கப்பலூர் சேமிப்பு கிடங்கில் நெல்மணிகள் நனைந்து முளைத்துள்ளதாக பொய்யான தகவல்களை ஆர்.பி உதயகுமார் பரப்புகிறார் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே எண்கண் பகுதியில் உள்ள வெட்டாறு இயக்கு அணையில் நீர் வரத்தை தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகமாக இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அதிகாரியிடம் கேட்டறிந்தார். மேலும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு குடோனை பார்வையிட்டு விவசாயத்துக்கு தேவையான உரங்கள் இருப்பு பற்றி கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சக்கரபாணி கூறியதாவது: முன்னாள் அமைச்சர் திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார் கப்பலூருக்கு சென்று ஆய்வு செய்துள்ளார். இன்று மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு நெல் எதுவும் நனையவில்லை என்று கூறியுள்ளனர் அதற்கு தற்போது சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கையில் எடுத்துக்காட்டுகிறார் என்று கேட்டதற்கு அவர் ஓரத்தில் கிடந்த நெல்லை எடுத்து காட்டுவதாக என்னிடம் கூறினார். வேறு அங்கு எந்த நெல்லும் நனையவில்லை என்றும் அதிகாரிகள் கூறினர்.
அவருடைய தொகுதியில் அவர் 10 வருடமாக அமைச்சராக இருந்தார். ஆனால் அங்கு ஒரு குடோன் கூட கட்டவில்லை. ஆயிரம் மெட்ரிக் டன் அளவுள்ள ஒரு குடோன் கூட கட்டவில்லை. ஆனால் இன்றைக்கு முதலமைச்சர், அவருடைய தொகுதியான கப்பலூரில் 18,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நெல்லை சேமித்து வைப்பதற்காக சிறு தானியங்கி கிடங்கு கட்டுவதற்கு அனுமதி தந்திருக்கிறார். அதேபோன்று அவருடைய திருமங்கலத்தில் 3000 மெட்ரிக் கண்ணில் ஒரு குடோன் கட்டுவதற்கு அனுமதி தந்திருக்கிறார். மொத்தம் 20 ஆயிரம் மெட்ரிக் டன் அளவுள்ள கிடங்குகளை அவருடைய தொகுதியான கப்பலூரிலும் திருமங்கலத்திலும் கட்டுவதற்கு முதலமைச்சர் அனுமதி தந்திருக்கிறார்.
இதுவரை அவர் கப்பலருக்கு போனாரா என்று தெரியவில்லை. நேற்று வரை அங்கு சென்றது ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் பத்தாண்டு காலமாக அவர்கள் ஆட்சியில் இருந்தார்கள் ஆண்டுக்கு ஒரு ஆயிரம் மெட்ரிக் டன் அல்லது 2000 மெட்ரிக் டன் கட்டியிருந்தால் இப்படி ஒரு நிலைமையை தமிழ்நாட்டுக்கு வந்திருக்காது டெல்டா மாவட்டத்திலும் இப்படி ஒரு சூழல் வந்திருக்காது. சுமார் 2 லட்சத்து 86 ஆயிரத்து 350 மெட்ரிக் டன் சிறுதானிய சேமிப்பு கிடங்கு கட்டுவதற்கு 238.07 கோடி ரூபாய் முதலமைச்சர் முதற்கட்டமாக கட்டுவதற்கு அனுமதி தந்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 19000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்குகள் மூன்று இடங்களில் அமைய உள்ளன. டெல்டா மாவட்டங்களில் இன்னும் கூடுதலாக சேமிப்பு கிடங்குகள் தேவை என்று முதலமைச்சர் இடம் அறிவித்திருக்கிறேன். முதற்கட்டமாக இந்த பணிகளை தொடங்குங்கள் பிறகு கூடுதலாக, அதற்கு நிதி ஒதுக்கப்படும் இன்று முதலமைச்சர் உறுதியளித்திருக்கிறார் என்று தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்