தஞ்சாவூர்: நாளைக்கு எங்கெங்கு நடக்கிறது என்று தெரியுங்களா? தெரிஞ்சுக்கோங்க. என்ன விஷயம் தெரியுங்களா? தஞ்சாவூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் 6 இடங்களில் நாளை நடைபெற உள்ளது என மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement


தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 15.07.2025 அன்று கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தமிழ்நாட்டிலுள்ள கடைகோடி மக்கள், அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள் / திட்டங்களை, அவர்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கும். உங்களுடன் ஸ்டாலின்" என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார்.


முதலமைச்சர்  மக்களின் குறைகளை வீட்டிற்கே சென்று கேட்டறிந்து தீர்வு காணும் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் அக்டோபர் 2025 வரை மாநிலம் முழுவதும் 10,000 முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.


அதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் கடந்த ஜூலை 15 முதல் அக்டோபர் 31 வைரை 4 கட்டங்களாக 353 முகாம்கள் நடைபெற உள்ளன. மூன்றாம் கட்டமாக நகர்புறங்களில் 28 முகாம்கள் கிராம புறங்களில் 62 முகாம்கள் ஆக மொத்தம் 90 முகாம்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் அக்டோபர் 15 முதல் அக்டோபர் 31 வரை நடைபெறவுள்ளது. நகர்ப்புறங்களில் 13 துறைகள் மூலம் 43 சேலைகளும் கிராமப்புறங்களில் 15 துறைகள் மூலம் 46 சேவைகளுக்கான மனுக்கள் பெற்று 15 நாட்களுக்குள் தீர்வு காணப்படும்.


அதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் நேரம் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது.


தஞ்சாவூர் மாநகராட்சி வார்டு 31, 32, 33 ஆகிய பகுதிகளில் தஞ்சாவூர் வாணக்காரத் தெரு, நியூ ஸ்டார் திருமண மண்டபத்திலும், திருப்பனந்தாள் பேரூராட்சி வார்டு 9 முதல் 15 வரை ஆகிய பகுதிகளில் திருப்பனந்தாள் ஸ்ரீ வேலன் மஹாலிலும், ஒரத்தநாடு வட்டாரம் சின்ன பொன்னாப்பூர், நெய்வாசல் தெற்கு, தலையாமங்கலம் ஆகிய பகுதிகளில் நெய்வாசல் தெற்கு, சமத்துவபுரம், சமுதாயக் கூடத்திலும் நடக்கிறது.


இதேபோல் கும்பகோணம் வட்டாரம் சுந்தர பெருமாள் கோவில் ஆகிய பகுதிகளில் சுந்தர பெருமாள் கோவில் ராஜம்மாள் திருமண மண்டபத்திலும், பாபநாசம் வட்டாரம் சத்தியமங்கலம், கொந்தகை ஆகிய பகுதிகளில் வாழ்க்கை கிராம பொது சேவை மையக்கட்டிடத்திலும், தஞ்சாவூர் வட்டாரம் விளார் (Peri Urban) ஆகிய பகுதிகளில் விளார் சைமன் திருமண மஹாலிலும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. எனவே, இம்முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.