மேலும் அறிய

தேவர்களை காத்த தெய்வம்... பக்தர்களை காக்கும் ஆலங்குடி குருபகவான்!

ஆலங்குடி என்றாலே அனைவருக்கும் குரு பகவான்தான் ஞாபகத்திற்கு வருவார். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே அமைந்துள்ளது ஆலங்குடி குருபகவான் கோயில்.

தஞ்சாவூர்: தேவர்களை காக்க விஷம் அருந்திய ஈசன்... பக்தர்களின் துயரங்களை போக்க அருள் வழங்கும் புண்ணிய பூமி. அதுவே திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே அமைந்துள்ள ஆலங்குடி.

தேவர்களை அழிவிலிருந்து காக்க இறைவன் ஆலகால விஷத்தை அருந்திய புண்ணிய தலமாகப் போற்றப்படும் ஆலங்குடி, இன்று கோடி கணக்கான பக்தர்களின் நம்பிக்கையின் மையமாக திகழ்கிறது. இங்கு அருள்பாலிக்கும் ஆபத்சகாயேஸ்வரரை ஒருமுறை மனமுருகி வழிபட்டாலே கோடி புண்ணியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்து வருகிறது.

ஆலங்குடி என்றாலே அனைவருக்கும் குரு பகவான்தான் ஞாபகத்திற்கு வருவார். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே அமைந்துள்ளது ஆலங்குடி குருபகவான் கோயில். இக்கோயில் ஆபத்சகாயேஸ்வரரை ஒருமுறை வழிபட்டால் கோடி புண்ணியம் கிடைக்கும். அதுமட்டுமா? தேவர்களைக் காக்க ஆலகால விஷத்தை இறைவன் குடித்ததால் இந்த இடத்திற்கு ஆலங்குடி என்று பெயர் வந்தது என்கின்றனர். 

நவக்கிரகத் தலங்களில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி குரு ஸ்தலமாக விளங்குகிறது. குரு பரிகார தலமாக உள்ள இந்த கோயிலின் ஸ்பெஷல் பற்றி பார்ப்போம். தேவர்களைக் காக்க ஆலகால விஷத்தை இறைவன் குடித்ததால் இந்த இடத்திற்கு ஆலங்குடி என்று பெயர் வந்ததாம். 

இந்த ஊரில் விஷத்தால் எவருக்கும் எந்த வித தீங்கும் உண்டாவதில்லை என்பதும் பக்தர்களின் நம்பிக்கை. கருநிறம் உள்ள பூளைச் செடியைத் தலவிருட்சமாகக் கொண்டுள்ளதால், இந்த ஸ்தலம் திருஇரும்பூளை என்றும் அழைக்கப்படுகிறது. குருபகவான் ஸ்தலமாக விளங்கும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில் சுமார் 1900 வருடங்களுக்கு முன்பு சோழ மன்னர்களால் கட்டப்பட்டது என்பதும் மற்றொரு ஸ்பெஷல். 

தேவாரப் பாடலில் இடம் பெற்ற காவிரி தென்கரை ஸ்தலங்களில் இது 98வது ஸ்தலமாகும். இங்கு மூலவர் ஆபத்சகாயேஸ்வரர் சுயம்புலிங்கமாவார். இறைவி அம்மையார் பெயர் ஏலவார்குழலி என்ற சுக்கிரவார அம்பிகை. சுக்கிரவாரம் என்பது வெள்ளிக்கிழமை அது பெண்களுக்கு உகந்த நாள் என்பதால் வெள்ளியின் பெயரைக் கொண்டு அருள்பாலிக்கிறார். 

இக்கோயிலின் அமைப்பு வித்தியாசமாகவும், விசித்திரமாகவும் கட்டமைக்கப்பட்டுள்ளது. உள்ளே நுழைந்தால் முதலில் கண்ணில் படுவது அம்மன் சன்னதி, அடுத்து சுவாமி சன்னதி இரண்டையும் பார்க்கலாம். அதன் பிறகு குரு சன்னதி இருக்கும், அதாவது மாதா, பிதா, குரு என்ற அடிப்படையில் இக்கோயில் அமைந்துள்ளதாக கருதப்படுகிறது. 

இந்த ஸ்தலத்தில் சிறப்புடைய குரு தக்ஷிணாமூர்த்தி தெற்கு கோஷ்டத்தில் உள்ளார். மேலும் இது குரு தக்ஷிணாமூர்த்தி பரிகார ஸ்தலமாகும். தக்ஷிணாமூர்த்தி உற்சவராகத் தேரில் பவனி வருவது தமிழ்நாட்டிலேயே இங்கு மட்டும்தான் என்பது கூடுதல் சிறப்பாகும். சுந்தரர் இத்தலத்திற்கு வரும்போது வெற்று வெள்ளப்பெருக்கில் சிக்கிக் கொண்டார், ஆபத்சகாயேஸ்வரர், அவரை ஓரமாக வந்து கரையேற்றி காட்சி தந்தார் என்பது ஸ்தல வரலாறு. அப்போது நிலைதடுமாறி பாறையில் மோதியபோது அவரைக் காத்த விநாயகர், கலங்காமல் காத்த பிள்ளையார் என அழைக்கப்படுகிறார். இப்படி தொடர்ந்து பல பெருமைகளை ஸ்பெஷலாக கொண்டு விளங்குகிறது ஆலங்குடி குரு கோயில்.  இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் குரு பகவான் அருள் தங்களுக்கு நிச்சயம் கிட்டும் என்று அசைக்க முடியாத நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர் என்பதும் மறுக்க முடியாத உண்மை. 

Advertisement

தலைப்பு செய்திகள்

Thanjavur power cut: தஞ்சை மக்கள் கவனத்திற்கு - நாளை (09-06-2026) மின்தடை செய்யப்படும் பகுதிகளின் லிஸ்ட் இதோ
Thanjavur power cut: தஞ்சை மக்கள் கவனத்திற்கு - நாளை (09-06-2026) மின்தடை செய்யப்படும் பகுதிகளின் லிஸ்ட் இதோ
உங்கள் வாழ்க்கைப் பிரச்சனைகள் தீர வேண்டுமா? தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள இந்தக் கோயில்களைத் தரிசியுங்கள்!
உங்கள் வாழ்க்கைப் பிரச்சனைகள் தீர வேண்டுமா? தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள இந்தக் கோயில்களைத் தரிசியுங்கள்!
சாஸ்த்ரா பல்கலைக்கழக பொறியியல் சேர்க்கை 2026: தரவரிசைப் பட்டியலில் சென்னை மாணவர் சாதனை
சாஸ்த்ரா பல்கலைக்கழக பொறியியல் சேர்க்கை 2026: தரவரிசைப் பட்டியலில் சென்னை மாணவர் சாதனை
இந்தியப் பயிறு வகைகளுக்கு மதிப்புக்கூட்டல் அவசியம்: மத்திய அரசுச் செயலாளர் கலைச்செல்வி வலியுறுத்தல்
இந்தியப் பயிறு வகைகளுக்கு மதிப்புக்கூட்டல் அவசியம்: மத்திய அரசுச் செயலாளர் கலைச்செல்வி வலியுறுத்தல்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
'திமுகவில் இணைகிறார் அதிமுக C. விஜயபாஸ்கர்?’ விரைவில் அறிவிப்பு..!
'திமுகவில் இணைகிறார் அதிமுக C. விஜயபாஸ்கர்?’ விரைவில் அறிவிப்பு..!
Annamalai : ’அண்ணாமலையுடன் இணையப்போகும் முக்கிய அரசியல் புள்ளி’ இவர்தான் அவர்..!
’அண்ணாமலையுடன் இணையப்போகும் முக்கிய அரசியல் புள்ளி’ இவர்தான் அவர்..!
DMK: கருணாநிதிகிட்ட என்ன தான் கத்துக்கிட்டிங்க..! பொறாமையில் பொங்கும் திமுகவினர், சாபம் விடும் உபிக்கள்
கருணாநிதிகிட்ட என்ன தான் கத்துக்கிட்டிங்க..! பொறாமையில் பொங்கும் திமுகவினர், சாபம் விடும் உபிக்கள்
INDIA Alliance Meeting : ’திமுக இல்லாத இண்டியா கூட்டம்’ கேள்வி எழுப்ப கட்சிகள் திட்டம் – கலக்கத்தில் காங்கிரஸ்..?
'இண்டியா கூட்டத்தை புறக்கணித்த காங்கிரஸ்’ நடக்கப்போவது என்ன?
அமைச்சர்களுக்கு தடை போட்ட CM விஜய்..! 5 தொகுதிகளுக்கு ஸ்பெஷல் கவனிப்பு - தேர்தல் பணிகள் தீவிரம்
அமைச்சர்களுக்கு தடை போட்ட CM விஜய்..! 5 தொகுதிகளுக்கு ஸ்பெஷல் கவனிப்பு - தேர்தல் பணிகள் தீவிரம்
Bose Venkat: விஜய் ஜெயிச்சாரு.. மொத்த மானத்தையும் வாங்கிய குடும்பம்.. போஸ் வெங்கட் வேதனை!
Bose Venkat: விஜய் ஜெயிச்சாரு.. மொத்த மானத்தையும் வாங்கிய குடும்பம்.. போஸ் வெங்கட் வேதனை!
Tamilnadu Round Up: மீண்டும் குறைந்த தங்கம் விலை, பதவிக்காக ஓடும் அதிமுகவினர்? திமுக சாடல் - தமிழ்நாட்டில் இதுவரை
மீண்டும் குறைந்த தங்கம் விலை, பதவிக்காக ஓடும் அதிமுகவினர்? திமுக சாடல் - தமிழ்நாட்டில் இதுவரை
Hyundai Creta: SUV-க்களின் கிங்கிற்கு சலுகைகளை வாரி வழங்கிய ஹுண்டாய் - இன்ஜின் & EV ரெண்டிற்கும் ஆஃபர்
SUV-க்களின் கிங்கிற்கு சலுகைகளை வாரி வழங்கிய ஹுண்டாய் - இன்ஜின் & EV ரெண்டிற்கும் ஆஃபர்
Embed widget