தஞ்சாவூர்: தமிழ்நாடு முதலமைச்சர்  காணொலிக் காட்சி வாயிலாக தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டியில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் ரூ.1.68 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கால்நடை பராமரிப்புத் துறையின் மண்டல இணை இயக்குநர் அலுவலக கட்டடத்தை திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர்  காணொலிக் காட்சி வாயிலாக தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டி ஊராட்சியில் ரூபாய் 1 கோடியே 68 லட்சம் மதிப்பிலான கால்நடை பராமரிப்புத் துறையின் மண்டல இணை இயக்குநர் அலுவலக கட்டடத்தை திறந்து வைக்கும் விழாவில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி, திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை,சந்திரசேகரன், மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன், துணை மேயர் மரு.அஞ்சுகம்பூபதி,  தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் நித்யா ஆகியோர் பங்கேற்றனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கால்நடை பன்முக மருத்துவமனை, ஒரு பெரு மருத்துவமனை, 7 கால்நடை மருத்துவமனைகள், 105 கால்நடை மருந்தகங்கள். 3 நடமாடும் கால்நடை மருந்தகங்கள் மற்றும் 28 கால்நடை கிளை நிலையங்கள் ஆகியவற்றின் மூலம் மாவட்டத்தில் உள்ள 35 இலட்சம் மாடுகள் உள்ளிட்ட 8.09 இலட்சம் எண்ணிக்கையிலான கால்நடைகளுக்கு தேவையான சிகிச்சை, ஆண்மை நீக்கம் விலங்கு பிறப்பு கட்டுப்பாடு அறுவை சிகிச்சைகள், குடற்புழு நீக்கம் செயற்கை முறை கருவூட்டல் மற்றும் முன்னெச்சரிக்கை தடுப்பூசிப்பணி ஆகியவை சீரிய முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மேற்படி அனைத்து பணிகளுக்குமான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு அலுவலகமாகவும், கண்காணிப்பு அலுவலகமாகவும் செயல்பட்டுவரும் மண்டல இணை இயக்குநர் அலுவலகத்திற்கு ஆய்வு கூட்ட அரங்குடன் கூடிய ஒரு புதிய கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர்  மண்டல இணை இயக்குநர் அலுவலக கட்டடம் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மாவட்ட கலெக்டர், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர்  திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் , மாநகராட்சி மேயர், துணை மேயர் ஆகியோர் குத்துவிளக்கேற்றி புதிய கட்டடத்தினை பார்வையிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

நிகழ்ச்சியில் மண்டல இணை இயக்குநர் மரு.பாஸ்கரன், துணை இயக்குநர்கள் மரு.முருகன், மரு.இரவிச்சந்திரன் உதவி இயக்குநர்கள் மரு.தெய்வவிருதம், மரு.சரவணன், மரு.இரமேஷ், மரு.ஏஞ்சலா, மரு.செந்தில்குமார். மரு.விஜயராகவன், மரு.சுகன்யா. மருத்துவர்கள் மரு.செரிப் மருஜனனி, மருபுஷ்பலதா, உதவி செயற்பொறியாளர் செல்வி, உதவிப் பொறியாளர் அரவிந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கால்நடை பராமரிப்புத் துறை, கால்நடைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல், நோய்த் தடுப்பு நடவடிக்கைகள், இன மேம்பாடு, தீவன மேலாண்மை மற்றும் பால்/இறைச்சி உற்பத்தியை அதிகரித்தல் போன்ற பணிகளை மேற்கொள்கிறது. இத்துறை இலவசக் கால்நடை மருத்துவ முகாம்கள், ஆடு-மாடு வழங்கும் திட்டங்கள், மற்றும் கால்நடை காப்பீட்டுத் திட்டங்கள் மூலம் ஊரகப் பொருளாதாரத்தை மேம்படுத்துகிறது. இத்துறை கோழி, பன்றி, முயல், செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு வளர்ப்பை ஊக்குவித்து, கிராமப்புற மக்களின் வருமானத்தை அதிகரிக்கச் செயல்படுகிறது. மேலும் தீவன அபிவிருத்தி, அறிவியல் பூர்வமான கால்நடை வளர்ப்பு முறை குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சி அளித்தல்.கால்நடைகளின் எண்ணிக்கையை முறைப்படுத்தி, பால் மற்றும் இறைச்சி உற்பத்தியைக் கண்காணித்தல் போன்ற பணிகளையும் இத்துறை மேற்கொள்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.