மேலும் அறிய

திருமண்டங்குடி ரகசியம்: சோழர் காலத்து வீரமங்கைகள்! ஆச்சரியப்பட வைக்கும் சிற்பங்கள்!

மிக பழமை வாய்ந்தது இந்த சிவன் கோயில். இக்கோயில் கருவறை கோமுகியில் (அபிஷேகம் செய்யும் தீர்த்தம் வெளி வரும் பாதை) பெண்களின் வீரத்தை போற்றும் வகையிலான சிற்பங்கள் உள்ளன.

தஞ்சாவூர்: பெண்கள் வீரமங்கைகள் என்பதை உணர்த்தும் வகையில் தஞ்சை மாவட்டம் திருமண்டங்குடியில் உள்ள மிகவும் பழமைவாய்ந்த திருபுவனேஸ்வரர் கோயில் உள்ள சிற்பங்கள் விளக்குகின்றன.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திலிருந்து 10 கி.மீ தொலைவில், கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடி கிராமத்தில் அமைந்துள்ளது திருபுவனேசுவரர் கோயில். இறைவியின் திருநாமம் திரிபுரசுந்தரி. பன்னிரு ஆழ்வார்களில் மிக முக்கியமானவரான தொண்டரடிப்பொடி ஆழ்வார் அவதரித்த திருத்தலம் இது.

மிக பழமை வாய்ந்தது இந்த சிவன் கோயில். இக்கோயில் கருவறை கோமுகியில் (அபிஷேகம் செய்யும் தீர்த்தம் வெளி வரும் பாதை) பெண்களின் வீரத்தை போற்றும் வகையிலான சிற்பங்கள் உள்ளன.

பழமையான கோயில்களில் ஆண்களின் வீரச்செயலை போற்றும் வகையிலான சிற்பங்கள் ஏராளமாக இருப்பதை பார்த்திருப்போம். ஆனால் இக்கோயில்களில் பெண்களின் வீரத்தை போற்றும் சிற்பங்கள் அந்த காலத்திலேயே வடிக்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இக்கோயிலில் உள்ள சிற்பங்கள் தமிழகத்தில் வேறெங்கும் காண கிடைக்காத அரிய சிற்பங்களாகும். நடுகற்களில் ஊர் மக்களை காக்கும் பொருட்டு, ஆண்கள் கையில் ஆயுதம் ஏந்தி விலங்குகளை தாக்குவது போன்ற சிற்பங்கள் இருக்கும். ஆனால் இங்கு உள்ள சிற்பங்களில் பெண்கள் கையில் ஆயுதம் ஏந்தி நிற்கிறார்கள்.

இக்கோயில் கருவறை கோமுகியில் இத்தகைய அரிய சிற்பங்கள் காணப்படுகின்றன. யாழி ஒன்று யானையை துரத்த, யானை குதிரையை துரத்த, ஒரு பெண் பயந்து மரத்தில் தொற்றிக் கொண்டிருக்கிறாள். மற்றொரு பெண் சிறிய வாள் ஒன்றை கையில் ஏந்தி காட்டுப்பன்றி போன்ற ஒரு விலங்கை கழுத்தில் தாக்கும் காட்சிகள் சிற்பங்களாக அழகாக வடிவமைக்கப்பட்டு உள்ளன.

அதேபோல நாட்டியமாடும் பெண்கள், சங்கநாதம் ஒலிக்கும் சிவ கணங்களின் சிற்பங்கள் வரிசையாக வடிவமைக்கப்பட்டுள்ளன. 3-ம் ராஜராஜன் (13-ம் நூற்றாண்டு) காலத்தை சேர்ந்த இக்கல்வெட்டுகள் இக்கோவிலில் உள்ளன. சோழர் காலத்தில் திருப்பணி நடந்த கோவில்களில் இதுவும் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.

பல அரிய சிற்பங்கள் இக்கோயிலில் ஏராளமாக உள்ளன. அக்காலத்திலேயே பெண்களின் கலை நயத்தையும், வீரத்தையும் எந்த அளவுக்கு போற்றியிருந்தால் கோயில் கருவறை கோமுகியில் மக்கள் வழிபடுமிடத்திலேயே இந்த சிற்பங்களை அமைத்திருப்பார்கள் என்று எண்ண தோன்றுகிறது. நம் முன்னோர்கள் பெண்களின் மீது வைத்திருந்த மரியாதையும் கண் முன் தெரிகிறது. வீரமங்கைகளை போற்றியும் வந்துள்ளனர் என்பதும் தெரிய வருகிறது.

Advertisement

தலைப்பு செய்திகள்

ஆலய தரிசனம்: நமக்கு ஏன் முழு பலனும் கிடைப்பதில்லை? முழு பலனைத் தரும் ஆன்மீக நெறிமுறைகள்!
ஆலய தரிசனம்: நமக்கு ஏன் முழு பலனும் கிடைப்பதில்லை? முழு பலனைத் தரும் ஆன்மீக நெறிமுறைகள்!
ஏக்கருக்கு ரூ.10,000 நஷ்டமா? டெல்டாவை உலுக்கும் புதிய உர விலை உயர்வு பின்னணி!
ஏக்கருக்கு ரூ.10,000 நஷ்டமா? டெல்டாவை உலுக்கும் புதிய உர விலை உயர்வு பின்னணி!
"நம் ஏரி, நம் உயிர்நாடி! குறிச்சி கிராம மக்களின் அசாத்திய கூட்டு முயற்சி... மீண்டெழுந்தது 383 ஏக்கர் நீர்நிலை!"
கண்ணீர் வடிக்கும் காவிரி டெல்டா: குறுவை சாகுபடி கைநழுவுகிறது; சம்பா சாகுபடியாவது தப்புமா?
கண்ணீர் வடிக்கும் காவிரி டெல்டா: குறுவை சாகுபடி கைநழுவுகிறது; சம்பா சாகுபடியாவது தப்புமா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: இனிமே லஞ்சம் வாங்குவீங்களா? நகராட்சித்துறையில் லஞ்ச அதிகாரிகள் லிஸ்ட் எடுக்கும் முதலமைச்சர் விஜய்!
CM Vijay: இனிமே லஞ்சம் வாங்குவீங்களா? நகராட்சித்துறையில் லஞ்ச அதிகாரிகள் லிஸ்ட் எடுக்கும் முதலமைச்சர் விஜய்!
NEET UG Exam City Slip: நீட் மறுதேர்வு மைய விவரம் வெளியீடு; உடனே காண்பது எப்படி? ஹால் டிக்கெட் எப்போது?
NEET UG Exam City Slip: நீட் மறுதேர்வு மைய விவரம் வெளியீடு; உடனே காண்பது எப்படி? ஹால் டிக்கெட் எப்போது?
ADMK: தீர்ந்துபோன சக்தி இல்ல.. உங்களை தீர்த்துக்கட்டப்போகும் சக்தி..! விஜய்யை விளாசித் தள்ளிய அதிமுக!
ADMK: தீர்ந்துபோன சக்தி இல்ல.. உங்களை தீர்த்துக்கட்டப்போகும் சக்தி..! விஜய்யை விளாசித் தள்ளிய அதிமுக!
’’கட்சியையே காப்பாத்த முடில; சிரிப்பாய் சிரிக்கும் சிலுவம்பாளையம்’’- ஈபிஎஸ்ஸுக்கு தவெக பதிலடி
’’கட்சியையே காப்பாத்த முடில; சிரிப்பாய் சிரிக்கும் சிலுவம்பாளையம்’’- ஈபிஎஸ்ஸுக்கு தவெக பதிலடி
Duster 1.0 Turbo Petrol Review: புதிய ரெனால்ட் டஸ்டர் 1.0 டர்போ பெட்ரோல் SUV எப்படி இருக்கு.? வாங்குறது வொர்த்தா.? ரிவ்யூவ்
புதிய ரெனால்ட் டஸ்டர் 1.0 டர்போ பெட்ரோல் SUV எப்படி இருக்கு.? வாங்குறது வொர்த்தா.? ரிவ்யூவ்
Panaiyur Babu : விசிக மாஜி எம்எல்ஏ பனையூர் பாவுவை தட்டி தூக்கிய திமுக.! ஸ்டாலின் போட்ட செம ஸ்கெட்ச்- ஷாக்கில் திருமா
விசிக மாஜி எம்எல்ஏ பனையூர் பாவுவை தட்டி தூக்கிய திமுக.! ஸ்டாலின் போட்ட செம ஸ்கெட்ச்- ஷாக்கில் திருமா
Upcoming Maruti SUVs: கார் வாங்குற பிளான் இருக்கா.? Just வெயிட்.! நவீனமா, பவர்ஃபுல்லா 4 SUV-க்கள இறக்குது மாருதி; விவரம்
கார் வாங்குற பிளான் இருக்கா.? Just வெயிட்.! நவீனமா, பவர்ஃபுல்லா 4 SUV-க்கள இறக்குது மாருதி; விவரம்
திமுக லஞ்சம் வரலன்னு கிடப்புல போட்டாங்க? நீங்களும் அதே ரூட் எடுத்தா ரூ.5000 கோடி காலி - பாஜக வார்னிங்
திமுக லஞ்சம் வரலன்னு கிடப்புல போட்டாங்க? நீங்களும் அதே ரூட் எடுத்தா ரூ.5000 கோடி காலி - பாஜக வார்னிங்
Embed widget