வன்னியர்களின் 10.5% இட ஒதுக்கீட்டை ரத்து செய்த உச்ச நீதிமன்ற தீர்ப்பினை தடை ஆணை பெற்று  இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த கோரியும்,  வன்னியர்களின் அடையாளமான அக்னி குண்டத்தையும் வன்னியர் சங்க தலைவராக இருந்து மறைந்த ஜெ.குருவையும் இலிவுப்படுத்திய  ஜெய்பீம் திரைப்பட இயக்குனர் தயாரிப்பாளர் நடிகர்  ஆகியோர் மருத்துவர் ராமதாசை பற்றி அவதூறு பேசி சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பசும்பொன் பாண்டியனை ஆகியோர் மீது காவல் நிலையங்களில் கொடுக்கப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தஞ்சை மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர் சங்கம் சார்பில் தஞ்சை பனகல் கட்டிடம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வன்னியர் சங்க மாநில துணை தலைவர் ம.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். இதில் முன்னாள் மாவட்ட செயலாளர் அரசூர் ஆறுமுகம், வன்னியர் சங்க மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வம், உழவர் பேரியக்க மாவட்ட செயலாளர் அசி.பன்னீர் செல்வம், கட்டுமான தொழிற் சங்க தலைவர் பந்தல்.கனேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  




இறுதியில் தஞ்சை மாநகர செயலாளர் ராஜாராமன் நன்றி கூறினார். இப்போராட்டத்தில் இக்கூட்டத்தில் 15 பெண்கள் உள்பட 300  மேற்பட்டோரரை போலீசார் கைது செய்தனர். இப்போராட்டத்தை தொடர்ந்து அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் 100 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டதால், தஞ்சாவூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ம.க.ஸ்டாலின், நடிகர் சூர்யாவை பற்றிய கடுமையாக பேசியுள்ளதால், ஜெய்பீம் படத்தின் பிரச்னை விஸ்வரூபம் எடுக்க வாய்ப்புள்ளது. இதுகுறித்து ம.க.ஸ்டாலின் கூறுகையில்,ஜெய் பீம் திரைப்பட குழுவினரை கைது செய்ய கோரி நவம்பர் 2ஆம் தேதியில் இருந்து தமிழகமெங்கும் பாட்டாளி மக்கள் கட்சியும் வன்னியர் சங்கமும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.




அமைதியாக மக்கள் வாழ்ந்து வரும் தமிழகத்தில் வன்னியர் சமூக மக்களை இழிவுபடுத்தி படம் எடுத்து வன்முறையை ஏற்படுத்தி, நாட்டில் அமைதியை சீர்குலைப்பதை தமிழக முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் உள்ள 100 க்கும் மேற்பட்ட வன்னியர் வசிக்கும் கிராமங்களில்  ஆண்களையும் பெண்களையும் இளைஞர்களையும் ஒன்று திரட்டி, அக்னி குண்டத்தில், தீயை வளர்த்து, கூத்தாடியான நடிகர் சூர்யாவின் உருவ படத்தை எரிப்போம்.  அந்த போராட்டத்தை தலைமை தாங்கி வழி நடத்துபவர்களுக்கு மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணிராமதாஸ் ஆகியோர், அக்னி கும்பம் படம் பொறித்த அரை தங்கத்தினாலான பவுன் தங்க டாலர்  பரிசாக வழங்கப்படும். அதேபோல் தஞ்சை மாவட்டத்திற்கு கூத்தாடியான நடிகர் சூர்யா,  எப்போது வேண்டுமானாலும் வெளிப்படையாக அறிவித்துவிட்டு வந்தால், 10 லட்சம் வரைவோலை பரிசு வழங்கப்படும். அப்போது, வன்னிய இனத்தை சேர்ந்த ஆண்கள் காலனியால் அடிப்பார்கள், பெண்கள் சானிப்பாலை கொண்டு முகத்தில் வீசுவார்கள் என்றார்.