தஞ்சாவூர்: திருவையாறு தொகுதிக்கு உட்பட்ட  ஆலக்குடி பகுதியில் திமுக வேட்பாளர் துரை சந்திரசேகரன் குதிரை வண்டி ஓட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

Continues below advertisement

திருவையாறு சட்டமன்ற தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக துரை சந்திரசேகரன் போட்டியிடுகிறார். இந்த நிலையில் திருவையாறு தொகுதிக்கு உட்பட்ட தஞ்சை மேற்கு, வடக்கு ஒன்றிய பகுதிக்குட்பட்ட ரெட்டிபாளையம் நால் ரோடு பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தொடர்ந்து ரெட்டிபாளையம் நால் ரோடு, ஒழுங்கைத் தெரு, சியோன் காலனி,  மேட்டுத் தெரு, வித்யா நகர், அன்னை சிவகாமி நகர், நாகராஜன் நகர், இராமகிருஷ்ணா நகர், தனலெட்சுமி நகர், சௌராஷ்டிரா தெரு, வனதுர்கா நகர், அந்தோணியார் கோவில் தெரு, உப்பரிகை மண்டபம், கரையாம்பட்டி தெரு, அய்யன் திருவள்ளூவர் நகர், மேல மானோஜிப்பட்டி, 8 No.கரம்பை, சிவகாமிபுரம், வண்ணாரப்பேட்டை, ஆலக்குடி, குருவாடிப்பட்டி, மொன்னையம்பட்டி, வல்லம்புதூர், திருமலைசமுத்திரம், அய்யாசாமிப்பட்டி, மாதுரான்புதுக்கோட்டை, மருதகுடி, திருவேங்கடஉடையான்பட்டி, வைரப்பெருமாள்பட்டி, கல்விராயன்பேட்டை, புதுகல்விராயன்பேட்டை, சித்திரக்குடி, குணமங்கலம், சித்தாயல், இராயந்தூர், எல்லைக்கால்தெரு, கள்ளப்பெரம்பூர், 1ம்சேத்தி, கள்ளப்பெரம்பூர் 2ம்சேத்தி, காந்திபுரம், தென்னங்குடி, பிள்ளையார் நத்தம், சீராளூர், சக்கரசாமந்தம், வடகால், மரவணப்பத்து, வெண்ணலோடை உள்ளிட்ட பகுதியில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு பொதுமக்களை நேரில் சந்தித்து திருவையாறு தொகுதி திமுக வேட்பாளர் துரை சந்திரசேகரன் குதிரை வண்டி ஓட்டி வந்து வாக்கு சேகரித்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த அனைவரிடமும் துண்டு பிரசுரங்களை வழங்கினார். 

Continues below advertisement

திமுக அரசின் சாதனைகள், திமுக ஆட்சியில் திருவையாறு தொகுதியில் செய்த நலதிட்டங்கள் உள்ளிட்டவற்றை பொதுமக்களிடம் எடுத்து கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேலும் தற்போதைய வாக்குறுதிகளான மாதம் தோறும் 1,000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை என்பதை இனி 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்துல கல்லூரி மாணவர்களுக்கு தற்போது மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படுவது இனி அது 1,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

இல்லத்தரசிகள் தங்களுடைய வீட்டுக்கு தேவையான வாஷிங் மெஷின், பிரிட்ஜ், டிவி, கிரைண்டர், மிக்ஸி, மைக்ரோவேவ் அவன், இன்டக்ஷன் அடுப்பு போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை புதுசா வாங்க தலா 8000 ரூபாய் மதிப்பிலான கூப்பன் வழங்கப்படும். 

நெல் கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,500-ஆக உயர்த்தி வழங்கப்படும். கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு ரூ.4,500-ஆக உயர்த்தி வழங்கப்படும். பால் கொள்முதல் விலை: லிட்டர் ஒன்றுக்கு ரூ.5 உயர்த்தி வழங்கப்படும். முதியோர் உதவித்தொகை: இனி மாதம் ரூ.2,000-ஆக உயர்த்தி வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை: ரூ.2,500-ஆக உயர்த்தி வழங்கப்படும். மீன்பிடி தடைக்கால நிவாரணம்: ரூ.8,000-லிருந்து ரூ.12,000-ஆக உயர்த்தி வழங்கப்படும். மீன்பிடி குறைவுகால நிவாரணம்: ரூ.6,000-லிருந்து ரூ.9,000-ஆக உயர்த்தி வழங்கப்படும். மகளிர் சுய உதவிக்குழுக்கள் ரூ.5 லட்சம் வரை மானியத்துடன் வங்கிக் கடன் வழங்கப்படும்.

மகளிருக்கு கட்டணமில்லா விடியல் பயண திட்டம் உள்ளிடவற்றை எடுத்து கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திருவையாறு தொகுதி திமுக கோட்டை என்பதை உறுதி செய்யும் வகையில் வேட்பாளர் துரை.சந்திரசேகர் செல்லும் வழி எங்கும் அவருக்கு பொதுமக்கள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.