கல்விக் களத்தில் தஞ்சையின் வெற்றி முழக்கம்...மாஸ் சாதனை: மாநிலத்தில் 3வது இடம்
TN 10th Result 2026: தஞ்சை மாவட்டத்தில் 14,076 மாணவர்கள், 14,775 மாணவிகள் என மொத்தம் 28,851 பேர்கள் தேர்ச்சி பெற்றனர். தஞ்சை மாவட்டம் 97.41சதவீதம் பெற்று மாநில அளவில் 3 வது இடம் பெற்றுள்ளது.

Tamil Nadu 10th Result 2026: தஞ்சாவூர்: 10ம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. இதில் தஞ்சை மாவட்டம் ம் 97.41 சதவீதம் பெற்று மாநில அளவில் 3 வது இடம் பெற்று சாதித்துள்ளது.
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுதேர்வு பொது தேர்வு மார்ச் 11ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெற்றது. அந்த வகையில் தஞ்சை மாவட்டத்தில் 140 தேர்வு மையங்களில் 228 அரசு பள்ளிகளும், 65 அரசு உதவி பெறும் பள்ளிகளும் மற்றும் 115 தனியார் பள்ளிகள் என 408 பள்ளிகளில் பயிலும் 14621 மாணவர்கள், 14997 மாணவிகள் உட்பட மொத்தம் 29,618 தேர்வர்கள் தேர்வெழுதினர்.
10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் இன்று காலை வெளியிட்டனர். அதன்படி தஞ்சை மாவட்டத்தில் 14,076 மாணவர்கள், 14,775 மாணவிகள் என மொத்தம் 28,851 பேர்கள் தேர்ச்சி பெற்றனர். தஞ்சை மாவட்டத்தில் 230 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. தஞ்சை மாவட்டம் 97.41சதவீதம் பெற்று மாநில அளவில் 3 வது இடம் பெற்றுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம்
மொத்த பள்ளிகள் 143, தேர்ச்சி சதவீதம் : 95.11, தேர்வு எழுதியது : மாணவர் 4224, மாணவியர் 3586, மொத்தம் 7810. தேர்ச்சி : மாணவர் 3937, மாணவியர் 3491, மொத்தம் 7428
மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் 93:21, மாணவியர் தேர்ச்சி சதவீதம் 97.35, இந்தாண்டும் மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இருப்பினும் கடந்தாண்டை விட இந்தாண்டு தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளதால் மாநில அளவில் 18வது இடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 7வது இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. மாவட்ட அளவில் 71 பள்ளிகள் 100சதவீதத் தேர்ச்சி பெற்றுள்ளன.
Before You Go
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
ட்ரெண்டிங் செய்திகள்





















