மேலும் அறிய

வல்லம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா

தூய்மைப்பணியாளர்களுக்கு பானை உடைத்தல் உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசுகளை திமுக நகர செயலாளர் கல்யாணசுந்தரம் வழங்கி பேசினார்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே வல்லம் பேரூராட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா வளம் மீட்பு பூங்காவில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. 

தஞ்சாவூர் அருகே உள்ளது வல்லம் பேரூராட்சி. இங்கு நேற்று சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மது, போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியாகவும், சமத்துவப் பொங்கலாகவும் வளம் மீட்பு பூங்காவில் கலை நிகழ்ச்சி, விளையாட்டு போட்டிகளுடன் கொண்டாடப்பட்டது. 

தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது வல்லம் தேர்வுநிலை பேரூராட்சி. 15 வார்டுகள் கொண்ட இந்த பேரூராட்சியில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பள்ளிகள் என ஏராளமான கல்வி நிலையங்கள் அமைந்துள்ளன. இங்குள்ள குடியிருப்பு, வணிக நிறுவனங்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் வார்டு 12ல் அமைந்துள்ள அய்யனார் நகர் பகுதியில் 7 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள வளம் மீட்பு பூங்காவிற்கு கொண்டு செல்லப்படுகிறது. குப்பை கிடங்கு என்று சொன்னாலே மூக்கை பொத்திக் கொள்வார்கள். ஆனால் வல்லம் வளம் மீட்பு பூங்காவோ சுற்றுலாத்தலம் போல் உள்ளது. அந்தளவிற்கு மிகவும் சுகாதாரத்துடன் இந்த வளம் மீட்பு பூங்கா பராமரிக்கப்படுகிறது.

வல்லம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா

இந்த வளம் மீட்பு பூங்காவில் நடத்தப்பட்ட பொங்கல் விழாவிற்காக கோலங்கள் போடப்பட்டு அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மேலும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதில் மது, போதை ஒழிப்பு விழிப்புணர்வு, குடும்ப ஒற்றுமை உட்பட பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டது. விழாவிற்கு செயல் அலுவலர் ராஜசேகரன் தலைமை வகித்தார். திமுக ஒன்றிய செயலாளர் அருளானந்தம் பொங்கல் வைக்கும் பணிகளை துவக்கி வைத்தார். பேரூராட்சித் தலைவர் செல்வராணி கல்யாணசுந்தரம், துணைத்தலைவர் மகாலட்சுமி வெங்கடேசன், பேரூராட்சி உறுப்பினர்கள் அமுதா, சேகர், ரௌலத் நிஷா, சுந்தர்ராஜ், அன்பழகன் ஆகியோர் பொங்கல் பானையில் அரிசி, வெல்லம் உட்பட பொருட்களை இட்டனர். பால் பொங்கி வந்த போது பொங்கலோ பொங்கல் என்று உற்சாகமாக குரல் எழுப்பி கொண்டாடினர். 

பின்னர் தூய்மைப்பணியாளர்களுக்கு பானை உடைத்தல் உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசுகளை திமுக நகர செயலாளர் கல்யாணசுந்தரம் வழங்கி பேசினார். இதில் தூய சவேரியார் ஆலய உதவி பங்குதந்தை அன்புராஜா, பேரூராட்சி உறுப்பினர்கள் ருக்மணி, ஆரோக்கியசாமி, பரிமளா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள் ஆண்கள் பள்ளி கண்ணன், பெண்கள் பள்ளி மாணிக்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். துப்புரவு பணியாளர்கள் அனைவருக்கும் பொங்கல் வைக்க தேவையான உருளி பாத்திரம், அரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய் அடங்கிய பொருட்கள் வழங்கப்பட்டது. 

ஏற்பாடுகளை  பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேசன் மற்றும் தனபால், சதீஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

சமத்துவ பொங்கல் விழா குறித்து பேரூராட்சித் தலைவர் செல்வராணி கல்யாணசுந்தரம் கூறுகையில், பொங்கல் எப்படி இனிமையானதோ அதேபோல் சமத்துவத்துடன் அனைவரும் கூடி இன்பமாக வாழ வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பேரூராட்சி பணியாளர்கள், தூய்மைப்பணியாளர்கள் என அனைவரும் சமமாக, மகிழ்ச்சியாக பொங்கலை கொண்டாட இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது என்றார்.

பேரூராட்சி செயல் அலுவலர் ராஜசேகரன் கூறுகையில், பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மைப்பணியாளர்கள் 86 பேரும் தங்கள் குடும்பத்தினருடன் உற்சாகமாக கொண்டாட இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மேலும் போதைப்பொருள் ஒழிப்பு, குடும்பத்தினர் மத்தியில் ஒற்றுமை போன்றவற்றை விளக்கும் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது என்றார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS vs Sengottaiyan: செங்கோட்டையனுக்கு எதிராக இபிஎஸ்.. கொங்கு மண்டலத்தில் சரிகிறதா அதிமுக வாக்கு?
EPS vs Sengottaiyan: செங்கோட்டையனுக்கு எதிராக இபிஎஸ்.. கொங்கு மண்டலத்தில் சரிகிறதா அதிமுக வாக்கு?
TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இனி இதுவும் ஆன்லைனில்! உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இனி இதுவும் ஆன்லைனில்! உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
நெக்ஸ்ட் தேர்வு: மருத்துவ மாணவர்களுக்கு நிம்மதி! இந்திய மருத்துவ ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு
நெக்ஸ்ட் தேர்வு: மருத்துவ மாணவர்களுக்கு நிம்மதி! இந்திய மருத்துவ ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு
Ilavarasu: தற்கொலை எண்ணத்தில் இருந்த நடிகர் இளவரசு.. தப்பி வந்தது எப்படி?
Ilavarasu: தற்கொலை எண்ணத்தில் இருந்த நடிகர் இளவரசு.. தப்பி வந்தது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

அதிமுகவில் இருந்து OUT! செங்கோட்டையன் நீக்கம்! ஆக்‌ஷன் எடுத்த EPS
ஆட்டத்தை தொடங்கிய EPSநிர்வாகிகளுடன் திடீர் MEETING!செங்கோட்டையன் நிரந்தர நீக்கம்?
CJI Suryakant |ARTICLE 370 முதல் SIR வரை!Gamechanger சூர்யகாந்த் 53-வது தலைமை நீதிபதி! Supreme Court
நாக்கை நீட்டிய பாம்புதெறித்து ஓடிய மக்கள் மருத்துவமனையில் பரபரப்பு
’’தவெக வாழ்க!’’கோஷமிட்ட புஸ்ஸி ஆனந்த்கடுப்பான விழா கமிட்டி’’போதும் இறங்குங்க’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS vs Sengottaiyan: செங்கோட்டையனுக்கு எதிராக இபிஎஸ்.. கொங்கு மண்டலத்தில் சரிகிறதா அதிமுக வாக்கு?
EPS vs Sengottaiyan: செங்கோட்டையனுக்கு எதிராக இபிஎஸ்.. கொங்கு மண்டலத்தில் சரிகிறதா அதிமுக வாக்கு?
TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இனி இதுவும் ஆன்லைனில்! உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இனி இதுவும் ஆன்லைனில்! உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
நெக்ஸ்ட் தேர்வு: மருத்துவ மாணவர்களுக்கு நிம்மதி! இந்திய மருத்துவ ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு
நெக்ஸ்ட் தேர்வு: மருத்துவ மாணவர்களுக்கு நிம்மதி! இந்திய மருத்துவ ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு
Ilavarasu: தற்கொலை எண்ணத்தில் இருந்த நடிகர் இளவரசு.. தப்பி வந்தது எப்படி?
Ilavarasu: தற்கொலை எண்ணத்தில் இருந்த நடிகர் இளவரசு.. தப்பி வந்தது எப்படி?
TN RTE Admission 2025-26: நடந்து முடிந்த ஆர்டிஇ மாணவர் சேர்க்கை; எந்தெந்த பள்ளிகளில் எத்தனை பேர் தெரியுமா?
TN RTE Admission 2025-26: நடந்து முடிந்த ஆர்டிஇ மாணவர் சேர்க்கை; எந்தெந்த பள்ளிகளில் எத்தனை பேர் தெரியுமா?
TN Weather Report: வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி; வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு என்ன.?
வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி; வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு என்ன.?
Sengottaiyan: பரபரப்பின் உச்சம்.. செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கம்! இபிஎஸ்  அதிரடி
Sengottaiyan: பரபரப்பின் உச்சம்.. செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கம்! இபிஎஸ் அதிரடி
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
Embed widget