடும் பணியில் பரபரப்பாக இயங்கும; தவெக நிர்வாகிகள்... எதற்காக?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay
Car Accident | தாறுமாறாக ஓடிய கார் குடிகாரனை வெளுத்த மக்கள் கமுதியில் பரபரப்பு | Ramanathapuram

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SDPI Join DMK Alliance : திடீர் ட்விஸ்ட்.! திமுக கூட்டணியில் இணையும் புதிய கட்சி.! SDPI -க்கு அழைப்பு- எத்தனை தொகுதி.?
திடீர் ட்விஸ்ட்.! திமுக கூட்டணியில் இணையும் புதிய கட்சி.! SDPI -க்கு அழைப்பு- எத்தனை தொகுதி.?
Rajya Sabha elections Candidate : யார் அந்த 6 பேர்.! திமுக, அதிமுகவில் ராஜ்யசபா சீட்டை கைப்பற்றப்போவது யார்.? வெளியான சீக்ரெட் லிஸ்ட்
யார் அந்த 6 பேர்.! திமுக, அதிமுகவில் ராஜ்யசபா சீட்டை கைப்பற்றப்போவது யார்.? வெளியான சீக்ரெட் லிஸ்ட்
Top 10 News Headlines: திமுக கூட்டணியில் புதிய கட்சி, மோட்டரோலா சலுகை, விமான விபத்து - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: திமுக கூட்டணியில் புதிய கட்சி, மோட்டரோலா சலுகை, விமான விபத்து - 11 மணி வரை இன்று
Modi visit to Tamil Nadu: நெருங்கும் தேர்தல்..! தமிழகத்தில் இன்று கால் பதிக்கும் மோடி.. யாரை சந்திக்கிறார்.? எங்கெல்லாம் செல்கிறார்.?
நெருங்கும் தேர்தல்..! தமிழகத்தில் இன்று கால் பதிக்கும் மோடி.. யாரை சந்திக்கிறார்.? எங்கெல்லாம் செல்கிறார்.?
TN Roundup: திமுக - காங்., பேச்சுவார்த்தை, எகிறிய தங்கம், ஸ்டாலின் கட்டளை - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: திமுக - காங்., பேச்சுவார்த்தை, எகிறிய தங்கம், ஸ்டாலின் கட்டளை - தமிழகத்தில் இதுவரை
Vadapalani to Poonamallee metro train: ரெடி ஸ்டார்ட்... வடபழனி டூ பூந்தமல்லி மெட்ரோ ரயிலை இயக்க அனுமதி கிடைச்சாச்சு.! ரயில் சேவை எப்போ தொடங்குது.?
ரெடி ஸ்டார்ட்... வடபழனி டூ பூந்தமல்லி மெட்ரோ ரயிலை இயக்க அனுமதி கிடைச்சாச்சு.! ரயில் சேவை எப்போ தொடங்குது.?
கொத்தாக 11 அறிவிப்புகள்.! அசத்திய முதலமைச்சர் ஸ்டாலின்- குஷியில் பூசாரிகள்
கொத்தாக 11 அறிவிப்புகள்.! அசத்திய முதலமைச்சர் ஸ்டாலின்- குஷியில் பூசாரிகள்
Vijay Sangeetha: சங்கீதா போட்ட குண்டு..! குற்றச்சாட்டுகளால் ஆடிப்போயிருக்கும் தவெக விஜய் - அரசியல் சதியா?
Vijay Sangeetha: சங்கீதா போட்ட குண்டு..! குற்றச்சாட்டுகளால் ஆடிப்போயிருக்கும் தவெக விஜய் - அரசியல் சதியா?
Embed widget