தஞ்சாவூர்: சிவகோஷத்தை கேட்கும்போது பரவமடைந்தேன். தமிழில் பகவத் கீதை இசைத்தொகுப்பை வெளியிடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது என்று பெருமிதத்துடன் பிரதமர் மோடி தெரிவித்தார்.

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடி திருவாதிரை ராஜேந்திர சோழன் பிறந்தநாள் விழாவில் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

வணக்கம் சோழமண்டலம் .... சகோதர, சகோதரிகளே... நமச்சிவாயம் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாழ் வாழ்க. நான் ஒரு விஷயத்தை கவனித்தேன். எப்போதெல்லாம் நயினார் நாகேந்திரன் பெயர் கூறப்படுகிறதோ அப்போதெல்லாம் உங்கள் இடத்தில் ஒரு உற்சாக கொப்பளிப்பை நான் கவனித்து விட்டேன். இது ராஜராஜ சோழனின் இடம். இந்த இடத்திலே அவையிலே என்னுடைய சகாவான இசைஞானி இளையராஜா அவர்களின் சிவ பக்தி இந்த மழைக்காலத்திலே இது மிகவும் சுவாரஸ்யமாக, பக்தி  நிரம்பியதாக இருந்தது. நான் காசியின் நாடாளுமன்ற உறுப்பினர் இங்கே இந்த சிவ கோஷத்தை கேட்கும்போது எனக்கு உள்ளுக்குள்ளே மிகவும் பரவசமாக இருக்கிறது.

சிவ தரிசனத்தால் அற்புதமான சக்தி. இளையராஜா அவர்களின் இசை. ஓதுவார்களின் மந்திர உச்சாடனங்கள், உண்மையிலேயே இந்த ஆன்மீக அனுபவம் என் ஆன்மாவை ஆனந்த வெள்ளத்தில் ஆழ்த்தி விட்டது. பவித்திரமான மழைக்காலம். அதோடு பிரகதீஸ்வரர் கோயில் நிர்மாணம் தொடங்கி ஓர் ஆயிரம் ஆண்டுகள் வரலாற்று பூர்வமான சந்தர்ப்பம். இப்படிப்பட்ட அற்புதமான வேளையிலே சிவனின் பிரகதீஸ்வரன் பாதாள விந்தாரங்களிலே சிரம் தாழ்த்த, அவரை வழிபாடு செய்யக்கூடிய பெரும் பேரு எனக்கு கிடைத்துள்ளது.

நான் இந்த சரித்திர பூர்வமான ஆலயத்திலே 140 கோடி  மக்களின் நலனுக்காகவும், பாரத நாட்டின் நிரந்தர வளர்ச்சிக்காகவும் என் வேண்டுதல்களை முன் வைத்தேன். என் விருப்பமெல்லாம் இறைவன் சிவனின் நல்லாசிகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். நம பார்வதி பதயே ஹர ஹர மகாதேவா. நான் வருவதற்கு சற்று தாமதம் ஆனது இதற்கு காரணம் பாரத அரசின் கலாச்சார அமைச்சகம் ஒரு கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. மிகவும் அற்புதமான கண்காட்சி. இதை பார்த்த பிறகு அங்கு இருக்கும் வெளிப்பாடுகளை நான் கண்ணுற்ற பிறகு, என் நெஞ்சத்தில் பெருமிதம் பொங்கியது. உற்சாகம் ஊற்றெடுத்தது. மக்கள் நலனுக்காக இதில் உள்ள கூறுகள், எத்தனை விசாலமான எண்ணம், மனித சமுதாயம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த வெளிப்பாடுகளில் ஜொலிக்கிறது என்பதை பார்த்து நான் வியப்படைந்தேன். அனைவரும் இந்த கண்காட்சியை, இங்குள்ள வெளிப்பாடுகளை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்பதைத்தான் நான் இங்கே வலியுறுத்தி கூறிக் கொள்கிறேன்.

சின்மயா மிஷினின் முயற்சியால் தமிழில் பகவத் கீதை இசைத்தொகுப்பை வெளியிடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்த முயற்சியும் கூட நமது பாரம்பரியத்தை போற்றி பாதுகாக்கும், நம்முடைய மன உறுதிக்கு சக்தி ஊட்டுகிறது. இந்த முயற்சியோடு இணைந்திருக்கும் அனைவருக்கும் நான் என் நெஞ்சார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். சோழ அரசர்கள் தங்களுடைய அரசியல் மற்றும் வியாபார தொடர்புகளின் விரிவாக்கத்தை இலங்கை மாலத்தீவுகள் மற்றும் தென்கிழக்கு ஆசியா வரை செய்திருந்தனர். நான் நேற்று தான் மாலத்தீவில் இருந்து திரும்பி வந்தேன். தமிழ்நாட்டில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

நண்பர்களே சிவ பக்தர்களே சிவனை வழிபாடு  செய்பவர்கள் சிவனுடனே கலந்து விடுகிறான். அவரைப் போலவே அழிவற்றவன் ஆகி விடுகிறான் என நமது சாஸ்திரங்கள் ஓங்கி ஒலிக்கின்றன அதனால் தான் சிவபெருமான் இடத்தில் அதிக பக்தி கொண்ட பாரத தேசத்து சோழர்களின் பாரம்பரியம் கூட அமரத்துவம் அடைந்து விட்டது.

ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் இந்த பெயர்கள் பாரதத்தின் அடையாளங்கள். கௌரவத்தின் இணைச்சொற்கள். சோழப்பேரரசு, சோழ சாம்ராஜ்யத்தின் வரலாறு மற்றும் பாரம்பரியம் இவை பாரதத்தின் மெய்யான வல்லமையின் இயலாற்ற பிரகடனங்கள். பாரதத்தின் அந்த கனவு அளிக்கும் உத்வேகத்தால் உந்தப்பட்டு இன்று நாம்  வளர்ச்சி அடைந்த பாரதத்தின் இலக்கை நோக்கி முன்னேற்றம் கண்டு வருகிறோம். நான்  இந்த உள் எழுச்சி காரணமாக பெரும் பராக்கிரமன் ராஜேந்திர சோழனை நினைத்து பெருமைப்படுகிறேன்.

கடந்த சில தினங்களில் நீங்கள் ஆடி திருவாதிரை உற்சவத்தை கொண்டாடினார்கள் அந்த விழாவின் நிறைவு இன்று. இன்று நிறைவாக நடந்து கொண்டிருக்கிறது. அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நண்பர்களே சோழ சாம்ராஜ்யத்தின் காலகட்டம் பாரதத்தின் பொற்காலங்களில் ஒன்றாக இருந்தது என வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர்.  இந்த காலக்கட்டம் அவர்களின்  போர்த்திறன் வலிமையாக இருந்ததை காண்பிக்கின்றது. ஜனநாயகத்தின் தாய் என்ற வகையிலும் கூட பாரதத்தின் பாரம்பரியத்தை சோழ சாம்ராஜ்யம் முன்னெடுத்து சென்றது. வரலாற்று ஆய்வாளர்கள் மக்களாட்சி என்று சொன்னால் பிரிட்டனின்  மேக்னா பற்றி தொடங்கி பேச தொடங்கி விடுவார்கள். ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே சோழ சாம்ராஜ்யத்தில் குடவோலை முறைப்படி ஜனநாயக வழிமுறைப்படி தேர்தல்கள் நடந்தன.

உலகெங்கிலும் சூழலியல் பாதுகாப்பு, நீர் மேலாண்மை என ஏராளமான விவாதங்கள் நடக்கின்றன. நமது முன்னோர்களோ மிகப் பழமையான காலத்திலேயே கூட இவற்றின் மகத்துவத்தை நன்கு அறிந்து வைத்திருந்தனர். மற்ற இடங்களில் இருந்து தங்கம். வெள்ளி அல்லது பசுக்கள் பிற கால்நடைகள் என்று கவர்ந்து வந்த பலஅரசர்கள் பற்றி நாம் கேள்விபட்டிருக்கிறோம் ஆனால் ராஜேந்திர சோழனுடைய அடையாளமோ புனித கங்கை நீரை கொண்டு வந்ததில் இருக்கிறது.

ராஜேந்திர சோழன் வட பாரத்தில் இருந்து கங்கையை தெற்கிலே நிரப்பினான். இந்த கங்கை நீரைக் கொண்டு இங்கு சோழகங்கை ஏரியில் இட்டு நிரப்பினான். இந்த ஏரி இன்று பொன்னேரி என்ற பெயரால் அழைக்கப்பட்டு வருகிறது. ராஜேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரம் கோயிலை நிர்மாணமும் செய்தான். இந்த ஆலயம் இன்றும் கூட உலகின் கட்டிட கலையின் அற்புதமாக திகழ்கிறது. அன்னை காவிரி பாயும் இந்த பூமியிலே அன்னை கங்கைக்கு திருவிழா எடுக்கப்படுவதும் சோழப்பேரரசின் நற்கொடையாகும்.

அந்த வரலாற்று முக்கியத்துவம் கொண்ட பின்புலத்தின் நினைவினிலே மீண்டும் ஒருமுறை கங்கை நீரை காசியில் இருந்து கொண்டு வந்திருப்பது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இங்கு நெறிப்படி அனுஷ்டானங்கள் நிறைவு பெற்றிருக்கின்றன. புனித கங்கை நீரால் அபிஷேகங்கள் செய்யப்பட்டுள்ளன. நான் காசி மக்களின் பிரதிநிதி. கங்கை அன்னையிடமிருந்து ஆன்மீக ரீதியான அன்பு இருக்கிறது. சோழ அரசர்களின் இந்த செயல் அதோடு இணைந்த இந்த ஏற்பாடு ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற பெரு வேள்வியை போன்றது இது. எரிகிறது. உற்சாகம் அளிக்க வல்லது. 

சோழ அரசர்கள் பாரதத்தை கலாச்சார ஒற்றுமை என்ற இழையில் இணைத்தார்கள் சோழர்களின் இதர கருத்துக்களை எண்ணங்களை முன்னெடுத்துச் சென்றது. நாங்கள் காசி தமிழ் சங்கமும், சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமும் போன்ற ஏற்பாடுகளை வாயிலாக ஒற்றுமையின் ஒருமைப்பாட்டில் பல நூற்றாண்டு காலகட்டமாக கோட்பாடுகளை பலப்படுத்தி வருகிறோம். கங்கைகொண்ட சோழபுரம் போன்ற தமிழகத்தின் பழங்கால ஆலயங்கள் ஆலயங்கள் வாயிலாக பராமரிக்கப்பட்டு வருகின்றன.

தேசத்தின் புதிய நாடாளுமன்றம் நாட்டுக்கு அர்பணிக்கப்பட்ட வேளையிலே  இந்த நிகழ்ச்சியில் ஆன்மீக திறமையை காட்டினார்கள் இதோ உங்கள் மத்தியில் இங்கே விட்டு வெளிப்படுத்தி இருக்கிறார்கள். தமிழ் கலாச்சாரத்தோடு இணைந்த புனிதமான செங்கோல் நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டுள்ளது. அந்த கணத்தை நான் இன்று மீண்டும் நினைத்துப் பார்த்தாலும் கூட என் நெஞ்சம் பெருமிதப்படுகிறது.

நண்பர்களே நான் இப்பொழுதுதான் சிதம்பரம் நடராஜ ஆலயத்தில் சில தீட்சையர்களை சந்தித்தேன் சிவபெருமான் நடராஜராக வழிபடக்கூடிய அந்த திவ்யமான ஆலயத்தில் அங்கிருந்து பிரசாதத்தை அவர்கள் எனக்கு அளித்தார்கள் நடராஜரின் இன்ப சுரூபம் இது நமது தத்துவம் அறிவியல் ஆகியவற்றின் அடையாளம்.நடராஜ சுவாமியின் இதே போன்ற ஆனந்த தாண்டவம் தில்லை பாரத் மண்டபத்தில் அழகுக்கு அழகு சேர்த்துக் கொண்டிருக்கிறது. இதே பாரத் மண்டபத்தில் உலகில் இருக்கும் உலக மகா தலைவர்கள் எல்லாம் கூடினார்கள்.

நமது சைவ பாரம்பரியம் பாரதத்தின் கலாச்சாரத்தோடு நடராஜ பெருமானின் மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது சோழப்பேரரசர்கள் இந்த நிர்மாணத்தில் முக்கியமான சிற்பிகளாக விளங்குகின்றனர் ஆகையால் தான் இன்றும் கூட சைவ பாரம்பரியத்தின் உயிர்புடையதாக மையங்களில் தமிழ்நாடு மிக முக்கியமானதாக உள்ளது. பெருமைக்கு நாயன்மார்களின் சீர் மரபு அவர்களின் பக்தி காப்பியங்கள் செம்மொழியாம் தமிழ் மொழியின் இலக்கியம் நமது போட்டிகளுக்குரிய ஆதீனங்களின் கொந்தளிப்பு அவர்களின் சமூக ஆன்மீகங்களில் பெருமை சேர்த்துள்ளனர்.

இன்று உலகம் நிலையில்லாத வன்முறை மற்றும் சுற்றுச்சூழல் போன்ற பிரச்சனைகளில் உழன்று வரும் வேளையிலே சைவ சித்தாந்தம் அவற்றிற்கு தீர்வு அளிக்கும் பாதையை காட்டுகின்றது. நீங்களே பாருங்கள் அன்பே சிவம் என்றார் சித்தர் திருமூலர் .இன்று இந்த கோட்பாட்டை உலகம் முழுவதும் கடைப்பிடித்தால் பெரும்பாலான சிக்கல்கள் தாமாகவே தீர்ந்து போய்விடும். இந்த எண்ணத்தை தான் பாரதம் இன்று ஒர் உலகம் ஓர் குடும்பம் ஓர் எதிர்காலம் என்ற வகையிலே முன்னெடுத்து சென்று கொண்டிருக்கிறது.

இன்று பாரதம் வளர்ச்சியோடு கூடிய மரபும் என்ற மந்திரத்தை நோக்கி பயணித்து வருகிறது. இன்றைய பாரதம் தனது வரலாற்றின் மீது பெருமிதம் கொண்டிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் நாம் தேசத்தின் பாரம்பரியத்தை போற்றி பாதுகாக்கும் வகையில் மிகுந்த உறுத்தோடும், கருத்தோடும் வழி நடத்தி வந்துள்ளோம். தேசத்தின் பல்வேறு சிலைகள், கலைச்சின்னங்கள் களவாடப்பட்டுள்ளன. அயல்நாடுகளில் விற்கப்பட்டு விட்டன இவற்றை நாங்கள் மீட்டெடுத்து வந்துள்ளோம்.

2016 ஆம் ஆண்டிற்கு பிறகு 600க்கும் அதிகமான தொன்மையான கலை படைப்புகள் உலகின் பல்வேறு தேசங்களில் இருந்தும் பாரதம் வந்துள்ளது. இவற்றிலே நண்பர்களை சற்று கவனமாக கேளுங்கள் 36 கலைப் பொருட்கள் குறிப்பாக தமிழகத்தை சேர்ந்தவை. என்று நடராஜர் லிங்கோப்பவர் தட்சிணாமூர்த்தி அர்த்தநாரீஸ்வரர் நந்திகேஸ்வரர் மூலப்பரமேஸ்வரி பார்வதி சம்பந்த போன்ற மகத்துவம் வாய்ந்த பல சிலைகள் உண்டு இந்த புண்ணிய பூமியிலே மீண்டும் அழகு சேர்த்து வருகிறது.

நண்பர்களே நமது மரபும் தெய்வ தத்துவத்தையும் போற்றும் வகையில் பாரதம் வென்று வர இருக்குமோ இந்த பூமியில் நாம் மட்டுமின்றி பாரதம் தென் துவக்கில் இறங்கிய முதல் தேசமானது அப்போது நாம் நிலவின் அந்த இடத்திற்கு சிவசக்தி என்று பெயர் சூட்டினோம் நிலவின் அது முக்கியமான பாகம் பகுதி இனி சிவசக்தி எனப் என்ற பெயரால்தான் அடையாளம் காணப்படும்.

நண்பர்களே சோழர்கள் காலத்திலே எந்த பொருளாதாரம் உன்னது உயரங்களை பாரதம் தொட்டது அவை இன்றும் கூட நமது கருத்துக்கு ராஜராஜ சோழன் சக்தி வாய்ந்த கடற்படை உருவாக்கினார் ராஜேந்திர சோழன் இதை மேலும் வலுப்படுத்தினார் உறுதிப்படுத்தினார். நண்பர்களே சோழ சாம்ராஜ்ஜியம் புதிய பாரதத்தின் நிறுவங்கமானது பழமையான சாலை வரைபடம் போன்றது நாம் வளர்ச்சி அடைந்த தேசத்தை உருவாக்க வேண்டும் என்று சொன்னால் நாம் ஒற்றுமையின் மீது அழுத்தம் அமைக்க வேண்டும் நாம் நமது கடற்படையினை பாதுகாப்பு படைகளை பலம் உள்ளவையாக ஆக்க வேண்டும் நாம் புதிய சந்தர்ப்பங்களை தேடிக்கொண்டே இருக்க வேண்டும் மேலும் இவை அனைத்தோடும் கூடவே நமது விழிமங்களையும் நன்கு பாதுகாத்து பேண வேண்டும். இந்த தேசம் இந்த உத்வேகத்தை தாங்கி முன்னேறி வருகிறது என்பது எனக்கு பெரும் உபகையை அளிக்கிறது.  

நண்பர்களே இன்றைய பாரதம் நமது பாதுகாப்பை அனைத்தையும் விட பெரிதாக கருதுகிறது யாராவது பாரதத்தின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மை மீது தாக்குதல் தொடுத்தால் பாரதம் எப்படிப்பட்ட பதிலடி கொடுக்கும் என்பதை ஆபரேஷன் சிந்தூர் போது உலகமே உற்றுப் பார்த்தது. பாரதத்தின் எதிரிகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் எந்த ஒரு மறைவிடமும் பாதுகாப்பாக கிடையாது என்பதை ஆபரேஷன் சிந்தூர் வெளிச்சம் போட்டு காட்டியது. நான் இங்கே வந்தபோது அங்கே எலி பேடிலே தரையை தொட்டேன். ஏறக்குறைய மூன்று, நான்கு கிலோ மீட்டர்கள் தூரம் இருந்தது அப்போது சாலையிலே அங்கு ஒரு ரோட் ஷோ ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது அனைவரிடத்திலும் ஆபரேஷன் சிந்து என்ற ஜெயகோஷம் கோஷம் அவர்களது வாயிலே இதுவே மந்திர ஒளியாக ஒலித்துக் கொண்டிருந்தது இதே உணர்வு தான் நாடு முழுவதும் உள்ள குடிமக்களின் மனதிலும் உள்ளத்திலும் குளித்துக் கொண்டிருக்கிறது பிரதிபலித்து வருகின்றது. நம் நாட்டில் மட்டுமல்ல உலகமே இதை கண்டு வியந்து பார்க்கிறது இந்தியாவின் வல்லுமையை உலகம் தெரிந்து கொண்டது.

நண்பர்களே ராஜேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரத்தை கட்டினாலும் கூட அதனுடைய கோபுரத்தை தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோபுரத்தை விட குறைவாக வைத்தார் என்பதை நாம் அனைவரும் அறிவோம் தனது தந்தையாரால் கட்டி எழுப்பப்பட்ட ஆலயத்தின் கோபுரத்தை அனைத்தையும் விட உயரமானதாக தக்க வைக்கவே அவர் விரும்பினார். தனது மகத்துவத்திற்கும் இடையையும் கூட ராஜேந்திர சோழன் மிகுந்த பணிவினை வெளிப்படுத்தினார்.

 இன்றைய புதிய பாரதம் இதே உணர்வின் ஆதாரத்தில் முன்னேறிக் கொண்டிருக்கின்றது நாம் தொடர்ந்து பலமடைந்து வருகின்றோம் இருந்தாலும் கூட நமது உணர்வுகள் உலகத்தின் நண்பனுக்கான வை உலக நலனுக்கான வை. நம்முடைய பாரம்பரியத்தின் மீது பெருமித உணர்வை முன்னெடுக்கும் வேளையில் இன்று இங்கு மேலும் ஒரு உறுதிபாட்டை நான் மேற்கொள்கிறேன். வரவிருக்கும் காலங்களில் தமிழ்நாட்டிலே ராஜராஜ சோழன் அவரது மைந்தன் மகத்தான ஆட்சியாளர் முதலாம் ராஜேந்திர சோழனின் உடைய சமாதானமான உருவச் சிலையை நிறுவாணம் செய்வோம். இந்த உருவ சிலையை நமது வரலாற்று விழிப்புணர்வின் நவீன கொடி மரங்கள் ஆகும்.

இன்று டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் நினைவு தினம். வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கு தலைமை தாங்க டாக்டர் கலாம் சோழர் பேரரசுகளை போல் லட்சக்கணக்கான இளைஞர்கள் தேவை சக்தியும் பக்தியும் நிறைந்த இப்படிப்பட்ட இளைஞர்கள் 140 கோடி நாட்டு மக்களின் கனவுகளை நிறைவேற்றுவார்கள் நாம் அனைவரும் இணைந்து ஒரே பாரதத்திற்கான உறுதிபாட்டை முன்னெடுத்துச் செல்வோம் இந்த உணர்வோடு கூடவே மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.