கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன நபரை கண்டுபிடித்து தரக்கோரி நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

 


நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சி சன்னமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவர் நாகை SOS குழந்தைகள் காப்பகத்தில் இரவுநேர காவலராக பணிபுரிந்து வீடு திரும்பும்போது கடந்த 2008 ஆம் ஆண்டு காணாமல் போனார். காணாமல் போன நபரை கண்டுபிடித்து தரக்கோரி குடும்பத்தினர் கடந்த 14 ஆண்டுகளாக நாகூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து தேடி வருகின்றனர்.



 

இந்த நிலையில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத காவல் நிலையத்தை கண்டித்து நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பன்னீர் செல்வத்தின் குடும்பத்தினர் பதாகையை கையில் வைத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த நாகூர் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அனுமதியில்லாமல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஒரே குடும்பத்தை சேர்த்த 5 பேரை போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். 14 வருடத்திற்கு முன்பு காணாமல் போன நபரை கண்டுபிடித்து தரக்கோரி ஒரே குடும்பத்தை சேர்ந்த நபர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகியுள்ள சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது. 





ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண