மறு வாழ்க்”கை” கொடுத்த மருத்துவமனை... நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த வடமாநில வாலிபர்
மிகவும் துரிதமாகவும், துல்லியமாகவும் இந்த அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் குழுவினர் வாலிபர் ஜூவலை தங்கள் கண்காணிப்பில் தொடர்ந்து பார்த்து வந்தனர்.

தஞ்சாவூர்: மறு வாழ்க்”கை” கொடுத்த தஞ்சாவூர் காமாட்சி மெடிக்கல் சென்டர் டாக்டர்கள் மற்றும் நிர்வாகத்திற்கு வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர் மனம் நிறைந்து நன்றி கூறினார்.
வடமாநிலத்தை சேர்ந்த 27 வயதான வாலிபர் ஜூவல். இவர் தன் குடும்பத்தை காக்க, அவர்களின் வாழ்க்கைக்காக தஞ்சாவூருக்கு வந்து ஒரு நெல் அரவை ஆலையில் வேலை பார்த்து வந்தார். அப்போது இயந்திரத்தை சுத்தம் செய்யும் எதிர்பாராமல் அவரது கை இயந்திரத்தில் சிக்கியது. இதில் அவரது வலது கையில் உள்ள எலும்புகள் மற்றும் சதை சிதைந்து அதிக ரத்தம் வெளியேறி செயலிழந்து விட்டது.

உடன் அவருடன் வேலை செய்தவர்கள் ஜூவலை மீட்டு அவரை ஆம்புலன்சு மூலம் தஞ்சாவூர் ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டரின் அவசர சிகிச்சை பிரிவிற்கு அழைத்து வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் குழுவினர் அவருக்கு கையில் ரத்த ஓட்டம் நின்றிருப்பதை அறிந்து உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர்.
தொடர்ந்து மேலும், அவரின் உறவினர்களின் ஒப்புதலோடு எலும்பு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை மூத்த மருத்துவரும், துறை தலைவருமான டாக்டர். செந்தில்குமார், எலும்பு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர். கிஷோர் குமார் ஆகியோரின் திறமை வாய்ந்த மருத்துவ குழுவை கொண்டு மிக துரித நேரத்தில் கையின் ரத்த ஓட்டத்தை சீராக்கி, சிதைந்த எலும்புகள் மற்றும் தசைகளுக்கு உயர் தொழில்நுட்ப மருத்துவ உபகரணங்களை கொண்டு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்தனர்.
மிகவும் துரிதமாகவும், துல்லியமாகவும் இந்த அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் குழுவினர் வாலிபர் ஜூவலை தங்கள் கண்காணிப்பில் தொடர்ந்து பார்த்து வந்தனர். 28 நாட்கள் இவ்வாறு தங்களின் நேரடி பார்வையில் பார்த்து நலம் பெற செய்தனர். இந்த அறுவை சிகிச்சை செய்த பின்னர் அவரின் கைகளுக்கு இதர மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு அந்த வடமாநில வாலிபர் ஜூவல் தனது சொந்த மாநிலத்திற்கு திரும்பினார்.
டிஸ்சார்ஜ் செய்த குறுகிய நாட்களிலேயே வேலைக்கு சென்ற அந்த வாலிபர் தனது வேலைகளை எப்போதும் போல் இயல்பாக செய்தார். சொந்த மாநிலத்திற்கு ஜூவல் சென்ற பின்னரும் தஞ்சாவூர் காமாட்சி மெடிக்கல் சென்டர் டாக்டர்கள் குழுவினர் தொலைபேசியிலும் அவருக்கு தேவையான ஆலோசனைகளை அளித்து வந்தனர். இதனால் முழுமையாக குணமடைந்த ஜூவல் தனக்கு மறு வாழ்க்”கை” அளித்த காமாட்சி மெடிக்கல் சென்டரை தேடி மீண்டும் வந்தார்.
அறுவை சிகிச்சை செய்து சீரான கையை கொண்டு அரசு தேர்வெழுதி வெற்றி பெற்றதை தனக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் குழுவினரிடம் தெரிவித்து தனக்கு வாழ்வளித்த டாக்டர்களுக்கும், மருத்துவ குழுவினருக்கும், மருத்துவமனை நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்தார்.





















