மேலும் அறிய

வீடு புகுந்து தங்கச் செயின் பறிப்பு; தடுக்க முயன்றவருக்கு நேர்ந்த கதி? தஞ்சையில் பரபரப்பு

நேற்று நள்ளிரவு சுமார் 1:30 மணிக்கு மைக்கேல்நவீன் வீட்டு கதவு தாழ்ப்பாளை சத்தமின்றி உடைத்து கொண்டு டவுசர் மட்டும் அணிந்திருந்த 2 பேர் உள்ளே புகுந்தனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நள்ளிரவில் வீடு புகுந்து மனைவியின் தங்கச்செயினை பறித்த டவுசர் கொள்ளையர்களை தடுக்க முயன்ற கணவர் கம்பியால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே முதல்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி என்பவரின் மகன் மைக்கேல்நவீன் (30). தனியார் கம்பெனி ஊழியர். நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டில், மைக்கேல்நவீனின் அம்மா தவசிமேரி, சித்தி லீமாரோஸ், மனைவி இவாஞ்சலின் ஆகியோர் ஹாலில் படுத்து துாங்கிக் கொண்டிருந்தனர். மைக்கேல்நவீன் தனது மூத்த மகளுடன் வீட்டில் இருந்த ரூமுக்குள் துாங்கிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு சுமார் 1:30 மணிக்கு மைக்கேல்நவீன் வீட்டு கதவு தாழ்ப்பாளை சத்தமின்றி உடைத்து கொண்டு டவுசர் மட்டும் அணிந்திருந்த 2 பேர் உள்ளே புகுந்தனர். அசந்து தூங்கிக் கொண்டிருந்த இவாஞ்சலின் கழுத்தில் அணிந்திருந்த 6 சவரன் தங்கச் செயினையும், அருகில் படுத்திருந்த தவசி மேரியின் கழுத்தில் அணிந்திருந்த இரண்டு சவரன் தங்கச் செயினையும் அறுத்துள்ளனர்.

இதனால் திடுக்கிட்டு விழித்த இவாஞ்சலின் திருடன், திருடன் என்று அலறியுள்ளார். இதனால் அந்த டவுசர் கொள்ளையர்கள் இருவரும் தப்பி செல்ல முயன்றுள்ளனர். மனைவியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த மைக்கேல்நவீன் அந்த டவுசர் கொள்ளையளர்களில், ஒருவனை பிடிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அந்த டவுசர் கொள்ளையன் தன்  கையில் வைத்திருந்த இரும்பு கம்பியால் மைக்கேல்நவீனை சரமாரியாக தாக்கிவிட்டு  வீட்டின் பின்புறம் உள்ள தென்னை தோப்பு வழியாக தப்பி ஓடிவிட்டனர். இதில் தலையில் காயமடைந்த மைக்கேல்நவீனுக்கு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து, பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, டவுசர் கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பட்டுக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

புதிய வரலாறு: தஞ்சாவூர் மாநகராட்சிக்கு முதன்முறையாக பெண் ஐஏஎஸ் ஆணையர் நியமனம்
புதிய வரலாறு: தஞ்சாவூர் மாநகராட்சிக்கு முதன்முறையாக பெண் ஐஏஎஸ் ஆணையர் நியமனம்
டாக் ஆப் தி சிட்டி' ஆன லஞ்ச ஒழிப்பு சோதனை: வல்லத்தில் சிக்கிய கணக்கில் வராத பணம்
டாக் ஆப் தி சிட்டி' ஆன லஞ்ச ஒழிப்பு சோதனை: வல்லத்தில் சிக்கிய கணக்கில் வராத பணம்
கும்பகோணம் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இன்று முதல் கலந்தாய்வு தொடக்கம்: விரிவான கால அட்டவணை வெளியீடு
கும்பகோணம் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இன்று முதல் கலந்தாய்வு தொடக்கம்: விரிவான கால அட்டவணை வெளியீடு
திருச்சி - கரூர் நெடுஞ்சாலை விரிவாக்கம்: விபத்துகளைக் குறைக்க நில எல்லைகளைக் கண்டறியும் பணி தீவிரம்!
திருச்சி - கரூர் நெடுஞ்சாலை விரிவாக்கம்: விபத்துகளைக் குறைக்க நில எல்லைகளைக் கண்டறியும் பணி தீவிரம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
TVK Vijay: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? பாமக கூட்டத்தில் தவெக பேச்சு
தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? PMK கூட்டத்தில் TVK பேச்சு
Sathyaraj: கட்டப்பா கண்ணீர் வடிக்கலாமா? சத்யராஜை கலாய்த்து தள்ளும் தவெக பாய்ஸ் - இணையத்தில் இதான் ட்ரெண்ட்
Sathyaraj: கட்டப்பா கண்ணீர் வடிக்கலாமா? சத்யராஜை கலாய்த்து தள்ளும் தவெக பாய்ஸ் - இணையத்தில் இதான் ட்ரெண்ட்
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
Embed widget