தஞ்சாவூர் அருகே 7 ஏக்கரில் 216 வகையான பழமையான மரங்களை கொண்ட விருட்ச வனம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் ஓராண்டு நிறைவு நாளில் பள்ளி மாணவ, மாணவிகளை வரவழைத்து மரங்களை பற்றி எடுத்துக்கூறி விளக்கம் அளித்தார் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர். தஞ்சாவூர் அருகே திருமலைசமுத்திரம் ஊராட்சியில் 216 வகையான அரிய, பாரம்பரிய மரங்களை கொண்டு 7 ஏக்கரில் உருவாக்கப்பட்ட விருட்ச வனத்துக்கு மாணவ, மாணவிகளை வரவழைத்து, மரங்களை பற்றி எடுத்துரைத்தார் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர். தஞ்சாவூர் அருகே திருமலைசமுத்திரம் ஊராட்சியில் அரசுக்கு சொந்தமான 7 ஏக்கரில் பாரம்பரிய, அரிய வகையான மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் வகையில் விருட்ச வனம் உருவாக்கப்பட்டது. கடந்தாண்டு செப்.15-ம் தேதி இந்த விருட்ச வனத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் கருவாலி, திருவோடு, இத்தி, சிவகுண்டலம், அத்தி, எட்டி, மாவிலங்கை, ருத்ராட்சம் என 216 வகையான 500 மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்த மரக்கன்றுகள் நடப்பட்டு ஓராண்டு நிறைவு அடைந்துள்ளது. இதையடுத்து திருமலைசமுத்திரம் பகுதியில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகளை விருட்ச வனத்துக்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வரவழைத்தார். பின்னர் விருட்ச வனத்தில் உள்ள மரங்களைப் பற்றியும், அதன் தன்மைகளைப் பற்றியும் விளக்கமாக மாணவ, மாணவிகளுக்கு எடுத்துக்கூறினார். பின்னர் மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.
ஓராண்டு நிறைவு நாள்... விருட்ச வனத்தில் மாணவர்களுக்கு விளக்கம் அளித்த தஞ்சை கலெக்டர்!
என்.நாகராஜன் | 17 Sep 2022 03:09 PM (IST)
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் மாணவ, மாணவிகளிடையே மரம் நடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்
தஞ்சாவூர்-விருட்ச வனம்
Published at: 17 Sep 2022 03:09 PM (IST)