சதாசிவப் பண்டாரத்தார் கும்பகோணம் அருகே திருப்புறம்பியத்தில் வைத்தியலிங்கப் பண்டாரத்தாருக்கும், மீனாட்சியம்மையாருக்கும் 1892ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி மகனாகப் பிறந்தார். 1910 ஆம் ஆண்டு பள்ளிப்படிப்பை முடித்த அவர், பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், வலம்புரி பாலசுப்பிரமணியப் பிள்ளை ஆகியோரிடம் தமிழ் இலக்கியமும் இலக்கணமும் கற்றுத் தேர்ந்தார். பின்னர் தாலுகா அலுவலகத்திலும், கும்பகோணம் உயர்நிலைப் பள்ளியிலும் சில ஆண்டுகள் பணியாற்றினார். பாணாதுறை உயர்நிலைப் பள்ளியில் 25 ஆண்டுகள் (1917-1942) தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். பணியில் இருந்த பொது “செந்தமிழ்” என்ற மாத இதழில் இவரது கட்டுரைகள் வெளியாகின.


1930 ஆம் ஆண்டு “முதலாம் குலோத்துங்க சோழன்” என்ற முதல் நூல் வெளியானது. 1942-1953, 1953-60 காலகட்டங்களில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழாராய்ச்சித் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். பல இடங்களுக்கும் சென்று சோழர் வரலாற்றை ஆய்வு செய்து “பிற்கால சோழர் சரித்தரம்” என்னும் பெரு நூலை எழுதினார். இது மூன்று தொகுதிகளாக 1949, 1951 மற்றும் 1961 ஆம் ஆண்டுகளில் வெளியானது. இரு தமிழ் இலக்கிய வரலாறு நூல்களும், பல தல வரலாற்று நூல்களையும் எழுதியுள்ளார். தமிழக அரசு இவரது படைப்புகளை நாட்டுடமையாக்கியுள்ளது. கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழாவில் கல்லாடம் அதன் காலம் என்ற தலைப்பில் பண்டாரத்தார் உரையாற்றினார் இவ்வுரை அறிஞர் பண்டாரத்தாருக்கு பெரும் புகழைத் தந்தது.




ஓய்வு கிடைக்கும் நேரங்களில் கும்பகோணம் வட்டத்தில் உள்ள பல ஊர்களுக்குச் சென்று கோவிலில் உள்ள கல்வெட்டுகளை குறிப்பு எடுத்து வந்து ஆய்வு செய்தார்.  அந்த ஆய்வு கண்ட முடிவுகளை அவ்வப்போது சதாசிவ பண்டாரத்தார் நீதிக்கட்சியின் கருத்துக்கள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார் கட்சிகள் நடத்திய ஒவ்வொரு மாநாட்டிலும் தவறாமல் கலந்து கொண்டார். பண்டாரத்தார் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆராய்ச்சித் துறையில் விரிவுரையாக பள்ளியில் சேர்ந்தார்.  


பிற்காலச் சோழர் சரித்திரத்தின் முதல் பாகம் 1949 ஆம் ஆண்டிலும்,  2 பாகம் 1953  ஆம் ஆண்டு வெளிவந்தன.  இதனை தொடர்ந்து சோழர் சரித்திரத்தின் மூன்றாம் பாகம் 1961 ஆம் ஆண்டு வெளிவந்தன. அதன் பின்னர் தான் பிற்காலச் சோழரின் பெருமை தமிழ் உலகம் அழிய தொடங்கியது. அதன்  பண்டாரத்தார் எழுதிய சோழர் சரித்திரம்,  அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுநிலை தமிழ் பயின்ற மாணவர்களுக்கு பாடமாக வைக்கப்பட்டது. நம்பகத் தன்மையோடு அறிஞர் சதாசிவபண்டாரத்தார் தமது நூல்களை எழுதிய காரணத்தினாலேயே அவரது பிற்கால சோழர் சரித்திரம் எனும் நூலை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு எழுத்தாளர்கள் தங்களது வரலாற்று நாவல்களை படைத்தார்கள்.


திருப்புறம்பயத்தில் தலவரலாறு, செம்பியன்மாதேவி தலவரலாறு, காவேரிபூம்பட்டினம் திருக்கோவிலூர் புராணம், தொல்காப்பியர் உரை முதலிய பல நூல்களையும் தமிழுக்கு அணிகலன்களாக செய்துள்ளார். மறைமலை அடிகளார், நாவலர் சோமசுந்தர பாரதியார், தமிழ் தாத்தா உவேசா, கவிமணி சேதுப்பிள்ளை, வையாபுரிப்பிள்ளை முதலிய பல தமிழர்கள் ஒரு நெருங்கிய நண்பராக விளங்கினார். சிறந்த சிவபக்தராக விளங்கினார் 1928 முதல் இறக்கும் வரை தமது பிறந்த ஊரான திருப்புறம்பியத்தில் உள்ள கோயில் சைவ சமய நால்வருக்கும் ஆண்டுதோறும் குருபூஜை நடத்தி வந்துள்ளார். மேலும் சைவ சமயக்குரவர் நால்வருக்கும் மண்டபம்கட்டி தந்துள்ளார். 15 க்கும் மேற்பட்ட ஊர்களில் வரலாற்றுச் சிறப்பினை ஆய்வின் மூலம் கண்டறிந்த கூறியுள்ளார்.




தஞ்சாவூர் இராசராசன் விழாவை முதன்முதலாக ஆரம்பித்தபோது அறிஞர் பண்டாரத்தார் அதுமுதல் சொற்பயிற்சி சிறப்பித்துள்ளார். 1959 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அறிஞர் பண்டாரத்தார் நோய்வாய்ப்பட்டால் தமது உடல் நோயுற்ற காலத்தில் கல்வித்துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராகவும் காணப்பட்டார்.  இறுதி காலத்திலும் தொடர்ந்து பணிகளை செய்து வந்தார். சொந்த மண்ணுக்கு பெருமை சேர்த்த அதிக சதவீதத்தில் வரலாற்று ஆராய்ச்சி தமிழ்ப்பணி தமிழ் கூறும் நல்லுலகம் என்றென்றும் நிலைத்திருக்கும் சதாசிவ பண்டாரத்தார் ஜனவரி 02 ஆம் தேதி 1960ஆம் ஆண்டு மறைந்தார்.


சோழர்கள் வாழ்க்கை வரலாற்றை உலகத்திற்கு ஆதாரத்துடன் தெளிவுடனும் எழுதிய சதாசிவபண்டாரத்தாரின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாட்களை தமிழக அரசோ, மாவட்ட நிர்வாகமோ, தமிழ் ஆர்வலர்களும் கண்டு கொள்ளாதது வேதனையான விஷயமாகும். தற்போது அக்கிராமத்திலுள்ளவர்கள், பெருமை வாய்ந்த சதாசிவபண்டாரத்தாரை மறந்து விடக்கூடாது என்பதற்கு நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தஞ்சையில் தமிழ்பல்கலைக்கழகம் கொண்டு வரவேண்டும் என்ற முதல் தீர்மானத்தை கடந்த 25.10.1925 ஆம் ஆண்டு நிறைவேற்றினார்.




எனவே, உலகத்தில் பல்வேறு நாடுகளை வென்று, தமிழர்களின் பெருமை நிலைநாட்டிய சோழர்களின் வரலாற்றை கண்டு பிடித்து, உலகத்திற்கு காட்டிய சதாசிவபண்டாரத்தாருக்கு நினைவு மண்டபம் அல்லது மணி மண்டபம் எழுப்ப வேண்டும் என அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.