நாகையில் 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையை கொடுத்து 22 ஆயிரம் ரூபாய் அபராதத்தையும் அளித்து நாகை போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளது.

 

நாகை மாவட்டம் திருப்பூண்டியை அடுத்த காரைநகர் பகுதியை சேர்ந்த வாலிபர் அருள்தாஸ் என்பவருக்கும்,  15 வயது சிறுமிக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அருள்தாஸ் சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அதனால் சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். இந்த நிலையில் வீட்டிலிருந்த சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அவரை மருத்துவமனையில் பரிசோதனை செய்யும்போது எட்டு மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து மருத்துவர்கள் மூலம் காவல்துறையில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

 



 

அதனைத் தொடர்ந்து 15 வயது சிறுமி நாகப்பட்டினம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த நாகப்பட்டினம் அனைத்து மகளிர் போலீசார் அருள்தாசை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் நாகப்பட்டினம் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாத்தல் சட்ட(போக்சோ) சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. 8 ஆண்டுகள் நடைபெற்று வந்த இந்த வழக்கில்  குற்றவாளியான அமல்தாசுக்கு 20 வருடம் சிறை தண்டனையும், 22 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும்  அமர்வு நீதிபதி மணிவண்ணன் தீர்ப்பளித்தார். மேலும் அபராத தொகை கட்ட தவறியதால் மேலும் ஒரு வருடம் நீட்டித்து 21 வருடம் சிறை தண்டனை வழங்கி குற்றவாளியை கடலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் குற்றவாளியை கடலூர் மத்திய சிறைக்கு அழைத்துச் சென்று அங்கு அடைத்தனர்.