மேலும் அறிய

தொடங்கப்பட்ட குறுவைப்பணிகளை நிறுத்திய தஞ்சாவூர் விவசாயிகள்?

இந்தாண்டு குறுவை சாகுபடியை கைவிடுவது தவிர வேறு வழியில்லை என்று வலியுடன் விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.மேட்டூர் அணையில் நீர்மட்டம் போதிய அளவில் இருக்க வேண்டும்.

தஞ்சாவூர்: ஆண்டுதோறும் வழக்கமாக ஜூன் 12-ம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் அதே நம்பிக்கையில் காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் குறுவை சாகுபடிக்கான ஆயத்தப்பணிகளை ஆவலுடன் தொடங்கினர்.

ஆனால், தற்போது மேட்டூர் அணையின் நீர் இருப்பு மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால், குறிப்பிட்ட தேதியில் அணை திறக்கப்பட வாய்ப்பில்லை என்ற சூழல் உருவாகியுள்ளது. இதனால் இந்தாண்டு குறுவை சாகுபடியை கைவிடுவது தவிர வேறு வழியில்லை என்று வலியுடன் விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்குத் தண்ணீர் திறக்கப்பட வேண்டுமெனில், அணையின் நீர்மட்டம் போதிய அளவில் இருக்க வேண்டும். ஆனால் அணையின் நீர் இருப்பு கணிசமாகக் குறைந்துள்ளது. தற்போதைய நீர் இருப்பைக் கொண்டு அணையத் திறந்தால், அது பாசனத் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்யாது என்பதால் அணை திறப்பு தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

வழக்கமாக மே மாதம் 2வது வாரத்திலேயே உழவுப் பணிகள், நாற்று விடுதல் போன்ற பணிகளில் தீவிரமாக இறங்கும் விவசாயிகள், இந்த ஆண்டு பருவமழை கைகொடுக்கும் மற்றும் அணை வழக்கம்போல் திறக்கப்படும் என்ற நம்பிக்கையில் பணிகளைத் தொடங்கினர். ஆனால் தற்போதைய நிலையில் எல் நினோ பாதிப்பால் பருவமழை தாமதமாகி உள்ளது.

இதுகுறித்து டெல்டா பகுதி விவசாயிகள் தரப்பில் கூறுகையில், இதனால், இந்த ஆண்டு குறுவை சாகுபடியைத் தொடங்க முடியாமல் லட்சக்கணக்கான விவசாயிகள் கவலையிலும், பெருத்த ஏமாற்றத்திலும் மூழ்கியுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக இருந்த சாதனை நெல் உற்பத்தி நிலை மாறி, நடப்பாண்டில் ஒரேயொரு போக சம்பா சாகுபடியாவது செய்ய வாய்ப்பு இருக்குமா என்ற சோகமான சூழல் உருவாகியுள்ளது.

2020-ஆம் ஆண்டு முதல் கடந்த 4 ஆண்டுகளில் (2023 தவிர) அணை சரியான நேரத்தில் திறக்கப்பட்டது. இதனால் குறுவை, சம்பா, தாளடி என முப்போக சாகுபடியும் வெற்றிகரமாக அமைந்து, நெல் உற்பத்தியில் தமிழகம் சாதனை படைத்தது. கடந்த 2024-இல் நீர் இருப்பு குறைவால் ஜூலை 28-க்கு அணை திறப்பு தள்ளிப்போனாலும், 2025-ல் உரிய காலத்தில் திறக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால், நடப்பாண்டு மீண்டும் நிலைமை மோசமாகி எங்களின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்தி வருகிறது. ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதியை எதிர்பார்த்துதான் எங்களது வாழ்வாதாரமே தொடங்குகிறது. இந்த ஆண்டும் நம்பி சாகுபடி பணிகளில் இறங்கினோம். ஆனால், தற்போது அணை திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவது எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பம்ப் செட் பாசன வசதி உள்ள விவசாயிகள் குறைந்த அளவில்தான் உள்ளனர். அதிகளவு ஆற்று நீர் பாசனத்தை நம்பியே இருக்கிறோம். அதனால் எங்களால் முழுமையாகக் குறுவை சாகுபடியைக் மேற்கொள்ள இயலாது. போதிய தண்ணீர் இல்லாமல் போனால், நடப்பாண்டு குறுவை சாகுபடியைக் கைவிடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

அணை திறக்கப்படாவிட்டால் பல லட்சம் ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு, கர்நாடக அரசிடமிருந்து தமிழகத்திற்குத் தர வேண்டிய உரிய தண்ணீரைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலத்தடி நீரைப் பயன்படுத்தி விவசாயம் செய்பவர்களுக்கு மும்முனை மின்சாரம் தடையின்றி வழங்கப்பட வேண்டும் என்றும் விவசாய அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

அரசு மாற்று ஏற்பாடுகளைச் செய்யாவிட்டால், இந்த ஆண்டின் குறுவை சாகுபடி முற்றிலும் கேள்விக்குறியாகி, விவசாயிகளின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் என அஞ்சப்படுகிறது.

Advertisement

தலைப்பு செய்திகள்

பேராவூரணி கல்லூரியில் சுகாதாரமற்ற கழிப்பறைகள்: மாணவ, மாணவிகள் அவதி
பேராவூரணி கல்லூரியில் சுகாதாரமற்ற கழிப்பறைகள்: மாணவ, மாணவிகள் அவதி
தஞ்சாவூரில் இன்னைக்கு இப்படிதாங்க இருந்துச்சு வானிலை... இரவு மழை பெய்யுமா?
தஞ்சாவூரில் இன்னைக்கு இப்படிதாங்க இருந்துச்சு வானிலை... இரவு மழை பெய்யுமா?
Thanjavur power cut 08.07.2026:  
Thanjavur power cut 08.07.2026:  "நாளைக்கு கரண்ட் லீவ் போட்டுருக்கு... நீங்க இன்னைக்கே ரெடி ஆயிடுங்க"  தஞ்சையில் 8 மணி நேர மின்தடை
பேராவூரணியில் போலீசார்  அதிரடி: விதிமீறல் வாகனங்களுக்கு அபராதம் 
பேராவூரணியில் போலீசார்  அதிரடி: விதிமீறல் வாகனங்களுக்கு அபராதம் 
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TASMAC SHOP : மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
Teacher Eligibility Test : டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
Holiday Special Bus : 2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
Embed widget