புதிய வரலாறு: தஞ்சாவூர் மாநகராட்சிக்கு முதன்முறையாக பெண் ஐஏஎஸ் ஆணையர் நியமனம்
தஞ்சாவூர் மாநகராட்சிக்கு முதல் ஐஏஎஸ் அதிகாரியாக வெ. தீபனா விஸ்வேஸ்வரி அண்மையில் நியமிக்கப்பட்டார்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகராட்சியின் ஆணையராக வெ.தீபனாவிஸ்வேஸ்வரி பொறுப்பேற்றுக் கொண்டார். தஞ்சாவூர் மாநகராட்சியின் ஆணையராக பொறுப்பேற்கும் முதல் ஐஏஎஸ் பெண் அதிகாரி என்பதும் குறிப்பிடத்தக்கது.
தஞ்சாவூர் நகராட்சி கடந்த 2014-ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 2014 ஆம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. என்றாலும், மாநகராட்சியின் ஆணையராக நகராட்சிகள் மண்டல இயக்குநர் நிலையில் இருந்த அலுவலர்களே நியமிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், தஞ்சாவூர் மாநகராட்சிக்கு முதல் ஐஏஎஸ் அதிகாரியாக வெ. தீபனா விஸ்வேஸ்வரி அண்மையில் நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து மாநகராட்சியின் ஆணையராக முதல் ஐஏஎஸ் அதிகாரியாக வெ.தீபனாவிஸ்வேஸ்வரி பொறுப்பேற்றுக் கொண்டார். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியியல் பட்டப்படிப்பு படித்துள்ளார்.
இவர் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 117 வது இடத்தைப் பெற்று தேர்ச்சி பெற்றார். இதையடுத்து, 2019 ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்த பல்வேறு இவர் தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் உள்பட பல்வேறு பொறுப்புகளில் இருந்தார். கடைசியாக எல்காட் நிறுவன செயல் இயக்குநராக இருந்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: எனது சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம், நான் கடந்த 2019-ம் ஆண்டில் ஐஏஎஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்றேன். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பணியாற்றிய நான் முன்னதாக எல்காட் நிறுவனத்தின் செயல் இயக்குநராக பணியாற்றி வந்தேன். தற்போது பணியிட மாறுதலில் தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுள்ளேன்.
இந்த மாநகராட்சியின் முதல் ஐஏஎஸ் அதிகாரி அந்தஸ்த்தில் ஆணையராக நான் பொறுப்பேற்றுள்ளதை பெருமையாக கருதுகிறேன். தஞ்சாவூர் மாநகராட்சியில் குப்பை இல்லாத மாநகராட்சியாக மாற்றப்படும். அதே போல் மாவட்டம் முழுவதும் பசுமையாக இருப்பது போன்று, மாநகராட்சி பகுதியிலும் பசுமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தேவையான இடங்களை அழகுப்படுத்தவும், தெருவிளக்குகள், சாலை வசதிகள், குடிநீர் பிரச்சினை, புதை சாக்கடை குழாய்களில் அடைப்புகள் உள்ளிட்ட மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க உரிய கவனம் செலுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையடுத்து மாநகராட்சி முன்னாள் ஆணையர் கண்ணன் மற்றும் பணியாளர்கள் பலரும் ஆணையரை சந்தித்து தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர்.
Before You Go
Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
ட்ரெண்டிங் செய்திகள்






















