புனித ஆரோக்கிய அன்னை திருத்தலம் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள கத்தோலிக்க திருத்தலமாகும். இவ்வாலயம் தூய ஆரோக்கிய அன்னையின் பெயரால் கட்டப்பட்டது. 16ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த மூன்று புதுமைகளினால் இங்கே ஆரோக்கிய அன்னையின் பக்தி பரவலாயிற்று. சிறுவனுக்கு காட்சி தந்தது, தயிர் விற்ற முடவனுக்கு கால் நலமடைந்தது, போர்த்துகீசிய மாலுமிக்கு கடும் புயலில் கரை வந்தடைய உதவியது.
இந்த ஆலயத்தின் கட்டிட கலை முகப்பின் திசைகிழக்கு அடித்தளமிட்டது 17ஆம் நூற்றாண்டு இவ்வாலய விழாநாள் கன்னி மரியாவின் பிறந்த நாளும், போர்த்துகீசிய மாலுமி கரை அடைந்த புதுமை நடந்த நாளுமான செப்டம்பர் 8 ஆம் தேதி ஆகும். இவ்வாலயத்தின் மேற்கில் உள்ள விரிவாக்க முகப்பு, பிரான்சு நாட்டில் உள்ள லூர்து நகரில் உள்ள பேராலய வடிவில் கட்டப்பட்டது. பல்வேறு சிறப்புடைய உலக புகழ் பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம் ஆன்மீக தலமாகவும், சுற்றுலா தலமாக விளங்குகிறது.
பசிலிக்கா அந்தஸ்து பெற்றுள்ள பேராலயத்தின் அதிபராக பிரபாகரன் பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் அவரது பதவிக்காலம் நிறைவு பெற்றதையடுத்து புதிய அதிபராக தஞ்சை திருஇருதய பேராலய அதிபராக இருந்த இருதயராஜை வேளாங்கண்ணி மாதா பேராலய அதிபராக தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் நியமித்தார். இதனையடுத்து புதிய அதிபர் வரவேற்பு நிகழ்ச்சியும், பழைய அதிபரை வழியனுப்பும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
திரும்ப பெறப்பட்ட நாகை பெட்ரோ கெமிக்கல் மண்டலம் - தமிழக அரசுக்கு டெல்டா விவசாயிகள் நன்றி
நிகழ்ச்சியில் இருதயராஜ் வேளாங்கண்ணி பேராலய அதிபராகவும் , திருவாரூர் புனித பாத்திமா ஆலய பங்குத்தந்தையாக இருந்த உலகநாதன் பொருளாளராகவும், இமானுவேல்உதவி பங்குதந்தையாகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து பேராலயத்தில் புதிய அதிபர் இருதயராஜ் தலைமையில் திருப்பலி நடைபெற்றது . முன்னதாக பேராலயத்தை சுற்றி மாதா சொரூபம் அடங்கிய தேர்பவனி நடைபெற்றது. இதில் முன்னாள் அதிபர் பிரபாகர், பங்கு தந்தை அற்புதராஜ், உதவிப் பங்குத் தந்தையர்கள் டேவிட்தன்ராஜ், அருள் சகோதரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.