தஞ்சை களிமேடு தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவர்களின் உடலுக்கு மலர் வளையம் வைத்து முதலமைச்சர் முக ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்து நிவாரண நிதியையும் வழங்கினார்.
முன்னதாக, தஞ்சை களிமேடு தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்திக்க இருக்கிறார். காலை 11.30 மணியளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்று அங்கிருந்து தஞ்சாவூர் செல்கிறார்.தேர் மின்கம்பியில் உரசிய விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். 15 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், விபத்தில் உயிரிழந்த குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதியுதவியும் அறிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், களிமேடு கிராமத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற தேர் திருவிழாவில் எதிர்பாராத விதமாக தேர் மின்கம்பியில் உரசியதால் ஏற்பட்ட விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர் என்ற துயரமான செய்தியினைக் கேள்வியுற்று மிகுந்த வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்து இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும், இவ்விபத்தில் 15 நபர்கள் தற்போது சிகிச்சையில் உள்ளதாக அறிகிறேன், அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் விபத்து பகுதியில் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல் துறைக்கும் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பபத்தாருக்கு தலா ரூபாய் ஐந்து இலட்சம் உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்