முன்பட்ட குறுவை: நாற்றங்கால் தயாரிப்பில் தீவிரம் காட்டும் தஞ்சை விவசாயிகள்!
பூதலூர் வேளாண்மை வட்டாரத்தில் முன்பட்ட குறுவை இதுவரை 3 ஆயிரத்து 750 ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் தற்போது முன்பட்ட குறுவை சாகுபடி பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதற்காக விவசாயிகள் நாற்றங்கால் தயாரிப்பு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
தமிழகத்தின் நெல் களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா, குருவை, கோடை என மூன்று போகும் சாகுபடி நடைபெறும். தஞ்சையின் முக்கிய சாகுபடி பயிராக நெல் உள்ளது. கரும்பு, நிலக்கடலை, உளுந்து, சோளம் என்று பயிரிடப்பட்டாலும் அதிக பரப்பளவில் நெல் சாகுபடியை தான் விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
நெல் அதிகம் விளையும் தஞ்சை மாவட்டத்தில் தற்போது சம்பா, தாளடி சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையில் ஒரு சில பகுதிகளில் தாளடி சாகுபடியும் நடைபெறும். தற்போது தஞ்சை மாவட்டத்தில் முற்பட்ட குறுவை சாகுபடி நடைபெற்று வருகிறது.
தஞ்சை மாவட்டம் திருவையாறு, பூதலூர், திருக்காட்டுப்பள்ளி, செங்கிப்பட்டி, பாபநாசம், அம்மாபேட்டை, மாரியம்மன் கோவில், சூரக்கோட்டை, வாளமரக்கோட்டை, காட்டூர், உள்ளூர், மடிகை, வாண்டையார் இருப்பு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, அதிராம்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கோடை சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே விவசாயிகள் நடவு செய்யப்பட்ட பகுதியில் தற்போது உரம் தெளிப்பது, களை எடுப்பது உள்ளிட்ட பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஒரு சில பகுதியில் தற்போது நாற்றங்கால் தயாரிக்கப்பட்டு நடவு பணியும் நடைபெற்று வருகிறது.
அதன்படி பூச்சி தாக்குதல் ஏற்படாமல் இருக்க ஒரு சில பகுதிகளில் விவசாயிகள் மருந்து தெளிக்கும் பணிகளும் மேற்கொண்டுள்ளனர். பூதலூர் பகுதியில் முன்பட்ட குறுவை சாகுபடியில் களை எடுக்கும் பணியில் பெண் விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
பூதலூர் வட்டாரத்தில் 3,750 ஏக்கரில் முன்பட்ட குறுவை சாகுபடி நடந்து வருகிறது. கல்லணை தலைப்பில் அமைந்துள்ள பூதலூர் வேளாண்மை வட்டாரத்தில் காவிரி கரையோர பகுதிகளில் முன்பட்ட குறுவை சாகுபடி நடந்து வருகிறது. கோடை வெப்பத்தை தாங்கி வளரும் அம்பை 16 நெல் ரகத்தை பெரும்பாலான விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். அக்னி நட்சத்திர வெயில் கொளுத்தியபோதும் விவசாயிகள் கண்ணும் கருத்துமாக பயிர் செய்த நெற்பயிரை கவனித்து வருகின்றனர்.
தற்போது நடவு செய்த முன்பட்ட குறுவை நெல் வயல்களில் மேலும் இடும் பணிகள், களை எடுக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. பூதலூர் வேளாண்மை வட்டாரத்தில் திருக்காட்டுப்பள்ளி, அகரப்பேட்டை ஆகிய பகுதிகளில் ஆழ்துளை கிணறு வசதி உள்ள விவசாயிகள் முன்பட்ட குறுவை சாகுபடி செய்துள்ளனர்.
பூதலூர் வேளாண்மை வட்டாரத்தில் முன்பட்ட குறுவை இதுவரை 3 ஆயிரத்து 750 ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவ்வப்போது கோடை மழை பெய்து வருவது பயிர்களுக்கு நன்மையாக இருக்கும் என்றும், நடவு செய்யப்பட்ட முன்பட்ட குறுவைப் பயிர்கள் நல்ல நிலையில் வளர்ந்து வருவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
Before You Go
BJP Breaks TMC | 50 MLA ராஜினாமா.. உடைந்தது திரிணாமுல் காங்.,? மம்தாவை காலி செய்யும் மோடி
ட்ரெண்டிங் செய்திகள்





















