தஞ்சை அருகே தேர் திருவிழாவின் போது மின்சாரம் பாய்ந்து 11 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கான காரணம் மின்சார கம்பிகள் முறையாக மாற்றி அமைக்கப்படாததே என அக்கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.
அதனை அடுத்து, தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்திக்க இருக்கிறார். காலை 11.30 மணியளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்று அங்கிருந்து தஞ்சாவூர் செல்கிறார்.தேர் மின்கம்பியில் உரசிய விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். 15 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தஞ்சாவூர் தேர் விபத்து தொடர்பாக சட்டப்பேரவையில் நடந்த விவாதத்தின்போது பேசிய இந்து சமநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, அரசுக்கு தகவல் தெரிவிக்காமல் நடந்த தேர் திருவிழா என தெரிவித்திருக்கிறார். மேலும், கோவில் விழாவில் நடைபெற்றது திருவிழா அல்ல, சப்பர ஊர்வலம் என தெரிவித்திருக்கிறார். திருவிழாவை கிராம மக்களே ஒன்று கூடி நடத்தி உள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், திருவிழாக்களில் போதிய பாதுகாப்பு இல்லை எனக்கூறி சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்தது. மேலும், தஞ்சை மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் தேர் விபத்து ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
விபத்து தொடர்பாக பேச அனுமதி கேட்டு அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்களை சபாநாயக்கர் அப்பாவு வெளியேற்றினார். தொடர்ந்து பேசிய அவர், ஒரு தீர்மாணத்தில் பேசி முடித்து வெளிநடப்பு செய்தபின்பு எங்கிருந்தோ ஞானோதியம் வந்தது போல மீண்டும் அவையில் வந்து பேசுவதில் என்ன நியாயம் இருக்கிறது என்று தெரியவில்லை என தெரிவித்திருக்கிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்