தஞ்சாவூர்: சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு இருக்கு. 108 பணியிடங்கள் இருக்குங்க. உடனே விண்ணப்பிங்க. முழு விபரமும் இதோ.

Continues below advertisement

கோவை மாவட்ட சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு அறிவிச்சு இருக்காங்க. 108 பணியிடங்கள் இருக்கு. குறைந்தபட்ச தகுதி போதும்; தேர்வு முறை, விண்ணப்பிப்பது எப்படி? என்பது உள்ளிட்ட அனைத்து தகவல்கள் இங்கே

கோவை மாவட்ட சுகாதாரத் துறையில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற சுகாதார நிலையங்களில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 108 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 08.08.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Continues below advertisement

பார்மஸிஸ்ட் (Pharmacist)

காலியிடங்களின் எண்ணிக்கை: 6

கல்வித் தகுதி: A Diploma in Pharmacy or Bachelor of Pharmacy or Pharm. D படித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 15,000

லேப் டெக்னீசியன் (Lab Technician)

காலியிடங்களின் எண்ணிக்கை: 9

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடங்கள் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Medical Laboratory Technology Course படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 13,000

ஸ்டாப் நர்ஸ் (Staff Nurse)

காலியிடங்களின் எண்ணிக்கை: 93

கல்வித் தகுதி: Diploma in General Nursing and Midwifery (DGNM) or B.Sc., Nursing படித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி: 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 18,000

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2025/07/17533589835308.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: உறுப்பினர் செயலாளர்/ மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், மாவட்ட சுகாதார அலுவலகம், 219, ரேஸ் கோர்ஸ் ரோடு, கோயம்புத்தூர் - 18

விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.08.2025. இன்னும் சில நாட்களே உள்ளன. எனவே காலம் தாழ்த்தாமல் உடனே விண்ணப்பம் செய்து விடுங்கள்.