இந்தியாவில் கடவுள் சிலைகளுக்கு மட்டுமில்லாது, அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா நடிகர் நடிகைகள், விளையாட்டு வீரர்களுக்கு சிலை வைத்து வழிபடும் வழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் தாய் மற்றும் மனைவி மீதான அன்பு காரணமாக அவர்களக்கு மார்பளவு சிலை வைத்து வழிபாடு நடத்தி வருகிறார் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் மதன்மோகன்
இந்தியாவில் ஆண்கள் தங்கள் மனைவியின் மீது கொண்டுள்ள பாசத்தின் காரணமாக அவர்களின் பிரிவுக்குப் பின்னர் மனைவியின் நினைவாக பல நினைவு சின்னங்களை கட்டி உருவாக்கி உள்ளன. அதில் ஆக்ராவில் உள்ள தாஜ்மகால் அவற்றில் மிகவும் புகழ்பெற்றது. மனைவிக்கு கோயில் கட்டும் சம்பவம் இப்போதும் ஆங்காங்கே நடைபெற்று கொண்டு வருகிறது.
மயிலாடுதுறை கஸ்தூரிபாய் தெருவைச் சேர்ந்தவர் 72 வயதான மதன்மோகன். இவரது மனைவிக்கு கடந்த ஆண்டு அவர் இறந்த முதலாம் ஆண்டு நினைவு நாளில் மனைவி மற்றும் தாய்க்கு தனது வீட்டின் வாசலில் தத்ரூபமாக சிலை வடிவமைத்து கோயில் ஒன்றை கட்டினார். இவரது மனைவி 61 வயதான மீனாட்சியம்மாள் கடந்த 2019 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில் கணவன், மனைவியாக 40 ஆண்டுகள் வாழ்ந்துள்ள இவர், அவரது நினைவை போற்றும் வகையிலும், மனைவியை விட்டு ஒரு நாளும் பிரியாத கணவர் தன் மனைவியின் இறப்பை அவ்வளவு எளிதில் கடந்து செல்ல முடியாத நிலைக்கு சென்றுள்ளார் மதன் மோகன்,
மனைவியிடம் அவ்வப்போது சிறு சிறு சண்டைகள் போட்டாலும் ஒரு மணி நேரத்தில் சமாதானம் ஆகி சகஜ நிலைக்கு வந்து விடுவோம் என நெகிழ்ச்சி தெரிவித்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு கட்டிய கோயிலில் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு 101 லிட்டர் பால், மஞ்சள், சந்தனம், உள்ளிட்ட அபிஷேக பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினார். இதில் மதன்மோகன் மற்றம் அவரது குடும்பத்தினர் திருவுருவ சிலைக்கு பால் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்து வழிபாடு செய்து வழங்கினர்.
தற்போதைய காலகட்டத்தில் திருமணமாகிய ஒரு சில மாதங்களிலேயே கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து வேண்டி பல தம்பதியினர் நீதிமன்றத்திற்கு காத்துக்கிடக்கும் இந்த வேளையில், கணவன் மனைவியாக 40 ஆண்டுகள் தீராத அன்புடன் பழகி, மனைவி இருந்த பின்னர் அவர் நினைவாக அவருக்கு சிலை வடித்து கோயில் கட்டி வழிபட்டு வரும் மதன் மோகன் இந்த செயல் பலரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.