வல்லம் மக்களுக்கு நவீன தகன மேடை: முதல்வர் ஸ்டாலின் அரசின் சாதனை! | மக்கள் நெகிழ்ச்சி
வல்லம் பேரூராட்சியை சேர்ந்த பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மட்டும் இந்த தகனமேடை பயன்பட்டு வந்தது .

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் பேரூராட்சி மக்கள் பயன்பாட்டிற்காக ரூ.1.49 கோடி மதிப்பில் புதிய தகனமேடையை தமிழக அரசு கட்டி தந்துள்ளது. இதற்கு பொதுமக்கள் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.
தஞ்சை அருகே அமைந்துள்ளது வல்லம் தேர்வு நிலை பேரூராட்சி. இங்கு 15 வார்டுகள் உள்ளன. வல்லம் பகுதியில் ஏராளமான பள்ளிகள், கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், தொழிற்பயிற்சி நிலையங்கள், நர்சிங் பயிற்சி அளிக்கும் கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளது. இதனால் வல்லம் மிக முக்கியமான பகுதியாக விளங்கி வருகிறது. வல்லம் பேரூராட்சி மக்கள் தங்கள் உறவினர்கள் இறந்து விட்டால் அவர்களை தகனம் செய்ய பழைய கட்டிடம் செயல்பாட்டில் இருந்து வந்தது .
வல்லம் பேரூராட்சியை சேர்ந்த பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மட்டும் இந்த தகனமேடை பயன்பட்டு வந்தது . இந்நிலையில் 2024-25ம் ஆண்டு கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வார்டு எண்:11 சென்னம்பட்டி ரோடு பகுதியில் புதிய நவீன எரிவாயு தகனமேடை அமைக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு ரூ.1.49 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.
தொடர்ந்து அனைத்து வசதிகளின் கூடிய நவீன எரிவாயு தகனமேடை அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த தகரமேடையை வல்லம் பேரூராட்சி மக்கள் மட்டும் இன்றி சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த மக்களும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் தாராளமான இடவசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் தஞ்சாவூர் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ஈமச்சடங்கு கூடம் ரூபாய் 15 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தங்களது நன்றி மற்றும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், தமிழக அரசு ஒரு கோடியே 49 லட்சம் மதிப்பில் நவீன எரிவாயு தகன மேடை மக்களின் வசதிக்காக அமைத்துக் கொடுத்துள்ளது. இதன் வாயிலாக வல்லம் பேரூராட்சி தொகுதிக்குட்பட்ட மக்கள் மட்டுமின்றி சுற்றுப்புற கிராமப் பகுதிகளை சேர்ந்த மக்களும் பயன் பெறுகின்றனர். மக்களின் தேவைகளை உணர்ந்து அதைக் கேட்க பல்வேறு வளர்ச்சிப் பணிகளை வல்லம் பேரூராட்சியில் தமிழக அரசு மேற்கொண்டுள்ளது இதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.
ட்ரெண்டிங் செய்திகள்






















