மேலும் அறிய

டாக் ஆப் தி சிட்டி' ஆன லஞ்ச ஒழிப்பு சோதனை: வல்லத்தில் சிக்கிய கணக்கில் வராத பணம்

தஞ்சாவூர், வல்லம் சார்பதிவாளர் அலுவலகங்களில் நேற்று மாலை லஞ்ச ஒழிப்பு போலீஸார் திடீரென சோதனை நடத்தினர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர், வல்லம் சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று மேற்கொண்ட சோதனைகள்தான் டாக் ஆப் சிட்டியாக மாறியுள்ளது. இதில் வல்லம் சார் பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.30,120 பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பேசும் பொருளாகி உள்ளது. இதுகுறித்து விரிவான விசாரணையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். 

தஞ்சாவூர், வல்லம் சார்பதிவாளர் அலுவலகங்களில் நேற்று மாலை லஞ்ச ஒழிப்பு போலீஸார் திடீரென சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.30,120 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

முகூர்த்த தினமான நேற்று தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு அலுவலகங்களில் அதிகளவு பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டது. இதனால் அந்த அலுவலகங்களில் லஞ்சப் பணம் அதிகளவில் புழங்க வாய்ப்புள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் கருதினர். இதன் தொடர்ச்சியாக நேற்று தமிழகம் முழுவதும் உள்ள முக்கியமான சார்பதிவாளர் அலுவலங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் திடீரென சோதனை நடத்தினர்.

அதன்படி தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா அருகே உள்ள கரந்தை சார்பதிவாளர் அலுவலகத்தில் தஞ்சாவூர் லஞ்ச ஒழி்ப்பு பிரிவு டிஎஸ்பி அன்பரசன் தலைமையில், ஆய்வாளர் அருண்பிரசாத் மேற்பார்வையில் போலீஸார் திடீரென சோதனை நடத்தினர். லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனைக்கு வந்ததும் சர்பதிவாளர் அலுவலகத்தில் இருந்த பணியாளர்கள், பொதுமக்கள், புரோக்கர்கள் கலக்கமடைந்தனர்.

பின்னர் எவ்வளவு ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது, பணம் ஏதும் பணியாளர்களின் மேஜையில், கைப்பைகளில் உள்ளதா என போலீஸார் சோதனை செய்தனர். இந்த சோதனையில் ரொக்கப் பணம் ஏதும் கைப்பற்றப்படவில்லை.

அதே நேரத்தில் வல்லம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆய்வாளர்கள் சரவணன், பத்மாவதி தலைமையில் போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். சார்பதிவாளர் மேஜை, பணியாளர்களின் மேஜைகளில் திடீரென சோதனை செய்யப்பட்டது. மேலும், பதிவு வைப்பறையில் உள்ள மேஜையில் ரூ.30,120 ரொக்கம் இருந்தது. இந்த பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இந்த பணத்துக்கான கணக்கு இல்லாததால், இந்த பணம் ஆய்வு குழு உறுப்பினரும், துணை வட்டாட்சியருமான பிரான்சிஸ் முன்னிலையில் கைப்பற்றப்பட்டு, இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. மாலை 4  மணிக்கு தொடங்கிய இந்த சோதனை இரண்டு மணி நேரம் நீடித்ததால், சார்பதிவாளர் அலுவலங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வல்லத்தில் கணக்கில் வராத பணம் பிடிப்பட்டதால் தொடர்ந்து சோதனை இரவு வரை நடந்தது.

வல்லம் பேரூராட்சியில் அமைந்துள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத பணம் பிடிப்பட்டது பேசும் பொருளாகி உள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூரில் இன்று மழை பெய்யுமா? வெளியான லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!
தஞ்சாவூரில் இன்று மழை பெய்யுமா? வெளியான லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!
11 ஆண்டுகளாக தவிப்பு: இன்சூரன்ஸ் நிறுவன வாசலில் அமர்ந்து விவசாயி போராட்டம்... தஞ்சையில் பரபரப்பு!
11 ஆண்டுகளாக தவிப்பு: இன்சூரன்ஸ் நிறுவன வாசலில் அமர்ந்து விவசாயி போராட்டம்... தஞ்சையில் பரபரப்பு!
செவிலியர்கள் கையெழுத்து இயக்கம்: தஞ்சையில் அரசு நடவடிக்கைக்கு எதிர்ப்பு!
செவிலியர்கள் கையெழுத்து இயக்கம்: தஞ்சையில் அரசு நடவடிக்கைக்கு எதிர்ப்பு!
நூதன முறையில் முதிய தம்பதியை ஏமாற்றி 7 பவுன் நகை திருட்டு: தஞ்சாவூரில் அதிர்ச்சி சம்பவம்
நூதன முறையில் முதிய தம்பதியை ஏமாற்றி 7 பவுன் நகை திருட்டு: தஞ்சாவூரில் அதிர்ச்சி சம்பவம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: வெளுக்கப்போகும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம்? - வானிலை மையம் தகவல்!
TN Weather Update: வெளுக்கப்போகும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம்? - வானிலை மையம் தகவல்!
AIADMK: பிணவறையில் அதிமுக.. உங்களுக்கு இதெல்லாம் தேவை தான்.. தேமுதிக பார்த்தசாரதி விளாசல்!
AIADMK: பிணவறையில் அதிமுக.. உங்களுக்கு இதெல்லாம் தேவை தான்.. தேமுதிக பார்த்தசாரதி விளாசல்!
"60 நாள் டைம் முடிஞ்சிருச்சு... நடவடிக்கை எங்கே?" - எம்ஜிஆர் பல்கலை விவகாரத்தில் அண்ணாமலை அதிரடி கேள்வி
அரசு மருத்துவமனையில் சிஎம் விஜய் திடீர் நேரில் விசிட்; குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த விஜய்
அரசு மருத்துவமனையில் சிஎம் விஜய் திடீர் நேரில் விசிட்; குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த விஜய்
அரசு வேலை அறிவிப்பு... பின்னணியில் கரூர் தேர்தல் நாடகமா? விஜய்க்கு சீமானின் அதிரடி கேள்வி
அரசு வேலை அறிவிப்பு... பின்னணியில் கரூர் தேர்தல் நாடகமா? விஜய்க்கு சீமானின் அதிரடி கேள்வி
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
Embed widget