குடும்ப கஷ்டத்திலும் நேர்மையாக கீழே கிடந்த ரூ.1,10000 பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த பெண்
எஸ்பி பாராட்டு
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையிலுள்ள விஎன்எஸ் மார்கெட்டில் செயல்பட்டு வரும் செல்வம் அரசி மண்டி உரிமையாளர் திருச்செல்வம் என்பவர் பட்டுக்கோட்டை மணிக்கூண்டு அருகில் உள்ள தனியார் ஐசிஐசிஐ வங்கியில் ரூ. 7,60000 பணத்தை வங்கியில் கட்ட சென்றுள்ளார், அதில் ரூ. 1,10000 த்தை தவற விட்டு விட்டார்.
இது தொடர்பா கடந்த 1.3.22 ம் தேதி பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரையடுத்து, பட்டுக்கோட்டைதுணைக்காவல் கண்காணிப்பாளர் செங்கமலக்கண்ணன், கடந்த 5.3.22 ம் தேதி பணத்தை காணாமல் போனது குறித்து தெரிவித்தார். இதனையடுத்து, பட்டுக்கோட்டை உட்கோட்ட குற்ற பிரிவு உதவி ஆய்வாளர் பாஸ்கர் தலைமமையில் தனி படை அமைத்து, விசாரணை தொடங்கியது.
பின்னர் அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது, கீழே கிடந்த பணத்தை அவ்வழியாக குழந்தையுடன் சென்ற பெண் கையில் எடுத்து பணம் யாருடையது என்பது கேட்டது தெரிய வந்தாகவும்,பணம் எடுத்தது சம்மந்தமாக பக்கத்தில் இருந்தவர்களிடம் அருகில் உள்ள கடைக்கு உணவருந்த செல்கிறோம் யாரும் வந்து பணம் சம்மந்தமாக கேட்டால் சொல்லுங்கள் என்று தெரிவித்து சென்று விட்டார். விசாரணையில் பணத்தை எடுத்து சென்றது வாட்டத்திக்கோட்டை காவல் நிலையத்திற்குட்ப்பட்ட இடையாத்தியை சேர்ந்த மதியழகன் மற்றும் தனலெட்சுமி என தெரியவந்தது.
தனலெட்சுமியின் நேர்மையை தஞ்சை எஸ்பியின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிபிரியாகாந்தபுனேனி அவர்களை சந்தித்து உரியவர்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டதின் பேரில், தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், பணத்ததிற்கு சொந்தமானவர் திருச்செல்வம் மற்றும் தனலெட்சுமி, உறவினர் மதியழகன் ஆகியோரை நேரில் அழைத்து உரியவரிடம் ரூ. 1,10000 த்தை ஒப்படைத்தும், குடும்ப கஷ்டத்திலும் நேர்மையாக நடந்து கொண்ட உறவினர் மதியழகன், தனலெட்சுமி அவர்களுக்கு பொன்னாடை போர்த்தியும் சன்மானம் வழங்கியும், இரு கைகளையும் கூப்பி வாழ்த்து தெரிவித்து கௌரவித்தார்.
இது குறித்து தனலெட்சுமி கூறுகையில்,எனது கணவர் விவேக் கூலித்தொழிலாளி .தஷிதா(3), 6 மாத குழந்தையான ஜோவிதா என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. விவேக் குடும்ப கஷ்டம் காரணமாக கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வேலைக்காக சிங்கப்பூருக்கு சென்றார். அங்கு விவேக்கிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், மூன்று மாதங்கள் தனிமைப்படுப்பட்டார். அதன் பிறகு சில மாதங்களுக்கு பிறகு வேலையில் சேர்ந்த விவேக்கிற்கு, இதுவரை சம்பளம் சரி வரவழங்கவில்லை. இதனால் குடும்பத்திற்கு தேவையான பணம் அனுப்பமுடியாததால், மிகவும் கஷ்டம் ஏற்பட்டது. இதனையடுத்து என தந்தையார் எங்களுக்கு தேவையான பொருளாதார உதவிகளை செய்து வருகிறார்.
இந்நிலையில் தஷிதாவிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை அழைத்து சென்றோம். என்னுடன் தாய் மற்றும் சகோதர் ஆகிய இருவரும் வந்தனர். சாப்பிடுவதற்காக சாலையை கடக்கும் போது, பணக்கட்டு கிடந்தது. இதனையடுத்து அங்குள்ள வியாபாரிகள்,கடைகாரர்களிடம் கேட்டு பார்த்தேன். ஆனால் யாரும் பதில் சொல்லாததால் தகவலை கூறி விட்டு, ஒட்டலுக்கு சாப்பிட சென்றோம். அப்போதுள்ள அங்குள்ள கடைகாரர்களிடம், பணத்தை தொலைத்தவர் வந்து கேட்டால், செல்போன் நம்பருக்கு அழைக்க சொல்லுங்கள் என்று நம்பரை கொடுத்து விட்டு வந்தேன். பின்னர், போலீசார் கூறியதின் பேரில், எஸ்பி மூலமாக பணத்தை உரியவரிடம் ஒப்படைத்தேன் என்றார்.