தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று காலை தொடங்கும் 10ம் வகுப்பு தேர்வை 228 அரசு பள்ளிகளும் 68 அரசு உதவி பெறும் பள்ளிகளும் மற்றும் 118 தனியார் பள்ளிகள் என 414 பள்ளிகளில் பயிலும் 14,930 மாணவர்கள், 15,150 மாணவிகள் உட்பட மொத்தம் 30,080 பேர் எழுதுகின்றனர்.

Continues below advertisement

தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் 2025-2026 ஆம் கல்வி ஆண்டிற்கான இடைநிலை அரசுப் பொதுத் தேர்வுகள் 11.03.2026 முதல் துவங்கி 06.04.2026 வரை காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரையிலும் நடைபெறவுள்ளது.

இன்று முதல் நடைபெறும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 140 தேர்வு மையங்களில் 228 அரசு பள்ளிகளும் 68 அரசு உதவி பெறும் பள்ளிகளும் மற்றும் 118 தனியார் பள்ளிகள் என 414 பள்ளிகளில் பயிலும் 14,930 மாணவர்கள், 15,150 மாணவிகள் உட்பட மொத்தம் 30,080 தேர்வர்கள் தேர்வெழுதவுள்ளனர். இத்தேர்வில் 364 ஆண் மற்றும் 257 பெண் தேர்வர்கள் உட்பட 621 மாற்றுத் திறனாளி தேர்வர்கள் தேர்வெழுதவுள்ளனர்.

Continues below advertisement

மேலும் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 4 தேர்வு மையங்களில் 616 தனித்தேர்வர்கள் தேர்வெழுதவுள்ளனர். தேர்விற்கான மந்தனக்கட்டுகள், சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெறப்பட்டு தஞ்சாவூர் பட்டுக்கோட்டை மற்றும் கும்பகோணம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 8 வினாத்தாள் கட்டுக் காப்பு மையங்களில் (இரட்டை பூட்டு முறையில் Double Locker System) ஆயுதம் தாங்கிய காவலர்கள் பாதுகாப்புடன் பாதுகாக்கப்பட்டு, தேர்வு நடைபெறும் இன்று 29 வழித்தட அலுவலர்கள் மூலமாக, சம்மந்தப்பட்ட மையங்களுக்கு ஆயுதம் தாங்கிய காவலர்கள் பாதுகாப்புடன் அனுப்பி வைத்திட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

இடைநிலை தேர்வு பணிகளை மேற்கொள்ள 16 வினாத்தாள் கட்டுப்பாப்பாளர்கள் , 144 முதன்மைக் கண்காணிப்பாளர்கள் 144 துறை அலுவலர்கள் மற்றும் 613 சொல்வதை எழுதுபவர்கள், 2048 அறைக் கண்காணிப்பாளர்கள் 185 பறக்கும் படையினர் ஆகியோர் தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் மாவட்டக் கல்வி அலுவலர்களால் (இடைநிலை) நியமிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். 

தஞ்சை மாவட்டத்தில் இன்று நடைபெற இருக்கும் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முன்னிட்டு தேர்வு மையங்களில் அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்றது.