தஞ்சாவூர் வல்லத்தில் கால்நடை மருத்துவமனை: ரூ.80 லட்சத்தில் நவீன வசதிகள்! விவசாயிகள் மகிழ்ச்சி
தவல்லம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் விவசாயிகள் ஏராளமான ஆடு, மாடு போன்றவற்றை வளர்த்து வருகின்றனர். நான்கு மாடுகள் இருந்தால் ஒரு குடும்பம் பிழைத்துக்கொள்ளும்’ என்று கிராமங்களில் கூறுவர்.

தஞ்சாவூர்: தஞ்சை அருகே வல்லத்தில் ரூ.80 லட்சம் மதிப்பில் புதிதாக கால்நடை மருத்துவமனைக்கு கட்டிடம் கட்டப்பட்டு நவீன வசதிகளை ஏற்படுத்தி தந்த தமிழக அரசுக்கு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பாராட்டும் நன்றியும் தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் விவசாயிகள் ஏராளமான ஆடு, மாடு போன்றவற்றை வளர்த்து வருகின்றனர். நான்கு மாடுகள் இருந்தால் ஒரு குடும்பம் பிழைத்துக்கொள்ளும்’ என்று கிராமங்களில் கூறுவர். இது உண்மையிலேயே சரியான வார்த்தையாகும்.
மாடு மட்டுமல்ல... தினசரி, வாராந்திர, மாதாந்திர, வருடாந்திர வருமானம் கிடைக்கும் வகையில் கிராமங்களில் ஆடு, கோழிகள் வளர்ப்பையும் விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பயிர் சாகுபடி இல்லாத காலத்தில் குடும்பத்தை காப்பாற்ற மாடு, ஆடுகள், கோழிகள் உதவுகிறது.
ஆட்டு இறைச்சி, பால், முட்டை என கால்நடைகளில் இருந்து கிடைக்கும் அனைத்துப் பொருள்களுக்குமே சிறப்பான சந்தை வாய்ப்புகள் உள்ளன. அவசரத் தேவைக்கும் கால்நடைகளை விற்று உடனடியாகப் பணமாக்கலாம். கிராமப்புற மக்களின் பொருளாதாரத் தேவையை பூர்த்தி செய்வதில் கால்நடைகள் பெரும் பங்கு வகிக்கிறது என்றால் மிகையில்லை. மிக முக்கியமாக விவசாயிகளின் பொருளாதாரத்தை காப்பாற்றுவதில் கால்நடைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இன்றைய காலக்கட்டத்தில் சாகுபடி பணிகள் நடக்காத போது வெகுவாக வருமானத்திற்கு கை கொடுப்பது கால்நடைகள்தான். இவ்வாறு கிராமப்புறத்தில் உள்ள விவசாயிகளுக்கு உற்ற தோழனாக கால்நடைகள் விளங்கி வருகின்றன. அந்த வகையில் வல்லம் பேரூராட்சி பகுதியை சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களில் ஆயிரக்கணக்கில் கால்நடைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
இந்த கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வல்லம் பேருந்து நிலையம் அருகில் கால்நடை மருத்துவமனை கடந்த 75 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. போதிய வசதிகள் இல்லாமல் இயங்கி வந்த இந்த கால்நடை மருத்துவனைக்கு தினமும் பல்வேறு கிராமங்களில் இருந்து கால்நடை வளர்ப்பவர்கள் சிகிச்சைக்காக அழைத்து வந்தனர்.
இட நெருக்கடி, நவீன வசதிகள் இல்லாமல் இருந்த இந்த கால்நடை மருத்துவமனையை மேம்படுத்தி பல்வேறு வசதிகள் செய்து தர திராவிட மாடல் அரசு நடவடிக்கை எடுத்தது. இதன்படி ரூ.80 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடமும், நவீன சிகிச்சை வசதிகளும் அமைக்கப்பட்டன. இதனால் தற்போது விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களின் கால்நடைகளை எவ்வித சிரமமும் இன்றி சிகிச்சை அளித்து செல்கின்றனர். தேவைளான வசதிகளும், புதிய கட்டிடமும் கட்டிக் கொடுத்த திராவிட மாடல் தமிழக அரசுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வல்லம் பேரூராட்சி தலைவர் செல்வராணி கல்யாணசுந்தரம் மற்றும் செயல் அலுவலர் ராஜசேகர் ஆகியோர் கூறுகையில், 75 ஆண்டுகள் பெருமையுடைய இந்த கால்நடை மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் கட்ட தமிழக அரசு ரூ.80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. இந்த நிதியை தஞ்சை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மாஹின் அபுபக்கர் வழிகாட்டுதலின் பேரில் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு கால்நடை மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
மேலும் பல்வேறு பணிகளும் சிறப்பாக நடந்துள்ளது. இந்த கால்நடை மருத்துவமனை வல்லம் பேரூராட்சியை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் ஆடு, மாடு மற்றும் கோழி, வெள்ளாடுகள் போன்றவற்றை வளர்த்து வருகின்றனர். இவற்றுக்கு சிகிச்சை அளிக்க மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்டப்பட்டு தற்போது செயல்பாட்டு வந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் வல்லம் பேரூராட்சியில் நடந்துள்ளது என்றனர்.
ட்ரெண்டிங் செய்திகள்






















