திருவாரூர் மாவட்டத்தில் மீண்டும் தொடங்கிய கனமழை 5 மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

தெற்கு இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதியில் காற்று சுழற்சி நீடிக்கிறது. இச்சுழற்சியின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி குமரிக்கடல் பகுதியில் உருவாககூடும். குமரிக்கடல் பகுதியில் டிசம்பர் 17,18 தேதிகளில் தாழ்வு பகுதி நிலைக்கொண்டு, டிசம் 19ம் தேதி லட்சதீவுகள் அருகே காற்று சுழற்சியாக வலுவிழக்க கூடும். இதனால் தமிழகத்தின் மத்திய மற்றும் தென் மாவட்டங்களில் அடுத்த 72 மணி நேரத்திற்கு வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. எதிர் வரும் 24 மணி நேரத்தில் தமிழகத்தில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். டெல்டா மற்றும் தென் கடலோர மாவட்டங்களான மயிலாடுதுறை காரைக்கால்  நாகப்பட்டினம் திருவாரூர் தூத்துக்கடி திருநெல்வேலி கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக கனமழையும், கடலோரத்தின் ஒருசில இடங்களில் மிககனமழையும் பதிவாகும்.



 

பிற கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் புதுச்சேரி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்களில் பரவலாக மிதமானது முதல் சற்றே கனமழையும் ஒரிரு இடங்களில் கனமழையும் பதிவாகும். உள் மாவட்டங்களான திருவண்ணாமலை  கள்ளக்குறிச்சி  பெரம்பலூர்  அரியலூர் திருச்சி நாமக்கல் சேலம் ஈரோடு திண்டுக்கல்  சிவகங்கை மதுரை  விருதுநகர்* உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு/நள்ளிரவு மிதமானது முதல் சற்றே கனமழை பதிவாகும்.



 

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாளிலிருந்து திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலானது முதல் கனமழை என்பது பெய்து வந்தது. இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக மாவட்டத்தில் மழை என்பது இல்லாத நிலையில் விவசாய நிலத்தில் தேங்கியிருந்த மழை நீரை வடியவைத்த பின்னர் நெல் பயிர்களுக்கு உரம் அடிக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் இன்று காலை முதல் வானம் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டு வந்த நிலையில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது குறிப்பாக திருவாரூர் கூத்தாநல்லூர் கமலாபுரம் நன்னிலம் பூந்தோட்டம் குடவாசல் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை என்பது பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக சம்பா நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தொடர்ந்து இந்த மழை பெய்தால் தாளடி நெல் சாகுபடி பணிகள் மீண்டும் பாதிக்கப்படக்கூடிய சூழல் உருவாகும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி இந்த மழையின் காரணமாக சாலை ஓர வியாபாரிகள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.