மேலும் அறிய

அதிமுக நிர்வாகி தீக்குளித்த விபரீதம்: கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய எடப்பாடி பழனிசாமி

அதிமுக தற்போது இரண்டாகப் பிரிந்து இருப்பதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கட்சி மீண்டும் ஒன்றிணைய வேண்டும்.

தஞ்சாவூர்: "கட்சி ஒன்றிணைய வேண்டும், பொதுச் செயலாளர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினால் தான் என் ஆன்மா சாந்தியடையும்" என உருக்கமான வீடியோ பதிவை வெளியிட்டு அதிமுக நிர்வாகி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். எடப்பாடி பழனிசாமி அவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். 

அதிமுக நிர்வாகி தீக்குளித்த விபரீதம்: கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய எடப்பாடி பழனிசாமி

முகநூலில் உருக்கமான வீடியோ பதிவு

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் வளையல்காரத் தெருவைச் சேர்ந்தவர் மகேந்திரன் (37). கலியமூர்த்தியின் மகனான இவர், அப்பகுதியில் பூக்கடை நடத்தி வந்தார். தீவிர அதிமுக தொண்டரான இவர், தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட வர்த்தக அணியின் இணைச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்தார். இவருக்கு முனீஸ்வரி (32) என்ற மனைவியும், நித்ஸ்ரீ (2) என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று இரவு மகேந்திரன் தனது பேஸ்புக் பக்கத்தில் உருக்கமான வீடியோ ஒன்றை பதிவிட்டார். அதில் அவர் பேசியதாவது: "அதிமுக தற்போது இரண்டாகப் பிரிந்து இருப்பதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கட்சி மீண்டும் ஒன்றிணைய வேண்டும். மீண்டும் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சராக வர வேண்டும். அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால், நான் மீண்டும் அதிமுகவின் எளிய தொண்டனாகவே பிறக்க வேண்டும்.

கட்சியின் இந்த சூழ்நிலை எனக்கு கடுமையான மனவேதனையைத் தந்துள்ளதால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன். எனது உடலுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினால் மட்டுமே எனது ஆன்மா சாந்தியடையும்."

இந்த வீடியோவை வெளியிட்ட சில நிமிடங்களில், மகேந்திரன் தனது உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீக்குளித்தார். இதில் படுகாயமடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நேரில் அஞ்சலி செலுத்திய எடப்பாடி பழனிசாமி

மகேந்திரனின் தற்கொலை மற்றும் அவரது இறுதி ஆசை குறித்த தகவல் அறிந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று மதியம் திருப்பனந்தாளில் உள்ள மகேந்திரனின் இல்லத்திற்கு நேரில் வந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த மகேந்திரனின் உடலுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி அவர் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து குடும்பத்தினருக்கு  ஆறுதல் தெரிவித்தார்.

நிதியுதவி மற்றும் கல்விச் செலவு ஏற்பு

பின்னர் எடப்பாடி பழனிச்சாமி நிருபர்களிடம் கூறியதாவது:  "மகேந்திரன் தனது இன்னுயிரை மாய்த்துக் கொண்ட செய்தி எனக்கு மிகுந்த அதிர்ச்சியையும், மன வேதனையையும் அளிக்கிறது. சிறப்பான முறையில் கட்சிப் பணியாற்றி, கழக நிர்வாகிகளிடமும், தொண்டர்களிடமும், தலைமைக்கும் மிகுந்த விசுவாசமாகச் செயல்பட்டவர் அவர். அவருடைய மறைவு அதிமுகவிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மகேந்திரனின் பெண் குழந்தை வளர்ந்து, பள்ளிப் படிப்பைத் தொடங்கி, உயர் கல்வி முடியும் வரை ஆகும் அனைத்துக் கல்விக் கட்டணங்களையும் அதிமுக முழுமையாக ஏற்றுக் கொள்ளும்.

மேலும், கட்சியின் தலைமைச் சார்பாக ரூ.30 லட்சமும், தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் ரூ.25 லட்சமும் என மொத்தம் ரூ.55 லட்சம் நிதியுதவி அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்படும். 

"பாதம் பணிந்து கேட்கிறேன், உயிரை மாய்க்காதீர்" 

அதிமுகவின் ஒவ்வொரு தொண்டனின் உயிரும் விலைமதிப்பற்றது. அரசியல் காரணங்களுக்காக இனி இப்படிப்பட்ட விபரீத முடிவுகளை யாரும் எடுக்க வேண்டாம் என்று தாழ்மையுடன், தொண்டர்களுடைய பாதம் பணிந்து, வணங்கிக் கேட்டுக்கொள்கிறேன். இந்தச் சம்பவத்தால் நாங்கள் எல்லோரும் கடுமையான மன வேதனையிலும் அதிர்ச்சியிலும் இருக்கிறோம். இன்றைக்கு அந்த குடும்பம் கதறி அழுவதைப் பார்க்கும்போது, ஒவ்வொரு தொண்டனும், நிர்வாகியும் அதை உணர்ந்து கொள்ள வேண்டும் என்று கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

அதிமுக நிர்வாகி தீக்குளித்த விபரீதம்: கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய எடப்பாடி பழனிசாமி
அதிமுக நிர்வாகி தீக்குளித்த விபரீதம்: கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய எடப்பாடி பழனிசாமி
கலெக்டர் அலுவலகத்தில் ஒருமையில் பேசிய போலீசார்... கண்டித்து தர்ணாவில் ஈடுபட்ட விவசாயிகள்
கலெக்டர் அலுவலகத்தில் ஒருமையில் பேசிய போலீசார்... கண்டித்து தர்ணாவில் ஈடுபட்ட விவசாயிகள்
தஞ்சையில் பக்தி பரவசம்... வைகாசி விசாகத்தை ஒட்டி கருணாசாமி கோயிலில் ஏழூர் பல்லக்கு புறப்பாடு
தஞ்சையில் பக்தி பரவசம்... வைகாசி விசாகத்தை ஒட்டி கருணாசாமி கோயிலில் ஏழூர் பல்லக்கு புறப்பாடு
பிளஸ்-2 மாணவர்களே அலர்ட்... மத்திய பாதுகாப்பு படையில் 394 காலிப் பணியிடங்கள்: தேர்வு முறை என்ன?
பிளஸ்-2 மாணவர்களே அலர்ட்... மத்திய பாதுகாப்பு படையில் 394 காலிப் பணியிடங்கள்: தேர்வு முறை என்ன?
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support
Vijay warns Ministers |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: முதல்வர் விஜய் அணியும் கோட் சூட் ரகசியம் தெரியுமா.? திருச்சியில் அவரே கொடுத்த விளக்கத்த பாருங்க
முதல்வர் விஜய் அணியும் கோட் சூட் ரகசியம் தெரியுமா.? திருச்சியில் அவரே கொடுத்த விளக்கத்த பாருங்க
Delimitation Bill: மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதா, ஒரே நாடு ஒரே தேர்தல்- மத்திய அரசு மும்முரம்!
Delimitation Bill: மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதா, ஒரே நாடு ஒரே தேர்தல்- மத்திய அரசு மும்முரம்!
US Iran Attacks: போட்டு சாத்திய அமெரிக்கா; பதிலுக்கு அடித்த ஈரான்; மத்திய கிழக்கில் மீண்டும் போரா.? நடப்பது என்ன.?
போட்டு சாத்திய அமெரிக்கா; பதிலுக்கு அடித்த ஈரான்; மத்திய கிழக்கில் மீண்டும் போரா.? நடப்பது என்ன.?
”பேப்பர் லீக், பசங்க வாழ்க்கை நாசமாகுது.. இவரு மாங்கா தோட்டம் பத்தி பேசிட்டு இருக்கார்” - மோடியை சாடும் காங்.,
”பேப்பர் லீக், பசங்க வாழ்க்கை நாசமாகுது.. இவரு மாங்கா தோட்டம் பத்தி பேசிட்டு இருக்கார்” - மோடியை சாடும் காங்.,
’’1800 அரசு பள்ளிகளில் HM இல்லை; 20 DEO காலியிடங்கள்- அவலத்துக்கு முடிவு எப்போ?’’அன்புமணி ஆதங்கம்!
’’1800 அரசு பள்ளிகளில் HM இல்லை; 20 DEO காலியிடங்கள்- அவலத்துக்கு முடிவு எப்போ?’’அன்புமணி ஆதங்கம்!
Toyota EBELLA Alternatives: டொயோட்டாவுக்கு டஃப்.! ஹூண்டாய் முதல் வின்ஃபாஸ்ட் வரை; எபெல்லா பட்ஜெட்டை விட மலிவான 6 கார்கள்
டொயோட்டாவுக்கு டஃப்.! ஹூண்டாய் முதல் வின்ஃபாஸ்ட் வரை; எபெல்லா பட்ஜெட்டை விட மலிவான 6 கார்கள்
DMK: கொத்தடிமைகள்.. உபி... கொத்துஸ்! இளைஞர்களிடம் இப்படியா கட்சியை கொண்டு போவீங்க? கொதிக்கும் திமுக உடன்பிறப்புகள்
DMK: கொத்தடிமைகள்.. உபி... கொத்துஸ்! இளைஞர்களிடம் இப்படியா கட்சியை கொண்டு போவீங்க? கொதிக்கும் திமுக உடன்பிறப்புகள்
TNEA 2026: பொறியியல் படிக்கணுமா? மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
TNEA 2026: பொறியியல் படிக்கணுமா? மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget