மேலும் அறிய

ஆர்ப்பாட்டங்களால் அதிர்ந்த தஞ்சாவூர்: ஒருபுறம் விவசாயிகள், மறுபுறம் டாஸ்மாக் ஊழியர்கள்

தேர்தல் வாக்குறுதிப்படி கூட்டுறவு வங்கிகளில் பெற்ற அனைத்து பயிர் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். நகைக்கடனையும் முழுமையாக ரத்து செய்ய வேண்டும்

தஞ்சாவூர்:  பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக விவசாய சங்கம் சார்பில் தமிழக அரசை கண்டித்து தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில துணைத்தலைவர் சுகுமாரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஜெயபால், மாவட்ட செயலாளர் யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், தேர்தல் வாக்குறுதிப்படி கூட்டுறவு வங்கிகளில் பெற்ற அனைத்து பயிர் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். நகைக்கடனையும் முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும் உர விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த மாநில அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பின்னர் மாநில துணைத்தலைவர் சுகுமாரன் நிருபர்களிடம் கூறுகையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு, தேர்தல் வாக்குறுதியில் 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளின் பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதாகவும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்போருக்கு 50 சதவீத கடன் தள்ளுபடி வழங்கப்படும் என்றும் அறிவித்தது. ஆனால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நகைக்கடன் தள்ளுபடி விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்.


ஆர்ப்பாட்டங்களால் அதிர்ந்த தஞ்சாவூர்: ஒருபுறம் விவசாயிகள், மறுபுறம் டாஸ்மாக் ஊழியர்கள்

மேலும் உர விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை தடுக்க மத்திய அரசுக்கு மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்றார். விவசாயிகளின் இந்த ஆர்ப்பாட்டத்தால் கலெக்டர் அலுவலக பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை மாவட்ட டாஸ்மார்க் கடை பணியாளர்கள் இன்று தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் தமிழ்நாடு மாநில வாணிப கழக மாவட்ட மேலாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தை முற்றுகையிட்டு தஞ்சை மாவட்ட டாஸ்மார்க் கடை பணியாளர்கள் மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் அல்லது டெண்டர் எடுத்தவர்கள் மூலம் காலி  பாட்டில்கள் திரும்ப பெற வேண்டும்.

டாஸ்மாக் பணியாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும். அதேபோல் டாஸ்மாக் கடைகளில் மின்கட்டணம், கடை வாடகை கட்டணம் அனைத்தையும் அரசே ஏற்க வேண்டும். இந்த காலி பாட்டில்கள் திரும்பப்பெறும்  திட்டம்,  மின்சார கட்டணம், காலி பாட்டில்களை  வைக்கும் கட்டடத்திற்கு வாடகை என ஒரு மாதத்திற்கு சுமார் ரூ. 1.50 லட்சத்திற்கு மேல் செலவாகிறது. அதனை அரசு ஏற்று நடத்த வேண்டும்.

தற்போது தவெக ஆட்சியில் அடையாளம் தெரியாதவர்கள் நாங்கள் தவெக நிர்வாகி என சொல்லிக்கொண்டு டாஸ்மாக் கடைகளை வீடியோ எடுத்து கூடுதலாக பணம் பெறப்படுகிறது என அட்டூழியம் செய்து வருகிறார்கள். இதனால் டாஸ்மாக் பணியாளர்கள் கடைகளில் வேலை செய்வதில் இடர்பாடுகள் ஏற்படுகிறது.  இவர்களால் டாஸ்மாக் பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களை திரும்ப பணிக்கு வர ஆணை வழங்க வேண்டும். அவற்றையெல்லாம் சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 136 டாஸ்மாக் கடைகளும் இன்று அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement

தலைப்பு செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை... டிரைவரை போக்சோவில் கைது செய்து போலீசார் அதிரடி
சிறுமிக்கு பாலியல் தொல்லை... டிரைவரை போக்சோவில் கைது செய்து போலீசார் அதிரடி
ஆற்றில் சரித்திர பதிவேடு குற்றவாளி சடலமாக மீட்பு – உடலை வைத்து உறவினர்கள் திடீர் சாலை மறியல்!
ஆற்றில் சரித்திர பதிவேடு குற்றவாளி சடலமாக மீட்பு – உடலை வைத்து உறவினர்கள் திடீர் சாலை மறியல்!
உயிருக்கு உலை வைக்கும் சக்கரா வாய்க்கால்! அதிகாரிகளே, எப்போது தடுப்புச்சுவர் கட்டப்போகிறீர்கள்?
உயிருக்கு உலை வைக்கும் சக்கரா வாய்க்கால்! அதிகாரிகளே, எப்போது தடுப்புச்சுவர் கட்டப்போகிறீர்கள்?
150 ஆண்டுகாலக் காத்திருப்பு... 120% நெரிசலில் தவிக்கும் ரயில் பாதை! விடிவு காலம் எப்போது?
150 ஆண்டுகாலக் காத்திருப்பு... 120% நெரிசலில் தவிக்கும் ரயில் பாதை! விடிவு காலம் எப்போது?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’’3 மாதங்களில் ஆட்சி கவிழும்னு ஸ்டாலின் சொல்லவே இல்லை, நடந்தது இதுதான்..’’ தங்கம் தென்னரசு விளக்கம்
’’3 மாதங்களில் ஆட்சி கவிழும்னு ஸ்டாலின் சொல்லவே இல்லை, நடந்தது இதுதான்..’’ தங்கம் தென்னரசு விளக்கம்
LPG Cylinder: இனி 4 சிலிண்டருக்கு தான்..! விலையை ஏற்றி, மானியத்தையும் குறைத்த மத்திய அரசு - காங்., சாடல்
LPG Cylinder: இனி 4 சிலிண்டருக்கு தான்..! விலையை ஏற்றி, மானியத்தையும் குறைத்த மத்திய அரசு - காங்., சாடல்
Longest Serving PM Modi: ‘பண்டிட் நேருவையே மிஞ்சிய நரேந்திர மோடி‘; துள்ளிக் குதிக்கும் பாஜகவினர்; அப்படி என்ன சாதனை.?
‘பண்டிட் நேருவையே மிஞ்சிய நரேந்திர மோடி‘; துள்ளிக் குதிக்கும் பாஜகவினர்; அப்படி என்ன சாதனை.?
Trump Vs Netanyahu: “உங்கள தனியா நிக்க வச்சுடுவேன்“ - நெதன்யாகுவுக்கு எச்சரிக்கை; ஈரானுக்காக ‘U‘ டர்ன் அடித்த ட்ரம்ப்
“உங்கள தனியா நிக்க வச்சுடுவேன்“ - நெதன்யாகுவுக்கு எச்சரிக்கை; ஈரானுக்காக ‘U‘ டர்ன் அடித்த ட்ரம்ப்
கட்டுமானப் பொருட்கள் கடும் விலை உயர்வு; பதுக்கல் காரணமா? அரசு உடனே தலையிட கோரிக்கைConstruction materials prices have skyrocketed; Is hoarding the reason? Request for immediate government intervention
கட்டுமானப் பொருட்கள் கடும் விலை உயர்வு; பதுக்கல் காரணமா? அரசு உடனே தலையிட கோரிக்கைConstruction materials prices have skyrocketed; Is hoarding the reason? Request for immediate government intervention
TN By-Election: இடைத்தேர்தலுக்கு ரெடி.. ADMK MLA-க்களுக்கு வாய்ப்பு மறுத்த TVK? சொந்த பாய்ஸிற்கு ஜாக்பாட்..!
இடைத்தேர்தலுக்கு ரெடி.. ADMK MLA-க்களுக்கு வாய்ப்பு மறுத்த TVK? சொந்த பாய்ஸிற்கு ஜாக்பாட்..!
Top 10 News Headlines: முதலமைச்சரை சந்தித்த அன்புமணி, அமைச்சருக்கு ஷாக், ட்ரம்ப் வார்னிங் - 11 மணி வரை இன்று
முதலமைச்சரை சந்தித்த அன்புமணி, அமைச்சருக்கு ஷாக், ட்ரம்ப் வார்னிங் - 11 மணி வரை இன்று
US H-1B Visa Fee: ஹேப்பி அண்ணாச்சி.! H-1B விசா கட்டணம் ரத்து; ட்ரம்ப்புக்கு ஆப்பு வைத்த அமெரிக்க நீதிமன்றம்
ஹேப்பி அண்ணாச்சி.! H-1B விசா கட்டணம் ரத்து; ட்ரம்ப்புக்கு ஆப்பு வைத்த அமெரிக்க நீதிமன்றம்
Embed widget