மேலும் அறிய

என்னாங்க இது... தத்தளித்தார்கள் என்று காப்பாற்றினால் கஞ்சா கடத்தியவர்களா?

அதிராம்பட்டினம் கடற்கரை போலீசார்,  மூட்டைகளை பிரித்து பார்த்த போது, கஞ்சா பண்டல்கள் இருப்பது தெரியவந்தது.

தஞ்சாவூர்: நடுக்கடலில் தத்தளித்தவர்கள் கஞ்சா கடத்தியவர்களா என்று மீட்டு கொண்டு வந்த மீனவர்கள் அதிர்ச்சி அடைந்த சம்பவம் தஞ்சை மாவட்டத்தில் நடந்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன், ராமச்சந்திரன் என்ற மீனவர்கள், மறவக்காடு கடற்பகுதியில் நேற்று அதிகாலை 5:30 மணியளவில், மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது, டீசல் கேனை பிடித்தப்படி இருவர் தத்தளித்துக்கொண்டு இருந்தனர். அவர்களை கண்ட சுப்பிரமணியன், ராமசந்திரன் கடலில் தத்தளித்த இருவரையும் மீட்டனர். 

என்னாங்க இது... தத்தளித்தார்கள் என்று காப்பாற்றினால் கஞ்சா கடத்தியவர்களா?

மேலும், மீட்கப்பட்ட இருவரின் அருகே ஏழு மூட்டைகள் மிதந்துள்ளன. இதுகுறித்து, சுப்பிரமணியன் அதிராம்பட்டினம் கடலோர போலீசாருக்கு தகவல் அளித்து விட்டு, மீட்கப்பட்ட இரண்டு நபர்களையும், மூட்டைகளையும் தங்களின் படகில் ஏற்றிக்கொண்டு, கீழத்தோட்டத்திற்கு வந்தனர்.  அங்கு சென்ற, அதிராம்பட்டினம் கடற்கரை போலீசார்,  மூட்டைகளை பிரித்து பார்த்த போது, கஞ்சா பண்டல்கள் இருப்பது தெரியவந்தது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மூட்டைகளையும், மீட்கப்பட்ட இருவரையும் அதிராம்பட்டினம் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். 

அதிராம்பட்டினம் போலீசார் நடத்திய விசாரணையில், இலங்கை, தலைமன்னார் பகுதியை சேர்ந்த அமலதாசன் மகன் அஜந்தன் (36), வரப்பிரகாசம் மகன் ஜீவானந்தம் (51) என்பதும் தெரியவந்தது. மேலும், தமிழகத்தை சேர்ந்த கஞ்சா வியாபாரிகள் மூலம், சர்வதேச எல்லையில், கஞ்சா மூட்டைகளை படகில் மாற்றி இலங்கைக்கு கடத்தி செல்ல முயன்றுள்ளனர். ஆனால், படகு சேதமடைந்த நிலையில், தண்ணீரில் படகு மூழ்கியது என்பதும் தெரிய வந்தது. 

இருப்பினும், அஜந்தன், ஜீவானந்தம் இருவரும் கஞ்சா மூட்டையை உடலில் கட்டிக்கொண்டு, கடலில் தத்தளித்துள்ளனர். காற்றின் வேகத்தால், இந்திய கடல்பகுதியில் வந்ததால், கீழத்தோட்டம் மீனவர்களால் அஜந்தன், ஜீவானந்தம் மீட்கப்பட்டது தெரியவந்தது. 

இதையடுத்து அதிராம்பட்டினம் போலீசார், அஜந்தன், ஜீவானந்தம் இருவரையும் கைது செய்து, ஏழு மூட்டைகளில் இருந்த 90 பண்டல்கள் அடங்கிய சுமார் 200 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவை பறிமுதல், கடல் வழியாக கஞ்சாவை இலங்கைக்கு கடத்த முயன்ற கும்பல் குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு 50 லட்சம் ரூபாய் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அதிராம்பட்டினம் பகுதியில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
DMK CONGRESS Alliance: Shut UP..! கூட்டணி பற்றி யாரும் பேசாதீங்க... காங். நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்ட செல்வப்பெருந்தகை
Shut UP..! கூட்டணி பற்றி யாரும் பேசாதீங்க... காங். நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்ட செல்வப்பெருந்தகை
மாணவர்களே.. பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு! விடுமுறை இல்லை- வெளியான பரபரப்பு தகவல்!
மாணவர்களே.. பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு! விடுமுறை இல்லை- வெளியான பரபரப்பு தகவல்!
திமுக தேர்தல் வாக்குறுதி 2021: முதலமைச்சர் ஸ்டாலின் VS அன்புமணி ராமதாஸ் - முழு விவரம்!
திமுக தேர்தல் வாக்குறுதி 2021: முதலமைச்சர் ஸ்டாலின் VS அன்புமணி ராமதாஸ் - முழு விவரம்!
ABP Premium

வீடியோ

Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
DMK CONGRESS Alliance: Shut UP..! கூட்டணி பற்றி யாரும் பேசாதீங்க... காங். நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்ட செல்வப்பெருந்தகை
Shut UP..! கூட்டணி பற்றி யாரும் பேசாதீங்க... காங். நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்ட செல்வப்பெருந்தகை
மாணவர்களே.. பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு! விடுமுறை இல்லை- வெளியான பரபரப்பு தகவல்!
மாணவர்களே.. பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு! விடுமுறை இல்லை- வெளியான பரபரப்பு தகவல்!
திமுக தேர்தல் வாக்குறுதி 2021: முதலமைச்சர் ஸ்டாலின் VS அன்புமணி ராமதாஸ் - முழு விவரம்!
திமுக தேர்தல் வாக்குறுதி 2021: முதலமைச்சர் ஸ்டாலின் VS அன்புமணி ராமதாஸ் - முழு விவரம்!
வங்கக் கடலில் புயல் சின்னம்: அடுத்த 7 நாட்களுக்கு மழை எச்சரிக்கை! மீனவர்கள் கவனத்திற்கு!
வங்கக் கடலில் புயல் சின்னம்: அடுத்த 7 நாட்களுக்கு மழை எச்சரிக்கை! மீனவர்கள் கவனத்திற்கு!
TN Rain Alert: ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை! சென்னை, கடலூர் உட்பட 4 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை - உஷார் மக்களே!
TN Rain Alert: ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை! சென்னை, கடலூர் உட்பட 4 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை - உஷார் மக்களே!
இன்னும் 30 நாள் தான்.! தமிழகத்திற்கான கனவு திட்டம் வரப்போகுது- முதல்வர் ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு
இன்னும் 30 நாள் தான்.! தமிழகத்திற்கான கனவு திட்டம் வரப்போகுது- முதல்வர் ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு
New Cars Launch: டாடா முதல் மாருதி வரை... இந்தியாவிற்கு வரப்போகும் 7 புதிய கார்கள் இதுதான் - ரெடியா இருங்க!
New Cars Launch: டாடா முதல் மாருதி வரை... இந்தியாவிற்கு வரப்போகும் 7 புதிய கார்கள் இதுதான் - ரெடியா இருங்க!
Embed widget