மேலும் அறிய

திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெருகும் ஆதரவு: வல்லத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு

மக்களின் மத்தியில் நன்கு அறிமுகமான மேயர் சண்.ராமநாதன் தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. 

தஞ்சாவூர்: தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சண்.ராமநாதன் வல்லத்திற்கு சென்று கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினரை சந்தித்தார். மேலும் முதல்முதலாக வல்லத்தில் தேர்தல் அலுவலகத்தையும் திறந்து வைத்தார்.

தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக மேயர் சண்.ராமநாதனை திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மக்களின் மத்தியில் நன்கு அறிமுகமான மேயர் சண்.ராமநாதன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. 

தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு, தஞ்சை நகரில் நவீன உள்கட்டமைப்பு, திடக்கழிவு மேலாண்மை, மற்றும் தூய்மைப் பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். "நம்ம வார்டு நம்ம மேயர்" திட்டம், குளங்கள் புனரமைப்பு, பூங்காக்கள் அமைத்தல் மற்றும் ஆதரவற்றோருக்கான நலத்திட்டங்கள் இவரது முக்கிய சாதனைகள் ஆகும். நம்ம வார்டு நம்ம மேயர்" என்ற திட்டம் மூலம் மக்களின் புகார்களை நேரடியாகக் கேட்டறிந்து, தீர்வு காணும் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

தஞ்சை மாநகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் குப்பைகளை மேலாண்மை செய்யவும், நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்கவும் திட்டங்களைச் செயல்படுத்தினார். தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் ஆதரவற்ற முதியோர்களுக்குத் தன் கைகளால் விருந்து வழங்கி, அவர்களுடன் நேரத்தைச் செலவிட்டது பரவலான வரவேற்பைப் பெற்றது.

மாநகராட்சியின் வளர்ச்சிக்காகப் பல்வேறு புதிய திட்டங்களைச் செயல்படுத்தி மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளார். இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளராக சண்.ராமநாதன் அறிவிக்கப்பட்டார். இதையடுத்து கட்சி நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். மேலும் ொதுமக்களிடமும் பிரச்சாரமும் மேற்ொண்டுள்ளார்.

அந்த வகையில் தஞ்சை அருகே வல்லத்தில் பேரூர் கட்சி நிர்வாகிகளை சந்தித்தார். மேலும் கூட்டணி கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டினார். முன்னதாக வல்லம் அண்ணா சிலைக்கு வேட்பாளர் சண்.ராமநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் வல்லத்தில் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதியில் முதன்முதலாக வல்லம் பேரூராட்சியில்தான் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் செல்வகுமார், வல்லம் பேரூர் நகர செயலாளர் கல்யாணசுந்தரம் மற்றும் மாநகர பகுதி செயலாளர்கள், வல்லம் நகர கூட்டணி கட்சியினர், பிரிவு அணி செயலாளர்கள், இளைஞரணியினர், தொழில்நுட்ப அணியினர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

மக்கள் ஆதரவு அலை எழுந்தாச்சு... வெற்றிக் கொடி ஏறும் நாள் அருகில் வந்தாச்சு: திமுக வேட்பாளரின் சுழற்றி அடிக்கும் பிரசாரம்
மக்கள் ஆதரவு அலை எழுந்தாச்சு... வெற்றிக் கொடி ஏறும் நாள் அருகில் வந்தாச்சு: திமுக வேட்பாளரின் சுழற்றி அடிக்கும் பிரசாரம்
அ.தி.மு.க. கூட்டணியே மாற்றத்தை கொண்டு வரும்: டிடிவி.தினகரன் திட்டவட்டம்
அ.தி.மு.க. கூட்டணியே மாற்றத்தை கொண்டு வரும்: டிடிவி.தினகரன் திட்டவட்டம்
“சித்திரை விழா சிறப்பு: தஞ்சை கிராமங்களில் ‘நல்லேர் பூட்டும்’ மரபு விழா”
“சித்திரை விழா சிறப்பு: தஞ்சை கிராமங்களில் ‘நல்லேர் பூட்டும்’ மரபு விழா”
தஞ்சை பெரிய கோயிலில் 18 நாள் திருவிழா கோலாகலம்; கொடியேற்றத்துடன் தொடங்கிய சித்திரைப் பெருவிழா
தஞ்சை பெரிய கோயிலில் 18 நாள் திருவிழா கோலாகலம்; கொடியேற்றத்துடன் தொடங்கிய சித்திரைப் பெருவிழா
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மோடி முதல் விஜய் வரை.. எந்த தலைவர்கள் எங்கு பிரச்சாரம்? இதோ முழு விவரம்
மோடி முதல் விஜய் வரை.. எந்த தலைவர்கள் எங்கு பிரச்சாரம்? இதோ முழு விவரம்
ஜல்லிக்கட்டில் பழைய முறையே மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் - மதுரையில் ஈ.பி.எஸ்., நம்பிக்கை !
ஜல்லிக்கட்டில் பழைய முறையே மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் - மதுரையில் ஈ.பி.எஸ்., நம்பிக்கை !
GOLD SILVER RATE: காலையிலேயே அதிர்ச்சி.! ரூ.10,000 உயர்ந்துடுச்சே.! தங்கம், வெள்ளியின் இன்றைய விலை என்ன தெரியுமா.?
காலையிலேயே அதிர்ச்சி.! ரூ.10,000 உயர்ந்துடுச்சே.! தங்கம், வெள்ளியின் இன்றைய விலை என்ன தெரியுமா.?
Pakistan: நாட்டாமையாக காட்டிக்கொண்ட பாகிஸ்தான்..! பில் கட்டுவது யார்? ஸ்டார் ஓட்டலால் வெடித்த சர்ச்சை
Pakistan: நாட்டாமையாக காட்டிக்கொண்ட பாகிஸ்தான்..! பில் கட்டுவது யார்? ஸ்டார் ஓட்டலால் வெடித்த சர்ச்சை
TVK Vijay: சென்னையில் இன்று விஜய் பரப்புரை! எந்த ஏரியாவில் எத்தனை மணிக்கு?
TVK Vijay: சென்னையில் இன்று விஜய் பரப்புரை! எந்த ஏரியாவில் எத்தனை மணிக்கு?
Top 10 News Headlines: ஸ்டாலின் அவசர ஆலோசனை, சென்னையில் விஜய் பரப்புரை, மோடி ரோட் ஷோ, - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: ஸ்டாலின் அவசர ஆலோசனை, சென்னையில் விஜய் பரப்புரை, மோடி ரோட் ஷோ, - 11 மணி வரை இன்று
Koovagam Festival 2026: கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை பெருவிழா கோலாகலமாக தொடக்கம்...
Koovagam Festival 2026: கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை பெருவிழா கோலாகலமாக தொடக்கம்...
ரயில் ஏற போறீங்களா? நில்லுங்க! புதுச்சேரி - விழுப்புரம் மெமு ரயில் சேவையில் அதிரடி மாற்றம்!
ரயில் ஏற போறீங்களா? நில்லுங்க! புதுச்சேரி - விழுப்புரம் மெமு ரயில் சேவையில் அதிரடி மாற்றம்!
Embed widget