தஞ்சாவூர்: எளிமைக்கு மறுபெயராக விளங்கும் தஞ்சாவூர் மேயர் சண். ராமநாதன் மருத்துவக்கல்லூரி பகுதியில் நடந்த பொங்கல் விழாவில் தாளம் தப்பாமல் பறை இசை வாசித்து மக்கள் மனதை கவர்ந்தார். இந்த வீடியோ அனைத்து சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது. 

எளிமைக்கும் மக்கள் நெருக்கத்திற்கும் மறுபெயராக திகழும் தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், பொங்கல் விழா நிகழ்ச்சியில் பறை இசைக்கருவியை வாசித்து பொதுமக்களின் பாராட்டைப் பெற்றுள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தஞ்சை மாநகரம் மத்திய மாவட்டம் சார்பில் மருத்துவக்கல்லூரி பகுதியில் திராவிட பொங்கல் விழா நடந்தது.

இந்த விழாவில் பாரம்பரியம் மிக்க பறை இசைக்கருவியை  கலைஞர்கள் உற்சாகமாக இசைத்து அந்த பகுதியையே வைபாக மாற்றிக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த தஞ:சாவூர் மேயர் சண்.ராமநாதன் இசைக்கலைஞரிடம் இருந்து பறை கருவியை வாங்கி தன் தோளில் மாட்டிக் கொண்டு மற்ற கலைஞர்கள் பறையை இசைக்க அவர்களுடன் இணைந்து அட்சுரம் பிசகாமல், தாளம் தப்பாமல் பறை வாசித்தது அனைவரையும் உற்சாகப்படுத்தியது.

தஞ்சை மாநகராட்சியின் மேயர் என்ற எல்லைகளைத் தாண்டி, மக்களோடு மக்களாக கலந்து கொண்டு அவர் செய்த இந்த செயல், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் வியக்கச் செய்தது. மக்களின் கவனத்தையும்  ஈர்த்தது. தமிழர்களின் பாரம்பரிய கலைகளுக்கு மரியாதை செலுத்தும் மேயர் சண்.ராமதனின் இந்த அணுகுமுறை, பண்பாடு மற்றும் சமூக ஒற்றுமையை வலியுறுத்துவதாக அமைந்தது. அதிகார பாங்கு இல்லாமல், எளிமையுடன் செயல்படும் மேயர் சண். ராமநாதனின் இந்த செயல், பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

எளிமைக்கும் மக்கள் நெருக்கத்துக்கும் மறுபெயராக விளங்கும் தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் மிகவும் எளிமையாக பறை கருவியை வெகுநேரம் தாளம் தப்பாமல் வாசித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  பொங்கல் விழா நிகழ்ச்சியில் பறை இசைக்கருவியை வாசித்து அனைவரையும் கவர்ந்து அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் இழுத்து விட்டார் என்றே கூற வேண்டும். 

அதிகார பாங்கு இல்லாமல், மக்களோடு மக்களாக கலந்து கொண்டு விழாவில் பங்கேற்று அட்டகாசமாக பறை கருவியை வாசித்த மேயர் சண்.ராமநாதனின் இந்த செயல், பொதுமக்களின் பாராட்டையும் நெகிழ்ச்சியையும் பெற்றுள்ளது. “இவர் உண்மையிலேயே எளிமையின் அடையாளம்”தான்  என்று அனைவரும் கருத்து தெரிவித்தனர். தமிழர் பாரம்பரிய கலைகளுக்கு மரியாதை அளிக்கும் இத்தகைய நிகழ்வுகள், இளைஞர்களுக்கும் சமூகத்திற்கும் ஒரு நல்ல முன்மாதிரியாக அமைகின்றன என்று சமூக ஆர்வலர்கள் தரப்பில் தெரிவித்தனர். 

தஞ்சாவூர் கலை மற்றும் பண்பாட்டின் தலைநகரம் என்பதை நன்கு உணர்ந்த மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் பாரம்பரிய இசைக்கருவியை ஏந்தி இசைத்தது அந்தத் துறை சார்ந்த கலைஞர்களுக்குப் பெருமிதத்தை அளித்துள்ளது. கலைஞர்களுக்கு ஊக்கம் அளிக்கும் செயலாக இது பார்க்கப்படுவது மட்டுமின்றி கெத்து காட்டும் நபர்கள் மத்தியில் மக்களின் சொத்து நான் என்பதை மிகவும் எளிமையுடன் மேயர் சண்.ராமநாதன் மீண்டும், மீண்டும் நிரூபித்து வருகிறார். மேயர் பறை வாசித்த நிகழ்வு வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமல்லாமல், நாட்டுப்புறக் கலைஞர்களை ஊக்கப்படுத்தும் ஒரு செயலாகப் பார்க்கப்படுகிறது.

அவர்களுடன் இணைந்து தாளம் தப்பாமல் மேயர் சண்.ராமநாதன் பறை வாசித்த வீடியோ சமூக வலைதளங்கள் அனைத்திலும் வைரலாகி வருகிறது. மேயர் சண்.ராமநாதன் பறை வாசிக்கும்போது 'தாளம்' மற்றும் 'வேகம்' ஆகியவை முறையான பயிற்சி பெற்ற கலைஞர்களுக்கு இணையாக இருந்ததாக அங்கிருந்த மூத்த கலைஞர்கள் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.