மேலும் அறிய

நீங்கள் இதை செய்தால்... நாங்கள் அதை செய்கிறோம்: துணை முதல்வர் கொடுத்த வாக்குறுதி என்ன? 

திருவையாறு தொகுதியில் போட்டியிடும் துரை.சந்திரசேகரனுக்கு வெற்றி பெற செய்ய வைக்க வேண்டும் என உங்களிடம் வாக்கு கேட்டு வந்துள்ளேன்.

தஞ்சாவூர்: நீங்கள் இதை செய்தால்... நாங்கள் அதை செய்கிறோம் என்று திருவையாறு தொகுதியில் திமுக வேட்பாளர் துரை.சந்திரசேகரனுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஒரு வாக்குறுதியை அளித்தார். அது என்ன தெரியுங்களா?

திருவையாறு தொகுதியில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வந்தாலே தனி சந்தோஷம்தான். மறைந்த முதல்வர் கருணாநிதி நான் டெல்டாக்காரன் என்று சொல்லுவார். அதேபோல்தான் முதல்வர் ஸ்டாலினும் தன்னை டெல்டாக்காரன் என்கிறார். இப்போது நானும்  அதையேதான் சொல்கிறேன். தஞ்சாவூர் என்பது திமுகவின் கோட்டை. இந்த மாவட்டத்தில் 8 தொகுதிகள் உள்ளது. இதில் கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் 7 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது .இந்த முறை 8 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெல்ல வேண்டும். நிச்சயம் வெல்லும்.

இங்கு கூடியுள்ளவர்களை பார்த்தாலே ஒரு எழுச்சி தெரிகிறது, எனவே திமுக இங்கு வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. இங்கு போட்டியிடும் வேட்பாளர் துரை .சந்திரசேகரன் 5 முறை எம்எல்ஏவாக தேர்வாகியுள்ளார், தற்போது 6-வது முறையாக சிக்ஸர் அடித்து அவரை வெற்றி பெற செய்ய வேண்டும். அவரை 60 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் நீங்கள் வெற்றி பெறச் செய்தால், நீங்கள் கேட்பது போல் அவரை அமைச்சராக்க தலைவரிடம் எடுத்துக் கூறுவேன்.

நானும் வேட்பாளராக சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறேன், ஆனால் அதை அடிக்கடி மறந்து விடுகிறேன். கடந்த ஒரு வார காலமாக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறேன். நான் போட்டியிடும் தொகுதிக்கு கூட ஒரு முறை தான் சென்று உள்ளேன், தற்போது இந்த தொகுதியில் போட்டியிடும் துரை.சந்திரசேகரனுக்கு வெற்றி பெற செய்ய வைக்க வேண்டும் என உங்களிடம் வாக்கு கேட்டு வந்துள்ளேன். காரணம் எனது வெற்றியை விட உங்கள் தொகுதி வேட்பாளரின் வெற்றிதான் முக்கியம்.

இந்த திருவையாறு தொகுதியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் எம்எல்ஏவாக இருந்த துரை.சந்திரசேகரன் முயற்சியால் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோல் தற்போது பல கோரிக்கைகளை துரை.சந்திரசேகரன் என்னிடம் வழங்கியுள்ளார், நிச்சயமாக திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் அந்த கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றி தரப்படும்.

அதேபோல் தேர்தல் வாக்குறுதியில் கொடுக்கப்பட்ட அனைத்து திட்டங்களையும் திமுக ஆட்சி அமைந்த உடன் நிறைவேற்றிய தர நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய பாஜக அரசு எவ்வித ஒத்துழைப்பும் தரவில்லை. தமிழகத்துக்கு தர வேண்டிய  நிதியை வழங்க மறுத்து வருகிறது .ஆனால் மீண்டும் இந்தி மொழியை திணிக்க முயற்சிகளை எடுத்து வருகிறது, இதற்கு அதிமுக பொதுச்செயலாளர் கே. பழனிசாமி, ஜாடிக்கேத்த மூடி மாதிரி மோடிக்கேத்த முரட்டு அடிமையாக செயல்பட்டு வருகிறார்.

பதவிக்காக நான் யார் காலில் விழும் அனுபவம் எனக்கு கிடையாது, ஆனால் பழனிசாமி பதவிக்காக ஜெயலலிதா, சசிகலா, டிடிவி. தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது காலில் விழுந்து, அவர்களது காலை வாரி விட்டவர். தற்போது மோடியின் காலை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறார். தமிழகத்தை ஆள பாஜக பழனிச்சாமியை ஒரு ரிமோட்டாக மாற்றி வருகிறது. இந்த முறை டெல்லி அணிக்கும் தமிழகத்துக்கும் நடைபெறும் தேர்தலில் நாம் வெற்றி பெற வேண்டும், இன்னும் 16 நாட்கள் தான் உள்ளது. இதில் ஒவ்வொருவரும் அவரவர் பகுதிக்கு சென்று தங்களுக்கு தெரிந்தவரிடம் திமுக கூட்டணிக்கு வாக்கு சேகரித்து திருவையாறு தொகுதியில் துரை. சந்திரசேகரனை வெற்றி பெறச் செய்தால் நீங்கள் கேட்டது போல் அவரை அமைச்சராக்க தலைவரிடம் எடுத்துக் கூறுவேன். இவ்வாறு அவர் பேசினார். அப்போது திரண்டிருந்த தொண்டர்கள் பலத்த கரகோஷம் எழுப்பினர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

நீங்கள் இதை செய்தால்... நாங்கள் அதை செய்கிறோம்: துணை முதல்வர் கொடுத்த வாக்குறுதி என்ன? 
நீங்கள் இதை செய்தால்... நாங்கள் அதை செய்கிறோம்: துணை முதல்வர் கொடுத்த வாக்குறுதி என்ன? 
தஞ்சையில் ஏஐடியூசி அதிரடி முடிவு: மதச்சார்பற்ற கூட்டணி வெற்றிக்கு வியூகமா?
தஞ்சையில் ஏஐடியூசி அதிரடி முடிவு: மதச்சார்பற்ற கூட்டணி வெற்றிக்கு வியூகமா?
தஞ்சையில் திமுக வேட்பாளர் சண். ராமநாதன் வாக்குறுதிகள் மழையில் மக்கள் உற்சாகம்: முக்கிய அறிவிப்புகள் இதோ!
தஞ்சையில் திமுக வேட்பாளர் சண். ராமநாதன் வாக்குறுதிகள் மழையில் மக்கள் உற்சாகம்: முக்கிய அறிவிப்புகள் இதோ!
தஞ்சையில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்: 8 தொகுதிகளிலும் வெற்றி உறுதி... தஞ்சை மாவட்டம் திமுக கோட்டைதான்
தஞ்சையில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்: 8 தொகுதிகளிலும் வெற்றி உறுதி... தஞ்சை மாவட்டம் திமுக கோட்டைதான்
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold and silver rate today : தங்கத்தின் விலை மீண்டும் குறைந்தது.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்
தங்கத்தின் விலை மீண்டும் குறைந்தது.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்
US Iran War Pakistan: 45 நாட்கள் போர்நிறுத்த வரைவு திட்டம்; குப்பையில் போட்ட ஈரான்; பல்பு வாங்கிய பாகிஸ்தான்; நடந்தது என்ன.?
45 நாட்கள் போர்நிறுத்த வரைவு திட்டம்; குப்பையில் போட்ட ஈரான்; பல்பு வாங்கிய பாகிஸ்தான்; நடந்தது என்ன.?
Trump Iran War: “ஒரு நைட் போதும், மொத்த ஈரானும் க்ளோஸ்.!''; ட்ரம்ப் இறுதி வார்னிங்; இன்று இரவு என்ன நடக்குமோ.?!
“ஒரு நைட் போதும், மொத்த ஈரானும் க்ளோஸ்.!''; ட்ரம்ப் இறுதி வார்னிங்; இன்று இரவு என்ன நடக்குமோ.?!
TVK Vijay: பெரம்பூர் தொகுதியில் விஜய்க்கு கடும் நெருக்கடி.. ஜோசப் விஜய் பெயரில் இத்தனை பேரா?
TVK Vijay: பெரம்பூர் தொகுதியில் விஜய்க்கு கடும் நெருக்கடி.. ஜோசப் விஜய் பெயரில் இத்தனை பேரா?
TVK Vijay: கடைசி நேரத்தில் வேட்பாளர்களை மாற்றிய விஜய் .. எந்தெந்த தொகுதி தெரியுமா?
TVK Vijay: கடைசி நேரத்தில் வேட்பாளர்களை மாற்றிய விஜய் .. எந்தெந்த தொகுதி தெரியுமா?
Mohan G: கர்மா சும்மா விடுமா? - உலகத்தில் முதல் முறை.. திருமாவை சாடிய மோகன் ஜி!
Mohan G: கர்மா சும்மா விடுமா? - உலகத்தில் முதல் முறை.. திருமாவை சாடிய மோகன் ஜி!
Affordable Luxury Cars: சொகுசுக் கார் வாங்கணும்னு கனவு இருக்கா.? ஆடி A4 முதல் மினி கூப்பர் வரை; மலிவான கார்கள் எவை.?
சொகுசுக் கார் வாங்கணும்னு கனவு இருக்கா.? ஆடி A4 முதல் மினி கூப்பர் வரை; மலிவான கார்கள் எவை.?
Seeman: காரைக்குடியில் ஓட்டு கூட கிடையாது.. இவர் வேட்பாளரா? - சீமானை விளாசிய கார்த்தி சிதம்பரம்!
Seeman: காரைக்குடியில் ஓட்டு கூட கிடையாது.. இவர் வேட்பாளரா? - சீமானை விளாசிய கார்த்தி சிதம்பரம்!
Embed widget