தஞ்சாவூா்: தி.மு.க கூட்டணி பலம் வாய்ந்ததாக உள்ளது. எடப்பாடி பழனிசாமி கூறுவதை மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள் என்று தஞ்சையில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

Continues below advertisement

தஞ்சையில் நடந்த மத்திய மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் தி.மு.க முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது:

எடப்பாடி பழனிச்சாமி விடியாத ஆட்சி என்று சொல்வதை எல்லாம் மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள். பெண்களுக்கான ஏராளமான நல்ல திட்டங்களை நமது முதலமைச்சர் மு .க. ஸ்டாலின். செயல்படுத்தியுள்ளார். எந்த ஆட்சிலும் நடைபெறாத அளவுக்கு பல்வேறு நல்ல திட்டங்களை செய்து சாதனை படைத்துள்ளார். 

Continues below advertisement

நான் ஏற்கனவே சொன்னது போல 2006, 2016-ஆம் ஆண்டு  கருணாநிதி   ஆட்சி தான் சிறப்பான ஆட்சி என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் தற்போது அதைவிட சிறப்பான ஆட்சியை நடத்திக் கொண்டு வருகிறார் முதல்வர் ஸ்டாலின். கடந்த 6 மாதத்திற்கு முன்பே தி.மு.க தேர்தல் பரப்புரை தொடங்கிவிட்டது. கூட்டணி கட்சிகளை முதலமைச்சர் நல்லபடியாக வைத்துள்ளார். தி.மு.க கூட்டணி மிகவும் பலம் வாய்ந்ததாக உள்ளது.

மு.க.ஸ்டாலின் தான் மீண்டும் முதலமைச்சர். கருத்துக்கணிப்பு திமுகவுக்கு சாதகமாக வந்து கொண்டிருக்கிறது. செல்லும் இடங்களில் எல்லாம் முதலமைச்சருக்கு மக்கள் சிறப்பான வரவேற்பு  அளிக்கிறார்கள். முதலமைச்சர் மீது தனி மரியாதை வைத்துள்ளார்கள்.

தி.மு.க தான் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என அனைவருக்கும் தெரியும். நீங்க எந்த ஆட்சிலும் இல்லாத அளவிற்கு அரசின் நல திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் சென்று சேருகிறதா என்பதை கண்டறிந்து  எங்கையாவது குறை இருந்தால் அதனை உடனடியாக மாவட்ட கலெக்டர்களிடம்  பேசி சரி செய்து கொடுக்கிறார்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமை ஒவ்வொரு இடத்துலயும் நடத்தி 20 ஆண்டு காலம், 30 ஆண்டு காலமாக நடைபெறாத பணிகளெல்லாம் ஒரே நாளில் முடிச்சு தந்தது நமது முதலமைச்சர்தான். தீர்க்க முடியாத பிரச்சனைகள் அனைத்தும் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன.

உதாரணமாக இ.பி. டிரான்ஸ்பார்மர் அவ்வளவு எளிதாக டிரான்ஸ்பர் ஆகாது. கூட்டு பட்டா நிவர்த்தி ஆகாது. பல பிரச்சனை வரும். இந்த மாதிரி தீர்க்க முடியாத பிரச்சனைகளை கூட ஒரே நாளில் முகாமில் தீர்த்து வைத்தது முதலமைச்சர் தான். அதனால் திட்டங்கள் முழுமையாக கிராமங்களை நோக்கி சென்று உள்ளது. திமுகவுடன் யார் யார் கூட்டணி என்பது குறித்து முதலமைச்சர் தான் பேசி இறுதி முடிவு எடுப்பார். எங்களிடம் என்ன வேலை சொல்கிறாரோ அதை நிறைவேற்றுவதுதான் எங்களது வேலை. கண்டிப்பாக திமுக தான் தேர்தலில் ஜெயிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.