மேலும் அறிய

ஓய்வுபெற்ற வங்கி ஊழியரிடம் இருந்து ரூ.16 லட்சம் மோசடி... சைபர் கிரைம் போலீசார் விசாரணை

வேல்சாமி பணம் அனுப்பிய வங்கி கணக்குகள் ஒடிசா, அசாம், பீகார், ஆந்திரா, தெலுங்கானா, மத்தியப் பிரதேசம் மாநில வங்கி கணக்குகள் என்பது தெரியவந்தது.

தஞ்சாவூர்: ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்று கூறி ஓய்வுபெற்ற வங்கி ஊழியரிடம் இருந்து ரூ.16 லட்சம் மோசடி செய்த மர்மநபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் வேல்சாமி (69) இவர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் மேனேஜராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது செல்போனிற்கு வாட்ஸ் அப் கால் ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய பெண் ஒருவர் தன்னை அங்கித் மெஹ்ராவாக என்று தெரிவித்துள்ளார். பின்னர் வேல்சாமியிடம் ஆன்லைன் டிரேடிங்கில் பணம் முதலீடு செய்தால் நிறைய லாபம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். 

பின்னர் இதற்காக ஒரு போலியான லிங்கையும் அனுப்பி உள்ளார். அதிக லாபம் கிடைப்பதை தவற விட்டு விடாதீர்கள் என்று பல்வேறு ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இதையடுத்து வேல்சாமி கடந்த 21.09.2025 முதல் 29.10.2025 வரை 14 ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலம் ரூ. 16 லட்சத்தை அனுப்பியுள்ளார். பின்னர் தனது லாபம் குறித்து கேட்பதற்காக வேல்சாமி அந்த வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொண்ட போது சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டுள்ளது. பலமுறை தொடர்பு கொண்ட போதும் சுவிட்ஸ் ஆப் என்றே வந்துள்ளது. அப்போதுதான் அந்த மர்மநபர்கள் தன்னை மோசடி  செய்துள்ளதை வேல்சாமி உணர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் தஞ்சை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் அறிவழகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் வேல்சாமி பணம் அனுப்பிய வங்கி கணக்குகள் ஒடிசா, அசாம், பீகார், ஆந்திரா, தெலுங்கானா, மத்தியப் பிரதேசம் மாநில வங்கி கணக்குகள் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அந்த வங்கிகளுக்கு சைபர் க்ரைம் போலீசார் மெயில் அனுப்பி விசாரித்ததில் 3 வங்கிகளில் இருந்து பதில் வந்துள்ளது. சம்பந்தப்பட்ட வங்கி கணக்கில் பணம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசார் தீவிர விசாரணையில் உள்ளனர். 

இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசார் தரப்பில் கூறுகையில், நிதி மோசடி, போலி செயலிகள், சமூக வலைதள மோசடிகள், ஆன்லைன் டிரேடிங்கில் டெபாசிட் செய்ய சொல்வது போன்ற குற்றங்களைத் தடுக்க, 1930 என்ற உதவி எண்ணுடனும், cybercrime.gov.in இணையதளத்துடனும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். முக்கியமாக, அறியாத அழைப்புகளை ஏற்காமல் இருப்பது, தனிப்பட்ட தகவல்களைப் பகிராமல் இருப்பது, பொது வைஃபையைப் பயன்படுத்தாமல் இருப்பது, போலி இணைப்புகளை (Links) கிளிக் செய்யாமல் இருக்க வேண்டும். மேலும் வங்கியிலிருந்து பேசுகிறோம் ஓடிபி வந்து இருக்கும் என்று வரும் அழைப்புகளை நம்பி ஏமாறக்கூடாது என்று தெரிவித்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

சென்னையில் நடந்த கான்க்ளேவ் 26 நிகழ்விற்கான சிறப்பான முன்னோட்ட விழா
சென்னையில் நடந்த கான்க்ளேவ் 26 நிகழ்விற்கான சிறப்பான முன்னோட்ட விழா
அதிநவீன என்டோஸ்கோப்பிக்  அறுவை சிகிச்சை... ஐடி பணியாளருக்கு நடமாட்ட திறனை வழங்கிய மீனாட்சி மருத்துவமனை
அதிநவீன என்டோஸ்கோப்பிக்  அறுவை சிகிச்சை... ஐடி பணியாளருக்கு நடமாட்ட திறனை வழங்கிய மீனாட்சி மருத்துவமனை
டிஜிட்டல் அரெஸ்ட் என்று கூறி சித்தா பெண் டாக்டரிடம் ரூ.52 லட்சம் பணம் மோசடி
டிஜிட்டல் அரெஸ்ட் என்று கூறி சித்தா பெண் டாக்டரிடம் ரூ.52 லட்சம் பணம் மோசடி
ஆர்ஆர்பி குரூப் டி தேர்வு... நாளைக்குதான் விண்ணப்பிக்க கடைசி நாள்: மிஸ் பண்ணிடாதீங்க
ஆர்ஆர்பி குரூப் டி தேர்வு... நாளைக்குதான் விண்ணப்பிக்க கடைசி நாள்: மிஸ் பண்ணிடாதீங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Smallpox Prevention : சின்னம்மை பாதிப்பா குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீங்க... பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன.?
சின்னம்மை பாதிப்பா குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீங்க... பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன.?
TN Assembly: போஸ்டர், பேனர்களுக்கு நோ.. அரசியல் கட்சிகளையே அலறவிடும் தமிழக கிராமம் - எந்த ஊருப்பா?
TN Assembly: போஸ்டர், பேனர்களுக்கு நோ.. அரசியல் கட்சிகளையே அலறவிடும் தமிழக கிராமம் - எந்த ஊருப்பா?
Khameni: 15 நிமிஷம்தான்.. முடிவுக்கு வந்த சண்டை! காஷ்மீரில் அப்பவே சம்பவம் செய்த காமேனி!
Khameni: 15 நிமிஷம்தான்.. முடிவுக்கு வந்த சண்டை! காஷ்மீரில் அப்பவே சம்பவம் செய்த காமேனி!
Israel Iron Beam: இஸ்ரேல் களமிறக்கிய அதிநவீன ஆயுதம்; சிதறும் எதிரிகளின் ஏவுகணைகள்; அதென்ன அயர்ன் பீம்.?
இஸ்ரேல் களமிறக்கிய அதிநவீன ஆயுதம்; சிதறும் எதிரிகளின் ஏவுகணைகள்; அதென்ன அயர்ன் பீம்.?
கிளாப் அடிக்குறதுனா சும்மாவா? விக்ரமனையே மிரளவைத்த காமெடி நடிகர் - இவரா?
கிளாப் அடிக்குறதுனா சும்மாவா? விக்ரமனையே மிரளவைத்த காமெடி நடிகர் - இவரா?
KS Ravikumar: விக்ரமனிடம் கே.எஸ்.ரவிக்குமார் போட்ட கண்டிஷன்- என்ன தெரியுமா?
KS Ravikumar: விக்ரமனிடம் கே.எஸ்.ரவிக்குமார் போட்ட கண்டிஷன்- என்ன தெரியுமா?
இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டல்...சர்ச்சையில் மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம்
இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டல்...சர்ச்சையில் மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம்
Saudi Arabia Attack: ”உலகின் எண்ணெய் வங்கி” அராம்கோவை தாக்கிய ஈரான் ட்ரோன்கள் - கலக்கத்தில் உலக நாடுகள்
Saudi Arabia Attack: ”உலகின் எண்ணெய் வங்கி” அராம்கோவை தாக்கிய ஈரான் ட்ரோன்கள் - கலக்கத்தில் உலக நாடுகள்
Embed widget