நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் புகழ்பெற்ற ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. இங்கு ஏசுவின் தாயாக கருதப்படும் மாதா, கையில் குழந்தை ஏசுவுடன் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இந்த பேராலயத்தில் கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி மத பாகுபாடு இல்லாமல் அனைத்து மதங்களையும் சார்ந்த பக்தர்களும் வழிபடும் தலமாக விளங்குகிறது.
ஆண்டு திருவிழா
இத்தகைய சிறப்பு மிக்க இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழாவையொட்டி பேராலய ஆண்டு திருவிழா 10 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டிற்கான ஆண்டு திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நாளை மாலை 6 மணிக்கு கொடியேற்றப்படுகிறது. அதைத்தொடர்ந்து பேராலய கலையரங்கில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசீர், தமிழில் திருப்பலி ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
வருகை தரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்
மாதாவின் பிறந்த நாளாக கருதப்படும் செப்டம்பர் 8-ம் தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் விழா நடைபெறுகிறது. விழா நாட்களில் சிறப்பு திருப்பலி, தேர் பவனி நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான ஆரோக்கிய மாதாவின் பெரிய தேர் பவனி வருகிற செப்டம்பர் 7-ம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. 8-ம் தேதி மாதாவின் பிறந்தநாள் விழா நடைபெறுகிறது. இந்நிலையில் இவ்விழாவில் கலந்துக்கொள்ள தமிழகம் மற்றும் இன்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு நடைபயணம் ஆகவும், பேருந்து, ரயில் மூலம் வருகை புரிவார்கள்.
ரயில்வே அறிவிப்பு
இங்கு வரும் பக்தர்களின் போக்குவரத்து சிரமத்தை போக்கும் வகையில் வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு, பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையிலும், தெற்கு மத்திய ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்கவுள்ளது. இதுகுறித்து திருச்சி ரயில்வே கோட்டம் சார்பில் இன்று (ஆகஸ்ட் 26, 2025) செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ரயில்களின் விபரம்
ரயில் எண் 07093/07094
சார்லப்பள்ளி - வேளாங்கண்ணி சிறப்பு ரயில்
- புறப்படும் மற்றும் வந்தடையும் நேரம்
ரயில் எண் 07093 சார்லப்பள்ளி - வேளாங்கண்ணி சிறப்பு ரயில்: இந்த ரயில் செப்டம்பர் 4, 2025 அன்று (வியாழக்கிழமை) காலை 08:10 மணிக்கு சார்லப்பள்ளியில் இருந்து புறப்பட்டு, மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 10:10 மணிக்கு வேளாங்கண்ணி வந்தடையும்.
ரயில் எண் 07094 வேளாங்கண்ணி - சார்லப்பள்ளி சிறப்பு ரயில்: மறுமார்க்கத்தில், இந்த ரயில் செப்டம்பர் 5, 2025 அன்று (வெள்ளிக்கிழமை) இரவு 11:30 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு, மூன்றாவது நாள் (சனிக்கிழமை) அதிகாலை 01:30 மணிக்கு சார்லப்பள்ளியைச் சென்றடையும்.
பெட்டிகளின் அமைப்பு
இந்த சிறப்பு ரயிலில் ஒரு ஏசி டூ டயர் பெட்டி, இரண்டு ஏசி த்ரீ டயர் பெட்டிகள், 17 ஸ்லீப்பர் கிளாஸ் பெட்டிகள், இரண்டு பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் மற்றும் இரண்டு லக்கேஜ் கம் பிரேக் வேன்கள் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன.
நிறுத்தங்கள் மற்றும் நேரம்
இந்த ரயில்கள் பின்வரும் முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்:
- சார்லப்பள்ளி: புறப்படும் நேரம் - 08:10 (வியாழக்கிழமை). குண்டூர் சந்திப்பு: வந்தடையும் நேரம் - 13:00, புறப்படும் நேரம் - 13:10.
- ரேணிகுண்டா சந்திப்பு: வந்தடையும் நேரம் - 22:20, புறப்படும் நேரம் - 22:30.
- காட்பாடி சந்திப்பு: வந்தடையும் நேரம் - 01:45, புறப்படும் நேரம் - 01:50
- விழுப்புரம் சந்திப்பு: வந்தடையும் நேரம் - 04:35, புறப்படும் நேரம் - 04:45
- சிதம்பரம்: வந்தடையும் நேரம் - 06:10, புறப்படும் நேரம் - 06:12.
- மயிலாடுதுறை சந்திப்பு: வந்தடையும் நேரம் - 07:30, புறப்படும் நேரம் - 07:32
- நாகப்பட்டினம் சந்திப்பு: வந்தடையும் நேரம் - 09:48, புறப்படும் நேரம் - 09:50
- வேளாங்கண்ணி: வந்தடையும் நேரம் - 10:10 (வெள்ளிக்கிழமை).
மறுமார்க்கத்தில், ரயில் எண் 07094 வேளாங்கண்ணியில் இருந்து இரவு 11:30 மணிக்கு புறப்பட்டு (வெள்ளிக்கிழமை), புறப்படும்.
