தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் முதலாம் இராஜேந்திர சோழனின் கங்கை படையெடுப்பின் வெற்றி சின்னங்கள் பற்றிய வரலாற்று நாட்காட்டி-2025 வெளியீட்டு விழா நடந்தது.


தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அரசினர் மகளிர் கலைக்கல்லுரியில் (தன்னாட்சி) முதலாம் இராஜேந்திர சோழனின் கங்கை படையெடுப்பின் வெற்றிச் சின்னங்கள் பற்றிய வரலாற்று நாட்காட்டி-2025 வெளியீட்டு விழா கும்பகோணம் வட்டார வரலாற்று ஆய்வு சங்கம் சார்பில் நடந்தது. இதுகுறித்து சங்கத்தின் நிறுவனரும், வரலாற்று ஆய்வாளருமான கும்பகோணம் கோபிநாத் கூறியதாவது:


பூர்வதேசமும், கங்கையும், கடாரமும் கொண்ட கோப்பரகேசரி என வரலாற்றில் அறியப்படும் சோழ சக்கரவர்த்திகள் முதலாம் இராஜேந்திரசோழனின் கங்கை படையெடுப்பு பற்றி அறிந்த பலருக்கும் அந்த வெற்றியின் நினைவாக வடபுலத்திலிருந்து கொண்டு வரப்பட்ட அரிய போர் நினைவு சின்னங்களையும், அதன் வரலாற்று சிறப்புகளையும் தெரிவிக்கும் விதமாக இந்த வரலாற்று நாட்காட்டி கங்கை கொண்டான் என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.


இந்த நாட்காட்டியில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு சிற்பம் என புகைப்படத்துடன் அதன் வரலாற்று தகவல்களையும் தமிழ், ஆங்கிலத்தில் அனைவருக்கும் புரியும் வகையில் கொடுத்துள்ளோம். இந்த தகவல்களை ஆழ்ந்து படிக்கும்போது அந்த சிற்பம் எந்த நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டது, அதன் பூர்வீகம் என்ன என்பது பற்றியும், நம்முடைய சிற்ப கலை படைப்பிற்கும் அவர்களுடைய சிற்பக்கலை படைப்பிற்கும் உள்ள வித்தியாசம் என்ன என்பதை தெளிவுற அறிந்து கொள்ள முடியும்.


மேலும் இராஜேந்திர சோழனின் மெய்க்கீர்த்திகள் மற்றும் எசாலம் செப்பேடுகள் குறித்த தகவல்களையும் விளக்கியுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தொடர்ந்து இந்த நாட்காட்டியினை கல்லூரி முதல்வர் முனைவர் பிரமிளா வெளியிட, வரலாற்றுத்துறை தலைவர் முனைவர் சாந்தா ஜெயக்குமாரி மற்றும் வணிகவியல் துறைத்தலைவரும், தேர்வு கட்டுப்பாடு அலுவலருமான முனைவர் ஜெயசீலி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். பின்னர் கல்லூரியின் மற்ற துறைத்தலைவர்களுக்கும், மாணவிகளுக்கும் நாட்காட்டி வழங்கப்பட்டது. சங்கத்தின் இணைச்செயலாளர் ராம் பிரசாந்த் நன்றி கூறினார்.


ராஜேந்திர சோழனின் படைகள் வங்கப் போரை வெற்றிகரமாக முடித்துவிட்டு, அதன் அடையாளமாக கங்கை நீரை எடுத்துக்கொண்டு கோதாவரி நதிக்கரைக்கு வந்தன. தனது படைகளை அங்கிருந்து வரவேற்ற ராஜேந்திர சோழன், அவர்களை அழைத்துக்கொண்டு தற்போது ஒடிசா என்று அழைக்கப்படும் ‘ஒட்டர தேயம்’ மீது படையெடுத்து அங்கிருந்த மன்னர்களையும் வீழ்த்தினார்.


இதனை ஒடிசா மாநிலம் மகேந் திரகிரி மலை மீது அமைந்துள்ள யுதிஷ்டிரர் மற்றும் குந்திதேவி கோயில்களில் உள்ள கல்வெட்டுச் சான்றுகள் மெய்பிக்கின்றன. யுதிஷ் டிரர் கோயில் கருவறையின் நிலை வாயிலுக்கு மேலாகக் காணப்படும் கல்வெட்டில் தமிழிலும் சமஸ் கிருதத்திலும் பதிவுகள் உள்ளன. அதில், ‘ராஜேந்திர சோழன் தன்னுடைய தோள் வலிமையால் விமலாதித்தனையும், மலைநாட்டு அரசர்களையும், கலிங்க அரசனை யும் வென்று மகேந்திர மலை உச்சி யில் விஜயஸ்தம்பத்தை நாட்டி னான்’ என்று குறிப்பு உள்ளது. 


இக்கல்வெட்டுக்குக் கீழே, வரைகோட்டு வடிவில், அமர்ந்த நிலையில் புலியின் ஊருவமும் 2 மீன் களின் உருவங்களும் சோழர் இலச்சினையாகக் காணப்பெறுகின்றன. அருகில் உள்ள குந்தி கோயில் வளாகத்தில் மூன்று நான்கு துண்டு களாகக் கிடக்கும் கல்வெட்டில், மகேந்திர கிரியில் விஜயஸ்தம்பம் நாட்டிய குறிப்பும், ஒடிசா மன்னனின் பட்டத்து யானையைக் கொன்ற ராஜேந்திரனின் தலைமை தளபதி (மகாநாயகன்) ராஜேந்திர சோழ பல்லவரையனான ராஜராஜ மாராயன் என்பானுக்கு மகேந்திர கிரீஸ்வரத்தில் வீர அங்குசம் பரி சாக அளிக்கப்பெற்றதும், ‘விட்டி வீரண மல்லன்’ என்ற விருது அளிக்கப்பெற்றதும் குறிப்புகளாகக் காணப்படுகின்றன என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.