தமிழகத்தில் கடைசி 38வது மாவட்டமாக பிரிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில், மயிலாடுதுறை  மற்றும் சீர்காழி ஆகிய ஊர்களில் இரண்டு வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு மோட்டார் வாகனம் புதிய பதிவு எண் வாங்குதல், வாகனங்கள் புதுப்பித்தல், ஓட்டுனர் உரிமம், உள்ளிட்ட பல்வேறு மோட்டார் வாகனம் சார்ந்த பணிகள் நடைபெற்று வருகிறது. பொதுவாக மக்கள் மத்தியில் போக்குவரத்து மோட்டார் வாகன அலுவலகங்களில் கையொட்டு இன்றி எந்த ஒரு காரியமும் நடைபெறாது என்ற ஒரு கருத்து ஆழமாக நிலவி வருகிறது. அதன் காரணமாக தொடர்ந்து வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மீது பல்வேறு விமர்சனங்களையும் பொதுமக்கள் தெரிவித்து வருவதும் தொடர்கதையாக இருக்கும் ஒன்றாகும்.




இந்நிலையில் மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும், மோட்டார் வாகன ஆய்வாளர் சண்முகவேல் ராம்குமார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று,  டெல்டா டிராக்டர் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் இரண்டு சுவரொட்டிகள் மயிலாடுதுறை நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளதால் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Railway Bridge Collapses :மிசோரம் மாநிலத்தில் ரயில்வே பாலம் இடிந்து விழுந்து விபத்து... 17 பேர் உயிரிழப்பு




ஒட்டப்பட்ட இரண்டு போஸ்டர்களில் ஒன்றில் 'அவல நிலையில் மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலகம்!' என்று தலைப்பிட்டு 'மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாகனப்பதிவில், பதிவு அதிகாரியின் கையொப்பத்தை ஓட்டுநர் பயிற்சி பள்ளியின் உரிமையாளர்கள் கையொப்பமிட்டு தொடர் மோசடிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், தனி லஞ்ச சாம்ராஜ்யம் நடத்திவரும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள், ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்களுக்கு உறுதுணையாக செயல்பட்டு வரும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உரிமையாகவும், எருமையாகவும், கழுதையாகவும் செயல்படுவதை வன்மையாக கண்டிக்கிறோம் என்று ஒட்டப்பட்டுள்ளது. 


Board Exams: 11, 12ஆம் வகுப்புக்கு ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு: அரசு திடீர் முடிவு- என்ன காரணம்?




மற்றொரு போஸ்டரில், 'மயிலாடுதுறை மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையே மோட்டார் வாகன ஆய்வாளர், சண்முகவேல் மற்றும் ராம்குமார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், வெட்கக்கேடு.. வெட்கக்கேடு! மானக்கேடு..மானக்கேடு! மாவட்ட நிர்வாகமே நடவடிக்கை எடு! என்றும் அச்சடிக்கப்பட்ட சுவரொட்டிகள் நாளை தமிழ்நாடு முதலமைச்சர் மயிலாடுதுறை வருகை தரும் வேளையில் இவ்வாறு  பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இச்சம்பவம் குறித்து மயிலாடுதுறை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.